பதிப்பகம்
Trending

சங்கிலி – பறவை பாலா

தற்சார்பு வாழ்வியல் குறித்த நூல் | வாசகசாலை

“பெருநகர நெரிசலின் போது, சிக்னலில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திருப்போரை எப்போதாவது கவனித்திருக்கின்றீர்களா? எவர் முகத்திலும் சிறு புன்னகையில்லாமல் ஒரு உக்கிரமான போருக்கு புறப்பட்டுச் செல்லும் வேகமிருப்பதை கவனித்திருக்கின்றீர்களா? ஏனிந்த வேகம்? யாருக்காக இந்த ஒட்டம்? இரை தேடும் பொருட்டு காற்றைக் கிழித்துப் பறந்து செல்லும் பறவைகள் அந்தி சாயும்போது வீடு திரும்புகையில் மனிதர்களாகிய நாம் மட்டும் இலவு காத்த கிளியைப் போல, இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்க்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கின்றீர்களா?

சரி! இதற்கு முன்பு அவற்றையெல்லாம் கவனித்திருந்தாலும், கவனிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. இனி அதற்காக ஒருநாள் ஒதுக்கி கவனிக்க ஆரம்பியுங்கள். “சும்மா ஒருநாளை ஒதுக்கனுமா? இது நல்ல கதையா இருக்கே?”என நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறில்லை. நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் பணமாக மாற்றும் வித்தையைக் கற்றுத் தந்த உங்கள் கல்வி முறையே அதற்குக் காரணம்.

இவற்றைத் தவிர்த்து, ஒரு தாளை எடுத்து நீங்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்த பணத்தை எவற்றிற்கெல்லாம் செலவிடுகிறீர்களென்பதை எழுதத் துவங்குங்கள். பெரும்பான்மை பணம் கல்வி, மருத்துவம், சந்தைக்குப் புதிதாக வந்து சேரும் எந்தவொரு பொருளையும் ஆய்வுக்குட்படுத்தாமல் நுகருதல், கேளிக்கை, நல்லது, கெட்டது இன்ன பிறவற்றிற்கெல்லாம் போக மீதமில்லாமல், உடல்நலம் கெட்டு நின்று கொண்டிருப்பது தெரிந்தால்…

பாவம் நீங்கள் மீளவே முடியாத ஒற்றைவழிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.”

– பறவை பாலா ❤️

#சங்கிலி நூலிலிருந்து..?
#வாசகசாலை_பதிப்பகம் ?

விலை – ரு.130

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

பாலு  – 9962814443

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button