ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்
மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

நகரத்திற்குள் அமைந்த நகரம்
நகரத்திற்குள்ளேயும்
அமைந்திருக்கிறது
ஒரு இருள் நகரம்
அந்த இருள் நகரத்திற்குள்
எல்லாம் தனித்தனியாக இருக்கின்றன
கட்டிடங்கள் இல்லை
கூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்
அங்குள்ள குழந்தைகள் அறியவில்லை
குழந்தைகளும் உடை அணிகிறார்கள் என
நிற்க
காகிதத்தில் நடக்கின்றன
அங்குள்ள பள்ளிக்கூடங்கள்
அங்குள்ள மருத்துவமனைகள்
நகரத்தின் உள்ளேயும்
அமைந்திருக்கிறது
ஒரு இருள் நகரம்
அங்கே இருக்கின்றன
பயங்கரமான தெருக்கள்
பலாத்காரம் செய்பவர்கள் உடைத்த கோயில்
மற்றும் திகில் இரவுகள்
அங்கேயுள்ள சாலைகளும்
வாய்க்கால்களும்
கிட்டதட்ட ஒன்றுபோல் இருக்கின்றன
ஆமாம்
இவற்றின் சீரமைப்பு காகிதங்களில்
தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது
அங்கேயுள்ள மக்கள் அறியவில்லை
திட்டங்களைப் பற்றி
ஒதுக்கீடுகளைப் பற்றி
அவர்கள் அறியாமையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்
தலைமுறைகளாக
அவர்களின் சொந்த அதிகாரங்களால்
நகரத்தின் உள்ளேயும்
அமைந்திருக்கிறது
ஒரு இருள் நகரம்
அந்த நகரத்தை
அறியவில்லை அரசாங்கம்
அறியவில்லை அரசு அலுவலகங்கள்
அறியவில்லை அரசியல் கட்சிகள்
அந்த நகரத்தை அறிந்து இருக்கிறார்கள்
தேர்தல்
மோசடிகள்
கலவரங்கள்
மற்றும் மதமாற்றத்தால் மட்டும்
– ஹிந்தியில்: பரிதோஷ்குமார் ‘பியூஷ்’
*****
ஒரு அழிந்து போன மொழியில்
பேசுகிறாள் சின்னஞ்சிறு சிறுமி
அதில்
மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன
உணவுகளின் பெயர்கள் இருக்கின்றன
உயிர்களின் பெயர்கள் இருக்கின்றன
உணர்வுகளின் பெயர்கள் இருக்கின்றன
அவளது மொழியில் வெறுப்போடு
இணைந்த எந்தவொரு வார்த்தையும் இல்லை
அவள் திட்டுகள் கேட்டும்
அழுகிறாள்
ஆனால் வெறுப்பு காட்டுவதில்லை
நாம் அவளிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்
அவளுடைய அழிந்த மொழியை
அவள் பள்ளி போகாத வரை
அவள் நமக்கு கற்றுத் தருகிறாள்.
– ஹிந்தியில்: கிதாப்கஞ்ச்
*****
வெறுமை
தினமும்
காலையில் எழுகிறேன்
எனது தனிமையுடன்
சூரியன் அதுவாகவே இருக்கிறது, வெப்பம் அதுவாகவே இருக்கிறது அதில் மலர் அதுவாகவே இருக்கிறது, மணம் அதுவாகவே இருக்கிறது அதில் சந்திரன் அதுவாகவே இருக்கிறது, குளிர்ச்சி அதுவாகவே இருக்கிறது அதில் நதி அதுவாகவே இருக்கிறது, வேகம் அதுவாகவே இருக்கிறது அதில்.
ஆனால்,
இவை எல்லாம் இப்போது
என்னுடைய எந்தக் காரியத்திற்கு?
எப்பொழுது?
நீ இல்லை
உன்னுடைய நேசம் இல்லை என்னிடம்.
– ஹிந்தியில்: பல்ஜித் கர்வால் ‘பாரதி’
*****