1.மேய்ப்பனின் புல்லாங்குழல் இசை
நான் உன் லிபியில்லா மொழியென காற்றில் பரவுகிறேன்.
ஒரு மந்திரக்கோல் சுழற்றலாக
யுகங்கள் மாறிய மேடையில்
நீ எங்கே?
2.மேய்ப்பன் கையிலிருக்கும் ஆட்டுக்குட்டி
எத்தனை சிலுவைகள் பிதாவே!
முதுகில்
தலையில்
கரங்களில்
வயிற்றில்
கால்களில்
இறக்கிவைத்து இளைப்பாற முடிந்தவை.
இறக்கி வைக்க முடியாத ஒன்றுடன்
உன்னிடம் வருகிறேன்..
அது உன்நெஞ்சில்
குருதியீரத்துடன் எரிகிறது.