
மிச்சமிருக்கிறது ஒரு நாழி
மிச்சமிருக்கிறது ஒரு நாழி
அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக
அல்லது
‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற
நிகழ்வு ஒன்றுக்காக
மிச்சமிருக்கிறது ஒரு நாழி.
***
அந்த ஓவியம் முற்றுப்பெற
மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்
அதற்கு முன்
அதுவரை கீறப்பட்ட கோடுகள் என்ன செய்யும்?
கீறல்கள் ஓவியத்தில் உடைப்பை ஏற்படுத்தலாம்
அல்லது
தனது காலத்தை குறியீட்டின் மூலம் வெளிப்படுத்தலாம்
அதுவொரு புதிய கவிதையாகவும் மாறலாம்
குறைந்தபட்சம்
வெறுமையான ஒரு வெற்றுக் கீறலாகவும் இருக்கலாம்.
***
அழிவது அத்தனை தேவையாக இருக்கிறது
அழிந்து போவது
அழிப்பது
அழிபாடுகள்
கட்டற்ற அழிவு
அவை
இவை
பொருள்
உயிர், உயிரற்றவை
அல்லாதன
அத்தனை அழிவுகளும் நிகழ்கின்றன/நிகழ்த்தப்படுகின்றன
இப்போதைக்கு ஒரு அழிவு மிகத் தேவையாக இருக்கிறது.
***
ஒரு வேளையுமின்றி
படுத்துக்கிடக்கிறதென் உடம்பு
இந்த மதிய வெயில் பொழுதில்
சூடும் சுரனையுமின்றி படுத்துக்கிடக்கிறது
வேறு வேளை ஏதுமின்றி
பொழுதைக் கழிக்கிறது
சும்மாவென வெறித்துப் பார்த்தபடி
பகலையும், இரவையும் கடத்துகிறது
வெறுமனே மதியப் பொழுது சும்மா இல்லை
ஒரு குட்டித் தூக்கம்
ஒரு வெயிலொழுகும் பொழுது
காலமயக்கத்தில்
சுழல்கிறது.
****
காலக்கவிஞன் இலட்சுமண பிரகாசம் அவர்களின் கவிதை அருமை ????????????