இணைய இதழ் 121கவிதைகள்

ச.சக்தி கவிதைகள்

பகலில் மழை 

இரவில் நட்சத்திரங்களின் வருகை 

இப்பொழுது நான் யாருடனாவது 

பேச வேண்டும் 

குழந்தைகள் வரைந்த 

நிலவின் நிழலில்

இளைப்பாறிக் கொண்டிருக்கிறது 

நான் எழுதப்போகும் 

ஒரு கவிதைக்கான சொற்கள் நூறு.

*

”நாளைக்கு வா 

சந்திக்கலாம்” என்கிறாய் 

இன்றைய இரவை 

என்ன செய்து நானே கடப்பது ?

தாகத்துக்கு தண்ணீர் இல்லை 

நீதான் இருக்கிறாய் 

என் நெஞ்சுக்குழிக்குள் அமிர்தமாய்.

*

நீர் வேண்டாம் 

நீ வேண்டாம் 

நிலம் வேண்டாம் 

ஊர் வேண்டாம் 

அதிகாரம் வேண்டாம் 

ஆட்சியில் எங்களுக்கு பங்கும் வேண்டாம் 

வாழ தெரியாத 

எங்களுக்கோ எதுவும் வேண்டாம் 

செத்தால் எரிக்க சுடுகாடு வேண்டும் 

நடமாடும் பிணங்களாய் நாங்கள்.

*

ஜன்னல் வழியாக 

மழை பார்க்கிறேன் 

உள்ளே நனைந்து 

கொண்டிருக்கிறது என் இதயம்.

*

அரசின் வரலாற்று 

புகைப்பட கண்காட்சியில் 

அழுதபடி காட்சியளிக்கிறது 

எங்கள் ஊர் தென்பெண்ணை ஆறு.

*

வாசலுக்கு வாசல் 

முளைக்க தொடங்கிவிட்டன 

அரளிச் செடியும் ரோஜா செடியும் 

எங்கே என் 

வேப்பிலை மரமும் 

முருங்கை மரமும் 

ஞாயிறு தோறும் உணவுக்கு முன்

உருண்டை பிடித்து சக்கரை தினித்து 

தின்னக்கொடுத்ததை நினைவூட்டுகிறது 

ஆயா சொல்லும் கதை ஒன்று.

*

அப்பாவுக்கு ஒரு உருண்டை 

அக்காவுக்கு ஒரு உருண்டை 

அண்ணனுக்கு ஒரு உருண்டை 

தம்பிக்கு ஒரு உருண்டை 

எனக்கு ஒரு உருண்டை 

நாய்க்குட்டிக்கும் ஒரு உருண்டையென 

உருண்டைகளால் நிரம்புகிறது 

இன்றைய‌ இரவுக்கான உணவு 

நாளைய இரவுக்கு 

நாம் என்ன செய்யப் போகிறோம் ?

காலத்தின் கால்களில் 

உருண்டோடுகிறது  உயிர்களின் பசி,

*

நினைவுகளில் நிரம்பி வழிகிறது 

அவர்களது முகம் 

நான் எங்கே இருக்கிறேன் 

அவர்கள் எங்கே இருக்கிறார்கள் 

நான் எங்கேயே 

அவர்களும் அங்கே 

படர்ந்து விரிந்த 

என் மார்பகக் குழிக்குள் நிரம்புகிறது 

அப்பாவின் பழைய புகைப்படம் 

*

இது இரவுக்கான நேரம் 

வானமெனும் செடியில் 

பூக்க தொடங்கும் நட்சத்திரங்களை எண்ணத்தொடங்குகிறேன் 

முடிவுற்றது என் எண்ணிக்கை 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button