
இறகால் வருடும் நிர்வாணம்
மலரும் பூவின் கணம்
நிலைத்த நிலையில் வீசும் அம்பு
நிற்கும் மாளிகை ஓடும் நதி
எட்டிய தூரத்தை அள்ளிவிடுவது
இயல்பாய் இருப்பதற்கு ஒரு படி மேலே
என் திட்டத்தின் நூறு சதவிதத்தின் அடுத்த திட்டங்கள்
எனக்கான வலையை தயார் செய்வது
வறையறுத்ததை மீறிய பகுதியில் உன் முகம் தெரிவது
ஆழமானதில் கைப்பிடி மட்டும் தெரியும்
அது ஒரு வட்டம் அது தரும் இன்பம் நிரந்தரமல்ல
பிறகு கால்பலகை திறந்து அந்தரத்தில் தொங்கினான்
கில்லட்டினின் க்ரீச்சொலி ஒரு பறவையின்
உயிரை முன்பே பறித்திருந்தது
இருட்டின் சிறை அறை சுவர்கள்
மூச்சை மாற்றி முடிந்தவரை உயிர் காக்கும் நாட்கள்
இரும்பால் அடிபட்டவன் சாவின் முன் இருக்கும் நேரத்தில்
வலியை மீறிய உடல் நிற்கும் கோலம்
பாதி உலகம் உன் பின்னால்
பள்ளி வாத்தியாரின் பிரம்பில் தொடங்கி
வாழும் தண்டனையில் மரணமென அறுந்து விழும்
காற்றில் நீந்துகிறோம்
நாம் இன்னும் தனிதனியாக
** ** **
அவனிடம் இருப்பது
அவன் ஆடும் ஆட்டத்தின்
பொய்யான உண்மைகள்
கடவுளிடம் இருப்பதைப் போல்
இவ்வளவு நிஜங்கள்
போன்ற மர்மங்கள்
அர்த்தமற்று இருக்கிறது
அவன் முன்னே
அவன் அதை மாற்றுகிறான்
குழந்தையைப் போல்
பெரிய மனிதனின் தோரணையில்
அது அழைத்துச் செல்லுகிறது
அங்கே போய் வீழ்கிறான்
பொருட்கள் உடைமைகள்
நிறம் மாற
எல்லோருக்கும் தெரிந்த நிலையில்
தனிமையிலிருந்தான்
அவன் உருவாக்கிய நாகரிகம்
அவனை ஓட ஓட விரட்டியது
அவன் அந்த படகிலே
தஞ்சம் அடைந்தான்.
** ** **