
வானத்து மின்சாரக் கம்பிகள்
நாகமென கட்டிப் பிணைகையில்
தெருவில் கரண்ட் இருக்காது.
தகவல் தந்தும் கண்டுகொள்ளாத வயர்மேனுக்கு முழங்காலுக்கு கீழே
எக்காயங்களுமில்லை.
இருந்தாலும்,
‘காந்துது, எரியுதுனு’ அழுகிறாறென்று
EB ஆபிசில் எழுதிப் போட்டிருந்தார்கள்.
கோடையில் சீமெண்ணை ஊற்றி
தன்னை வேகவைத்த மாரியக்காள்
கம்பிகளின் இடைவெளியில்
தீப்பிழம்பாய் விளையாடி
பறப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பனிப்பிரதேசமாக வெடித்திருக்கும்
வெள்ளரிப் பழத்தில்
நாட்டுச்சர்க்கரைத் தூவி
மின்கம்பத்திற்கு படைத்து
கம்பிகளைப் பிரித்துவிட்டால்
கால்களில் குளிரடிக்கும்.