
இனி மண்ணின் சுகந்தமுணர்வேன்
நீங்கள் எதற்காக அழுகிறீர்கள்.
—
எல்லாம் கைவிட்டுப் போனதால்
கால்விட்டுப் போனது
நாற்காலி.
—
வெய்யில் நுழைய
தரையுலர்கிறது
ஈரம் மறைய மறைய ஒரே நடனம்.
—
என்ன உணர்ந்தது
எதை மறந்தது
எதற்காக திரும்புகிறது
இந்த எறும்பு.
—
பித்தேறியலைகிறேன்
காலி பீர் போத்தலுக்குள் நிரம்பியிருக்கிறது
நிலவொளி
—
நிழலில் குளிர்
பழமையான மடாலயம் வருகிறது
புதிய தூக்கம்.
—
துருப்பிடித்த பயணம்
சைக்கிள் ஏறுகிறது
படரும்கொடி