நாடற்றவனின் முகவரியிலிருந்து – மகிழ்நன் பா ம
இங்கே பெரியாரா? அம்பேத்கரா ? என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கையில் பார்ப்பனியம் எப்படி தன்னை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கிறது என்பதையும் அம்பேத்கர் பற்றி இந்துத்துவா கும்பல் பரப்புகிற அவதூறுகளுக்கு அம்பேத்கர் அவர்களின் விளக்கங்களையும் ‘நாடற்றவனின் முகவரியிலிருந்து’ கட்டுரைத் தொகுப்பில் பேசியிருக்கிறார் தோழர் .மகிழ்நன் . மேலும் சீமான் என்கிற தமிழ்தேசிய அரசியல் தலைவர் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றும் இருக்கிறது . பேச்சு நடையில் எளிய மக்கள் வாழ்வில் சாதிய கட்டமைப்பும் அரசு எந்திரமும் நடத்தும் தாக்குதல்கள் பற்றியும், மார்க்ஸை பெரியாரை அம்பேத்கரை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.