
i)
கை உடைந்த
தலை கிழிந்த
பொம்மையை
பத்திரமாய் வைத்திருக்கிறான்
குடும்பத்தாரால் கைவிடப்பட்ட
மனநோயாளி
**********
ii)
காலப்பனையில்
காவோலையாய் சரசரத்து புலம்புகிறது
என் கடந்தகாலம்.
பச்சை வெளிறி
காற்று கிழித்து
நைந்து போயிருக்கிறது
நிகழ்காலம்.
சுற்றிலும் இருட்டில்
நீர் தேடி மண்ணில்
மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்றது
எதிர் காலம்.
உங்கள் கேலிகளால்
என் நம்பிக்கை பாளைகளைச்
சீவி விடும் போதும்
தருவேன்
அருந்தி மகிழ
அதி அற்புத
கள்.
**********