கவிதைகள்
Trending

கவிதைகள்- ரேவா

கூட்டுப் புழு

சொல் மனம் அவிழாக் கிளை
பற்றிப்
பற
என்கிறது
வேகம்

நிதானம்
பற்றும் கிளையால்
துளிர்க்கும் மனமாகி
அவிழென்கிறது
அர்த்தம்

இரண்டின்
கூடடையும் கனத்தை
கணம் கணமாய் நீட்டிக்கிறது
காற்று

இருப்பதற்கான சாத்தியங்ககளோடு

************

நிழல் அறியும் பொழுது

இயல்புக்குத் திரும்பும் கவலை
வீதிக்கு வருகிறது

தனிமை
வெறிச்சோடிக்கிடக்கும் காலடித்தடத்திற்கு
தலையசைக்கிறது

மனம் நழுவி
விழுந்த இலை

************

அறிதல்

உதிரும் பொருட்டு
மென்சருகில் ஊடுருவும் வெயிலாகிப் பரவுகிறது
நிலம்

மனமோ

துருவேறிச் சிவந்த சொற்களை
கைவசமாக்கி மீள்கிறது
பழுத்து விழுந்த இலைகொண்ட
கர்வத்தோடு

************

வழிப்பாதை

தனிமைக் கிளையை அசைக்கும்
காற்றுக்கு
மரமாகிறது
பிடித்தத்தின் வேர்

நீங்கிடாத நினைவு தைக்க
உதிர்வதைப் பூக்கச் செய்யும்
காற்றேகி வருகிறது

மணமாகி மட்கும்
இருப்பு

************

சொல் மணம்

வெயில் நரம்பிலிருந்து
கொஞ்சமாய் பூக்கிறது
நிழல்

சுமை கூட
நிலம் தாங்கி மீள்கிறது

சின்னஞ்சிறு தனிமை

************

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button