இணைய இதழ்இணைய இதழ் 84கவிதைகள்

ரமீஸ் பிலாலி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

எண்ணும் எழுத்தும்
இரண்டு கண்கள்
தொழிநுட்ப வளர்ச்சியால்
பலருக்கும் இங்கே
பார்வைக் கோளாறு.

****

Re-search

பார்வையிற்
படும்பொருளைக்
கண்ணுள்ளவன்
தேடுவானேன்?
அங்கதன்
தேடுகிறான்
மீண்டும்
தேடுகிறான்.

****

கற்றுத்
துறை போகிய
அறிவு
என்று ஒன்று உண்டு.
துறை கற்றுப்
போகிய அறிவு
என்றும் ஒன்றுண்டு.
உள்ளச்சம்
வையும் பிள்ளாய்!

****

பா_திதாசன்
பகர்கிறார்:
பிள்ளாய்!
கசடறக்
கல்லாய் எனில்
தமிழ் உன்
இளமைக்குப் பாழ்!

****

தீந்தமிழ்த்
துறை புக்கு
இன்று கற்ற பாடம்:
யானே தருமியும்
யானே சிவனும்
யானே நக்கீரனும்.

****

அறிவார் அமுதருந்தி
ஆனந்தம் அடைவார்க்கு
பிரியாணி ஏதுக்கடா?
அரே பாய்!
பிரியாணி ஏதுக்கடா?

****

யாதும் ஊரே
யாவரும் பங்காளி;
பங்காளிகளுக்குள்ளே
பல்லாயிரம் சண்டை.

****

அரசியலின்
எதிர்கால
விண்மீன் ஒன்றுக்கு
ஒரு பால பாடம்:

விசாலப் பார்வையால்
விழுங்குமக்களை
பிறகு?
ஜீரணித்துவிடு.

*******

trameez4l@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button