
வான் மழையே ஓடி வா!
விண் ணமுதைப் பொழிய வா!
முகிலின் கொடையே ஓடி வா!
மகிழ்ந்தே உலகம் சிரிக்க வா! (வானின்)
அழகிய மயில்கள் ஆட வா
உழவன் வாழ்வு சிறக்க வா
கருகிய பயிர்கள் துளிர்க்க வா
அருகிய உயிர்கள் பிழைக்க வா (வானின்)
மலையும் முகடும் குளிக்க வா
நிலத்தடி நீரைப் பெருக்க வா
பாலையில் பசும்புல் துளிர்க்க வா
சோலையில் புள்ளினம் பாட வா (வானின்)
மண்ணின் வாசம் சுமந்து வா!
கண்மாய்க் குளங்கள் தளும்ப வா!
காய்ந்த நிலங்கள் செழிக்க வா!
நாய்க் குடைகள் பூக்க வா! (வானின்)
புவியில் உயிரினம் நிலைக்க வா
கவியின் சாரல் சிலிர்க்க வா
கொதிக்கும் பூமி குளிர வா
கூத்தாடும் குடம் நிரம்ப வா (வானின்)
அறுசீர் விருத்தில் எளிய சொற்சேர்க்கையில் கருத்துள்ள இனிய பாடல்.
வாழ்த்துக்கள்.