
உன்னிடம் சொல்ல வேண்டி
சேகரத்த சொற்களை
ஏந்தி நின்றேன்
கண நேரம் தான்
அந்த நேரம்
உமன்கொட் நதியின் பரிசுத்தம் கையில் தவழ்ந்தது
செண்பகப்பூ வாசம் வீசியது
செர்ரீ ப்ளாசம் மலர்கள் நிறைந்த மரம் கண்ணுக்குள் தெரிந்தது
மங்குஸ்தான் பழங்களின் சுவை துலங்கியது
மனமெங்கும் உன்மத்தம்
ஆயினும்
சொல்ல தேவையற்றவை
தெருவில் வீசி விட்டு நடந்தேன்
தெருபுழுதியில் புரண்டன
அய்யோ அதன் மதிப்பென்னவென்று
ஏங்கியவரை உதாசீனம் செய்தன
கையேந்தி கொஞ்ச நினைவரை
வலுகட்டயமாய் புறக்கணித்தது
அரியணை ஏற்றி கொண்டாடு ஆசைப்பட்டவரை
எட்டி உதைத்தது
அவை நேர்மையானவை
நிச்சயமற்ற உன்னதத்தை
தேடிக் கொண்டிருப்பவை
விரைவில் ஒருநாள்
மௌனமாய் தற்கொலை செய்து கொள்ளும்.
—.—–
வன கனவு காணும் சிறு செடி
———————————————-
ஆம் அஃது ஓர் சிறு செடி
யார் பொருட்டோ வீட்டிலுள் வைத்திருக்கிறாய்
மேற்கூரையில் வாஸ்து கண்ணாடியின் சாராள ஒளியையும்
தொலைகாட்சியில் பறவைகளில் ஒலியையும்
காற்றாடாடியின் சர சரக்கும் காற்றையும்
கொண்டது கனவு வனத்தை புனைந்து கொள்கிறது
அந்த செடி சொல்கிறது
என் வனம் காத்திருக்கிறது
பர பரத்த உன் வாழ்க்கையில்
என்றேனும் ஒரு கணம்
நீ அருகே வருவாய்
எனக்கு உயிர் நீர் வார்ப்பாய்
என் செல்ல இலைகளில் மெல்ல தொடுவாய்
(தூசி உனக்கு பிடிக்காதே)
அதை விட நிஜ வனமா பெரியது?
நாளையோ மறுநாளோ
சிறுசெடியின் விழிகள் திறக்கலாம்
விருட்சத்தின் சிறுபகுதியது
விதைக்குளுண்டு வன கனவு
அப்போது மேற்கூரை?
அதை அப்போது பார்த்து கொள்ளலாம்
இப்போது
அஃது ஓர் சிறு செடி
நெருப்பெரித்த வீரநிலம்
———————————————–
பராசக்தி பத்ம வதனி
உனது வீர நிலம் வெல்ல படைக்கப்பட்டிருந்தது
வீர மரணத்திற்கானதல்ல
உன் நிலம் தானே
உழவிட்டேனும்
ஏரை உடைத்திருக்கலாமே?
நெருப்பில் குளிக்கும் முன்னர்
ஒரே ஒரு முறை
கல்பத்ராவின் சுபத்திரை போல
சிரித்திருக்கலாம்
சிறு ஏளன சிரிப்பு போதாத என்ன
ஏர் நொறுங்கிச் சாக
அதுவும் ஆகதென்றால்
வீரம் பொருந்திய நெருப்பில்
எரித்திருக்கலாம் ஏரை
யார் விழ்ந்தால் என்ன
எரிக்காதா நெருப்பு?