
சிட்டுக் குருவி ஒன்று
என் ஜன்னலுக்கு வெளியில்
கருவேப்பிலை மரக்கிளை மேல்
எதையோ தேடி
அங்கும் இங்கும் தலையை திருப்ப…
”கெட் அப்”
என்றாள் ஆசிரியை
குருவி ஒன்று
இருப்பது தெரியாமல்
வகுப்பு முடிந்து
எட்டிப் பார்த்தேன்
குருவியோடு
ஒரு கருவேப்பிலை பழமும்
தொலைந்திருந்தது…!