
இரு கோடுகள்.
வெளிர் பிங்க் நிறத்தில் இரு கோடுகள்.
உணர்வு பிறழ்வில் உடல் நடுங்கியது.
பாத்ரூம் கதவை ஓங்கி ஒரு உதை விட்டாள்.
கதவைத் திறந்து மூடிய வேகத்தில் வாஷ்பேசின் கொஞ்சம் நடுங்கியிருக்கும்.
Cool Maya… Cool .
சொல்லிக்கொண்டாள்.
யுவன் படுக்கையில் குப்புறக் கிடந்தான்.
Ishq Mein Dil Bana Hai
IshQ Mein Dil Fanna Hai
ஒரு சுவர் முழுக்க ஆக்ரமித்திருந்த 248 செ.மீ டிவியில் ஷாரூக், நயனிடம்
அர்ஜித்சிங் குரலை இரவல் வாங்கி பாடிக்கொண்டிருந்தார்.
அவனது புட்டத்தில் ஓங்கி ஒரு அடி வைத்தாள்.
பதறி புரண்டெழுந்தவன் அவளைப் பார்த்து, “பேய்.. பேய்” என்று சிரிப்புடன் கத்தினான்.
“ராஸ்கல்..பீ சீரியஸ். இதப் பாரு.”
அதைத் தூக்கி எறிந்தாள்.
”என்னது இது?”
“அதான் நானும் கேக்குறேன்.என்னது இது?”
“ரெண்டு கோடு.”
“முட்டாள்..முட்டாள். நல்லாப் பாரு.”
படித்தான்.
Prega News Device.
“டேய் சைக்கோ, நான் பிரெக்னண்ட்டா இருக்கேன்டா.”
”ஹைய்யா.. கை குடுடி.”
துள்ளிக் குதித்தான்.
“எடு செருப்ப..எச்சக்கல நாயே.”
“என்னாடி இப்டி திட்றே.”
“நான் எவ்ளோ காண்டுல பேசிட்டு இருக்கேன். கை கொடு. டேஷைக் கொடுன்னு.”
“சரி.. சரி.. இங்க உட்கார்.”
உட்கார்ந்தாள்.
“மாயா இப்ப உனக்கு என்ன பிரச்னை?”
“டேய்.. ஏண்டா புரியாத மாதிரியே பேசறே?”
“இப்ப என்னாச்சு? ..கன்சீவ் ஆய்ருக்கே. ஓக்கே. வெல் அண்ட் குட். .பேசித் தீத்துக்குவோம்.”
“இதுல பேச என்ன இருக்கு இடியட்.”
“காலலேர்ந்து இடியட்.. இடியட்டு கூப்புடுறே. இடியட்னு ஒரு நாவல் இருக்கு . தெரியுமா? தஸ்தயேவ்ஸ்கி.”
“இங்க பாருடா.. உன் புத்திசாலித்தனத்தெலாம் உன் ஃபேஸ்புக் பிக்காலிங்ககிட்ட வச்சுக்க. இப்ப இதுக்கு பதில சொல்லு.”
“என்ன பதில்.. பத்து மாசத்துல பாப்பா.”
ஆத்திரத்தில் ஒரு கெட்ட வார்த்தை சொன்னாள்.
“என்னடி இந்த பச்சையெல்லாம் எங்க கத்துக்கிட்ட, உன் ஃபேஸ்புக் ரோமியோக்கிட்டருந்தா?”
“அத விடு.. நீ புரபோஸ் பண்ணினப்ப நான் என்ன சொன்னேன்? ஞாபகமிருக்கா?”
தலையசைத்தான்.
ஸ்டார் பக்ஸ்.
“எனக்கு Double Chocolate Chip Frappuccina . உனக்கு?”
“Double Chocolate Chip Cookie.. அது சரி மாயா. எதுக்கு இங்க வரச் சொன்னே?”
“வெய்ட்.”
மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வந்துச்சா?”
“என்ன?”
” வாட்ஸப் பண்ணிருக்கேன். படி.”
எடுத்துப் பார்த்தான்.
“வாய் விட்டுப் படி.”
“இங்கேயேவா?”
”ம்”
சுற்றிலும் பார்த்தான்.
இருளென்பது குறைந்த ஒளியே.
“ம்.படி”
- திருமணம் செய்து கொள்ள முடியாது.
- சேர்ந்து வாழலாம்.
- Hugs, Kisses and Safe Sex( Mutually accepted days only)
- No kids
- மாத செலவுகள் அனைத்தையும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்
- ஒரு நாள் காலைல நான் சமைத்தால் நீ இரவு சமைக்கணும். ஒருத்தர் சமைக்கிறப்ப இன்னொருத்தர் மத்த வீட்டு வேலையை பாக்கணும். And vice versa.
- மாதம் ஒரு சினிமா.
- வாரம் ஒரு முறை ஹோட்டல்.
- மாதம் ஒரு முறை மளிகை சாமான் பர்ச்சேஸ்.
- வாரம் ஒரு முறை காய்கறி,பழங்கள் பர்ச்சேஸ்.
- ஆறு மாதத்திற்கு ஒரு முறை உள்நாட்டு டிரிப்.
- வருடம் ஒரு International trip.
- டூர் செலவும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- தேவை ஏற்பட்டால் புதிய ஷரத்துக்கள் சேர்க்கப் படலாம் அல்லது மாற்றப்படலாம்.
” Are you made Maya?”
“No. You only wrote in your letter I’m mad at you Maya.”
“That is my way to propose you Maya. சரி, நம்ப என்ன கல்யாணம் பண்ணிக்கப் போறோமா இல்ல கார்ப்பரேட் டீல் போடப்போறமா?”
”Ofcourse.”
“ இதுதான் உன் முடிவா?”
“நிச்சயமாக.”
“ரெண்டு மூணு கண்டிஷனை எடு மாயா.”
“நோ வே.”
யோசித்தான்.
“நான் ஒத்துகலைன்னா?”
“Or else just a collegue. Ball is in your court.”
“ ராட்சஷி”
காற்றில் கலைந்த கூந்தலை சரி பண்ணிச் சிரித்தாள்.
இந்த சிரிப்பு. இந்த சிரிப்புதான்.
அமிழ்தமா?
விஷமா?
இந்த சிரிப்புக்கு அமெரிக்காவையே எழுதிக் கொடுக்கலாம்.
”யோசிச்சு சொல்லுங்க பாஸ். ”
சந்தேகமாகப் பார்த்தான்.
“Take your time.”
கைநீட்டி குலுக்கினாள்.
குல்ஃபி ஐஸ்கள்.
மிகச் சரியாக பதினாறு நாட்கள் கழித்து சம்மதம் தெரிவித்தான்.
மாயா கோபமாகச் சிரித்தாள்.
“என்ன ஃபிளாஷ்பேக் முடிஞ்சுதா? என்ன சொல்றே?”
“பெத்துக்கலாம்.”
“NO. Breach of contract. I’m going to get it terminated.”
” நான் என்ன தப்பு பண்னினேன். இது எப்டி ஆச்சு”
”போன மாசம் உன் பர்த் டே அன்னிக்கி தலை கால் புரியாம விழுந்து புரண்டேயில்ல அன்னக்கிதான். சேஃப்டி இல்லாம நடந்துருக்கே.“
“உனக்கு தெரியும்தானே. அப்ப சொல்ல வேண்டியதுதானே?”
“அதுதான் என் தப்பு . அப்ப நான் நிலைல இல்லேடா.”
“நீதானே சிஸோ கொடுத்தான்னு ஜாக் டேனியல் கொண்டாந்தே என் பிறந்த நாள் பரிசா?”
“ஓசி சரக்கு கிடச்சா எல்லாத்தையும் மறந்துடுவியா?”
தலையசைத்து மறுத்தான்.
”நீயும்தானே கோவாப்பரேட் பண்ணினே.”
”அத விடு .இப்ப மேட்டர்க்கு வா. நான் ஹாஸ்பிட்டல் போறேன். நீ வர்றியா இல்லையா?”
“நோ“
“என் டீலை ஒத்துட்டுதானே லிவிங்க் டுகெதர்ல இருந்தோம்.”
“உன்னோட வாழற ஆசைல ஒத்துட்டேன். இப்ப முடியாதுன்னு தோணுது.”
“Bloody cheater.”
”நல்லா யோசி மாயா.”
”இதுல யோசிக்கறதுக்கு ஒண்ணுமில்லே.”
“ஸோ.”
“ஸோ.. ஸாராவை பாக்கப் போறேன்.”
“வேண்டாம் மாயா.”
அவள் இடை பிடித்து அருகில் இழுத்தான்.
அவன் தலை மயிரைப் பிடித்து இழுத்தாள்.
“ஷ். வலிக்குதுடி, விடு.”
“நீ விடு.”
“இன்னிமே என் மேல கை வைக்காதே.”
“வப்பேன்.”
“வச்ச, கை இருக்காது.”
“ராட்சஷி.”
விலகினான்.
ஜெனி நர்ஸிங் ஹோம்.
ஸாரா உற்சாகமாக வரவேற்றாள்.
“எப்டி இருக்கே மச்சான்.”
“நாட் ஸோ குட்.”
“என்ன வயலின் வாசிக்கறே மாயா. எங்க உன் பேபி டால்.”
“அந்த பேபி டாலால் தான் இப்ப பிரச்னையே.”
“என்னாச்சு?”
சொன்னாள்.
“எத்தனை நாள்?”
”அரவ்ண்ட் ஃபார்ட்டி.”
”என்ன டிசைட் பண்ணிருக்கே?”
“வேண்டாம்.”
“யுவன்”
“வேணுமாம்.”
”கன்ஸிடர் பண்ணலாம்ல?”
”போடி இவளே.”
“ஒரு டாக்டரா நான் இதை ஒத்துக்கலை..”
“ஃபிரண்டா?”
“ஓகே. லீவ் இட் டு மீ.”
“எப்ப ?”
“எப்ப வேணுமுன்னாலூம்.. பட் ஒன் டே ரெஸ்ட் மஸ்ட்.”
மாயா தலையசைத்தாள்.
கதவு தட்டப்பட்டது.
“எஸ்.”
அந்தப் பெண்ணுக்கு அம்பது வயதிருக்கும்.
“ஸாரி டாக்டர்.”
“பரவால்ல.. இவங்க என் ஃபிரண்ட்தான்.சொல்லுங்க.”
இவளைப் பார்த்துக் கொண்டே பேசினார்.
”மூவ்மெண்ட் குறச்சலா இருந்தா எந்த நேரமாயிருந்தாலும் வரலாமா? என் ஹஸ்பெண்ட் ரொம்ப பயப்படறார்.”
“நோ வொர்ரி. எப்ப வேணாலும் வாங்க. ட்யூட்டி டாக்டர்ஸ் எப்பவும் இருப்பாங்க. அவசரம்னா உடனே என்னக் கூப்பிடுவாங்க.”
”தேங்க்ஸ்.”
ஸாரா சிரித்தாள்.
போனபின் கேட்டாள்.
“இவங்களுக்கு எத்தனை வயசிருக்கும்னு நினைக்குற?”
“ஃபிஃப்டி.”
“நோ. ஃபிஃப்டி செவன். கன்சீவ்ட். எய்த் மன்த்”
“ஹவ்?”
“மெடிக்கல் மிராக்கிள்.”
“மேரேஜ் ஆகி 35 வருஷம். காத்திருந்து காத்திருந்து இப்ப developed medical technology மூலமா ஓகேயாகியிருக்கு. கூடவே பயம்.பதட்டம். எக்ஸைட்மெண்ட். இவங்க ஹஸ்பண்ட் ஓவர் எக்ஸைட்டட்.”
“இதுல எதாவது read between the lines இருக்கா?”
சிரித்து தலையசைத்தாள்.
“ஓக்கே. ஃபோன் பண்ணிட்டு வா. எனி டைம்.”
காரை ரிவர்ஸ் எடுக்கும் போதுதான் அவர்களைப் பார்த்தாள்.
அந்த முதிய கர்ப்பிணி பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர் நடந்து கொண்டிருந்தார்.
காரை அருகில் கொண்டு போய் நிறுத்தினாள்.
முதியவர் இவளைப் பார்த்தாள்.
“எப்டி போறீங்க?”
”நம்ப டாக்டரோட ஃபிரண்ட்.’ கர்ப்பிணி கணவரிடம் சொன்னார்.
”மெய்ன் ரோட்டுக்குப் போனா ஆட்டோ கிடைக்கும்.”
“இந்த வெயில்ல எப்டி அவ்ளோ தூரம் போவிங்க. நான் அந்த வழியாத்தான் போறேன் டிராப் பண்றேன்.”
“வேண்டாம் மேடம் உங்களுக்கு எதுக்கு சிரமம்.”
“சிரமம்லாம் ஒண்ணுமில்லே.”
இருவரும் ஏறிக் கொண்டார்கள்.
அந்த பெண் மெல்லிய புன்னகையுடன் தானாகவே சொன்னார்.
“இன்னும் முப்பது நாள் ஓடிட்டாப் போதும்.”
“எல்லாம் நல்லா நடக்கும்.”
“தப்பா நினைச்சுக்கலைன்னா நீங்க எதுக்கு டாக்டரை பாக்க…”
அவர் குறுக்கிட்டார்.
“ச்சு.. என்ன இது அவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு.”
மாயா சிரித்தாள்.
“நானும் உங்க டாக்டரை கன்ஸல்ட் பண்ணத்தான் வந்தேன்.
“எத்தனை மாதம்.”
“நாப்பது நாள்.”
“உடனே ஸ்கேன் பண்ணீடாதீங்க. நல்லா சாப்பிடுங்க.தொடர்ந்து மருந்து எடுத்துக்கோங்க.”
மாயா ஒற்றை நொடி யோசித்தாள்.
“இல்லம்மா..”
“என்ன இல்ல?”
‘”நான் இதைக் கலைக்க வந்தேன்.”
அந்தப் பெண் அதிர்ந்தார்.
கணவரைப் பார்த்தார்.
அவர் தலையசைப்பது கண்ணாடியில் தெரிந்தது.
”ஒரு நிமிஷம் மேடம். காரை நிறுத்துங்க.”
“ஏன் என்னாச்சு.”
“ஒண்ணுமில்லே.நாங்க நடந்து போய்க்குறோம்.”
“இல்ல.. இல்ல.”
“ப்ளீஸ் மேடம்.”
குரல் உயர்ந்தது.
காரை ஓரமாக நிறுத்தினாள்.
இருவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.
மாயா அமைதியாக கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தலையை பெரிதாக உலுக்கிக் கொண்டாள்.
மொபைலை எடுத்தாள்.
“சொல்லு மாயா.. என்ன விஷயம்?”
“இப்ப வச்சுக்கலாமா ஸாரா?”
“ஏன் என்ன திடீர்னு?”
“இப்ப முடியுமா முடியாதா?”
“ஓக்கே.. ஓக்கே இப்ப எங்க இருக்க?”
“உன் தெரு முனைல.”
“வா.”
“வருகிறேன்.”
“யுவன்.”
“ஹெல் வித் ஹிம்.”
“ஒரு வார்த்தை சொல்லிடு.”
தயங்கினாள்.
”Just leave your ego Maya.”
“ஓக்கே.. உனக்காக.”
முதல் ரிங்கிலேயே யுவன் எடுத்தான்.
“என்ன?”
“இப்ப க்ளீன் பண்ணப் போறேன். நீ வர்றியா?”
ஒற்றை நொடி அமைதியாக இருந்தான்.
பின் அழுத்திச் சொன்னான்.
“பிட்ச்.”
பதிலுக்குச் அழுத்திச் சொன்னாள்.
”பாஸ்டர்ட்.”
அவன் அமைதியாக இருந்தான்.
பின் மெல்லிய விசும்பல் கேட்டது.
“ஹே.. யுவா அழறியா என்ன? ..Boys are not supposed to cry. Ok Baby.”
எதிர்முனை அமைதியாக இருந்தது.
“மை டியர் மேன். கூல். லிசன் டு சம் ம்யூசிக். Your favourite Arjith singh .யூ வில் பி ஓக்கே.”
அமைதியாக இருந்தான்.
நாளைக்கே நான் வேற வீடு பாக்க ஆரம்பிக்கிறேன். உனக்கு எதாச்சும் தெரிஞ்சாலும் சொல்லுடா.”
சொல்லி ஃபோனைத் துண்டித்தாள்.
காரை கிளினிக் நோக்கித் திருப்பினாள்.
அவளிடம் காதலைச் சொன்ன யுவனின் ஒளிர்ந்த முகம் ஞாபகத்தில் வந்தது.
பெருமூச்சுடன் ம்யூசிக் சிஸ்டத்தை ஆன் பண்ணினாள்.
I heard that you’re settled down
That you found a girl
And you’re married now
I heard that your dreams came true
Guess she gave you things
I didn’t give to you
Old friend, why are you so shy
அவளுக்குப் பிரியமான அடேல் பாடிக் கொண்டிருந்தாள்.
அவளுடன் சேர்ந்து பாடிக் கொண்டே கார் கண்ணடியில் முகம் பார்த்தாள்.
விழிகள் இரண்டும் நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளைப் போல் தளும்பிக் கொண்டிருந்தன.
**********
This story reveals present generations issues of relationships where the couple is reluctant to become a family. When the couple chose a mutual relationship, which shortly ended with a breakup. The story makes me understand that the reason for their breakup in many ways, and also it reverberates the thought of Maya empathy, what may be the reason she chose for abortions, it could be the gender equality in relationship, uncertainty about relationship of Marriage life, and it could be the socio economic issues and may be more. The narration is simply to put you in someone’s shoes.