இணைய இதழ் 116குறுங்கதைகள்

மழைக்கதைகள் – நிஜந்தன் தோழன்

குறுங்கதைகள் | வாசகசாலை

1

மழை பேஞ்சு ஓஞ்ச இரவில் வழக்கத்திற்கு முன்னரே இருட்டிவிட்டதால் இனிமேலா வந்து இந்த பின்னூசிகள வாங்கப் போறாங்க என்ற நினைப்பில் மொத்தமாக அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு பஸ் ஸ்டேண்ட்லருந்து ஜி.எச்ச நோக்கி மெல்லமா நடக்க ஆரம்பித்தான்.

இந்த மேம்பாலங்கள இந்த பஸ்ஸ்டேண்ட்ல கட்டியிருக்காட்டி இந்த பஸ் ஸ்டேண்ட் மறைவுலயே படுத்திருக்கலாம். பெருமக்களை கருத்தில் கொண்டு போடும் திட்டங்களும், கட்டப்படும் பாலங்களும் சிலரை மட்டுமல்ல; இது போன்ற உதிரிகளையும் வஞ்சிக்கத்தான் செய்கிறது. அடுத்து ஜி.எச்சில் சுகாதார முன்னெடுப்பும் அவனை இன்னும் வஞ்சித்தது. ஆம், இன்று பார்த்து சாக்கடையை தூர்வாரி அந்த மணல்களை காம்பெளண்ட் ஓரத்தில் போட்டிருந்தனர்.

மற்றவர்கள் எல்லாரும் எங்கு போனார்கள்? யோசிக்க நேரமில்லை மழை வெளுத்து வாங்குவதற்குள், இடம் பிடித்தாக வேண்டுமே, எங்கே?! யோசிப்பதற்குள் மழை பிடித்துக் கொண்டது. ஓரமாய் திறந்திருந்த கேட்டின் அருகே ஒண்டுவதற்கு சிறிய இடத்திற்கு சென்று விட்டான், ஒண்டியும் விட்டான். வாரிச் சுருட்டிய தார்பாயை விரித்து விசாலமாக படுத்து கொள்ள ஆசைதான். ஆனா, இங்கே முடக்கிக் கொள்ள மட்டும்தான் இடமிருந்தது.

படுத்தவுடன் தூங்கவா முடிகிறது? பேஞ்சும் தொலையாம, ஓஞ்சும் தொலையாம அவன் முடங்கியிருக்கும் இடத்திற்கு நேரெதிராக மருத்துவமனை அதன் போக்கில் செயல்பட்டுதான் கொண்டிருந்தது. அங்கிருந்தவளுக்கு ஒரு காலுமில்லை, மறுகாலில் விரல்களுமில்லை. விரலில்லா காலில் பிளாஷ்டிக் காயிதத்தை சுருட்டியிருந்தாள். அவள் வழக்கமாக இருக்கும் இடத்தில் யார் கிடப்பது? 

நிச்சயம் அது பெண்ணாக இருக்க முடியாது, பெண் ஒருத்தி பிட்டத்தையும், மார்பு விட்டத்தையும் எப்படி மறைப்பாள் என்பது அவளுக்கு தெரியும்… யுந்தி யுந்தி அந்த இடத்திற்கு முன்னேறும்போது குளிராக இருந்ததாலோ என்னவோ அவளுக்குள் ஏதோ குறுகுறுத்தது. அவள் ஒருவனுடன் கூடி மாதங்களாகி விட்டது. ஜி.எச்சி நிரந்தரயிடமாக இருப்பதாலோ என்னவோ அவளுடன் கூடி நோய் வாங்கி விடுவோமோ என பயத்தாலும் விலகுபவர்களும் இருந்தன.

மழையால் இருட்டியிருந்தால் கூட நேரம் ஆகவில்லை போக்கும் வரத்தும் நடந்து கொண்டுதானிருந்த்து. இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் என்றிருந்தாள். ஆனால், தொடைக்கிடையில் என்னவோ…  நெருங்கினாள். ஆனால், உந்தி உந்திதான் நகரமுடியும் அதனாலென்ன நான் நெருங்கவும், இந்த ஜி.எச் முடங்கவும் சரியாத்தான் இருக்கும்.

அவனை நெருங்கித் தொட்டால், அவளது உடல் சூடு பட்டவுடனே, “அடச்சீ என்னோடது எந்திரிச்சா நான் ஏண்டி இங்க கிடக்கிறன்?”

******

2

ரெட் அலர்ட், ஆரஞ்சாக குறைந்தது அதெல்லாம் அவளுக்கு தெரியவா போகிறது, சொத சொதன்னு பெய்ற மழை தூறலாக குறைந்திருக்கிறது அவ்வளவுதான் அவளுக்கு தெரிந்த வேறுபாடு. ராத்திரி பெய்ற மழையக்கூட அங்கயும் இங்கயும் ஒண்டி சமாளிச்சுடலாம். ஆனா, இப்ப எங்க குறுக முடியும்?

யோசித்துக்கொண்டே ஒரு ரூபா கக்கூஸ் முன்னாடி ஒதுங்கலாம் என்றிருந்தவளுக்கு அங்கே ஒன்றுக்கிரண்டாக ஆட்டோக்களை நிறித்தியிருந்தது கண்டு அங்கிருக்கும் கக்கூஸ் ஒரு ரூபாயிலிருந்து அஞ்சு ரூபாய் ஆன போது பயணிகளுக்கு உண்டான அதிர்ச்சிக்கிணையாக இருந்தது அவளுக்கு. மழையால் பயணிகள் விட்டாப்போதும்னு ஆட்டோவில் ஏறுவார்கள் என்று காத்திருந்தாள்.

பொத்தென்று முதுகில் விழுந்தது ஒரு அடி..

“பாருடா, அடிச்சா லைட்டு ரெட்டாகுது”

“எல்லாம் சென்சாரா இருக்கும்”

அவளை சிக்னல் காட்டும் கருவியால் அடித்துவிட்டு இரண்டு பயிற்சி காவலர்கள், அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். விழுந்தயடிக்கு ஜாக்கெட்டில் மாட்டியிருந்த பின்னூசி பலமாக குத்த சரிசெய்யவேண்டிய தேவையிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

“லைட்ட விடுறா, அங்க மார பாருடா”

“மாரா, நாங்க பை’ன்னு சொல்லுவோம்”

“என்னாவாருந்தா என்ன, எப்படி குலுங்குது பாரு”

“நமக்குதான் ராத்திரி கைவேலை. ப்ளாட்பார கிராக்கிக்கு எல்லாம் நடக்கறது நடந்துக்கிட்டேதான் இருக்கும்”

பேசும் மொழி புரியாவிட்டாலும், எதைப் பார்க்கிறார்கள் என்பது அவளுக்கு புரியத்தான் செய்த்தது. 

“லாத்தியால பொச்சுல ஒன்னு போடுறா”

“பொச்செங்க இருக்கு? எல்லாம் வத்தித்தான் போயிருக்கு”

மீண்டும் மழை பிடித்துக்கொண்டபோது, காவலர்கள் ஒதுங்கிக் கொள்ள, அவள் நனைந்தாலும் போதுமென்று அங்கயே காலை அகட்டி எல்லாம் என் எடம் என்ற தோரணையில் உட்கார்ந்துக்கொண்டாள்.

*****

3

 அவள் புதிதாக கிழக்கிலிருந்து வந்து சேர்ந்தாள். சிகிச்சைக்காக வந்தாளா இல்லை வேலை ஏதும் தேடி வந்தாளா என்ன தெரியவில்லை. ஊரெல்லாம் சுற்றி இந்த மருத்துவமனைதான் பாதுகாப்பான இடமென அறிந்தாள். அவளது மூக்கு அவள் புறப்பட்ட திசையை காட்டிக் கொடுக்க இணை யாருமில்லால், உந்தி உந்தி நடக்கும் மூணு விரல்காரியிடம் அருகே இடத்தை பிடித்துக் கொண்டாள். நெருக்கத்திற்கு மொழியா முக்கியம்? மழை சூட்டிற்கு அணைத்துக் கொண்டார்கள். 

சில முக்கிய குறிப்புகளையும், எந்த இடத்தில் எப்படி முடங்க வேண்டும் என்பதையும், எவனிடம் எச்சரிக்கை என்பதையெல்லாம் எடுத்துக் கூறினாள். மதியம் தொண்டு நிறுவனங்கள் தரும் மிச்சமான உணவை அவளுக்கும் சேர்த்து வாங்கப் போனாள். இருவருக்கும் இடையே மழை பிடித்துக் கொண்டது.

அனுபவத்தால் அவள் கிடைத்த இடத்தில் ஒதுங்கி கொள்ள, புதிதாக வந்தவள் அவளோட இணைய முன் வந்து நடுவில் மாட்டிக்கொண்டாள். அவளின் நீல உடை அழுக்கேறி நிறமாறி இருந்தது. அவள் எதுக்கோ நெளிவதையும், சிறுகூச்சமடைவது இவள் கண்ணிற்கு தெரிந்தது. அப்போதுதான் புரிந்தது, அவள் அணியாது விட்டுவிட்ட உள்ளாடை குறித்து யோசிக்கிறாள் என. ஈரவுடையில் அவள் உள்ளுருப்பும் நனைந்து விடுமோ என பயப்படுகிறாளோ என்னவோ? உறுப்பின் தடங்கைளை இந்த மழை காட்டி கொடுக்குமோ அஞ்சுமவளுக்கு இதன் குறிப்புகளை முன்னமே சொல்லியிருக்க வேண்டும், என்ன செய்ய மழை அங்கேயே நிலை கொண்டது.

*****

4

தொடர்ந்து மூன்று நாட்களாக விடாமல் மழை. விட்டாப்போதும்னு ஓடுறவங்கக்கிட்டயும், ஒதுங்கி நிக்கறவங்கிட்டயும் எப்படி காச கேட்க என்று தன்னோட கையை நீட்டாமலே இருந்தாள். மூணு விரல்தான.. அதுவும் மொன்னையா நெகம் இல்லாம இருந்துச்சு. பாக்குறவங்க கண்ணெல்லாம் அங்கேயே இருப்பதால் கவர் ஒன்னக்கட்டி அதயும் ஒரு ஊனமா காட்சிப்படுத்தக் கத்திருந்தாள்.

நாமளும் கார்ட ஒன்ன வாங்கி கையையோ, காலையோ காட்டி வைத்தியம்னு இந்த ஆஸ்பத்திரிக்குள்ள படுத்தா என்னென்னு நெனப்பு வரும்? கூடுறவன் எவன்கிட்டயாச்சும் நோய வாங்கி செத்தொழியவும் வாய்ப்பு அமையலைன்னு வெசனமும் அவ்வப்போது அவளுக்கு வரும்.

நேத்தடிச்ச மழை கொண்டாந்த குளுரும், அது கொண்டாந்த நெனப்பும் போயும் போயும் குறி எழும்பாதவன் கிட்ட போய் முடிஞ்சுது, இப்ப அவன் கூட இடத்த மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தாள். விரைக்காத குறிய காட்டுன்னு சொன்னாள். அவன் ஏதோ வெட்கமில்ல பட்டான்? 

அவஞ்ச்சொன்னான்னு இன்னைக்கு இன்னைக்கு யுந்தி யுந்தி பின் கட்டிட குப்பை மேட்டுக்கு வந்தாள். மழையில் நனைவது கூட பிரச்சனையில்ல, அது கொண்டாந்து சேர்க்கும் சேறக்கடந்தும், ஊறுன மருந்தடிக்கிற நெடிய கடந்தும் அப்படி ஊம்பக் கேக்குதான்னு அவளுக்கும் தோண்றியது. 

அந்த மேடு முழுக்க பஞ்சும், மருந்து பாட்டில்களும் நெறஞ்சு கிடந்தது, காலூணத்தால் நாம இந்த கட்டிடத்த காவாசிகூட கடக்கலன்னு நெனப்பு வர, சரி இருட்டட்டும்னு காத்திருந்தாள். இருட்ட தொடங்கியதும், வேலை முடிஞ்சு வீடுடைவது போல அந்த மேட்டில் குறுகிக் கொள்ள ஆட்கள் வந்தேறினார்கள்.

வந்ததில் பாதி பேர் மூக்கில் வளையம், ஓ இது ஸ்வச் பாரத்ல்ல. பஸ் ஸ்டேண்ட், ஆஸ்பத்திரி வாசல்ல பலூன், பின்னூசிகள் வித்துட்டு வந்து சேறில்லா சிமெண்ட்ட் தரையில் ஒருவர் மேலொருவர் என குளிருக்கு முடங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் ஏதோ வகையில் உடல் சூடு தேவைதான். இதில் தனக்கானவனையும் கண்டுப்பிடிக்க அப்படியொன்னும் நேரமாகாது எனக் காத்திருந்தாள். பசி என்ற பொதுமொழியால் பகிர்ந்துண்டு படுத்துக் கொண்டார்கள்.

அதிலொருத்தி மாரில் குழந்தையை கட்டி அதை இறுக்கிக்கொண்டே கண் அசரத் தொடங்கினாள். நேரம் இருட்ட இருட்ட உடல் சூடு தகித்தது. மாரில் இறுக்கி கட்டியவளின் அருகே சென்று ஒருவன் துணியை விலக்கப் பார்க்கிறான் என அறிந்து கொண்டாள். அவளுடைய மார்பை தொடத்தான் பார்க்கிறான் என்று கவனித்தவள், அந்த குழந்தையின் உறுப்பில் கைவைத்து மறுகையால் அவனது உறுப்பை ஆட்டத் தொடங்கினான்.

விசுக்கென்ன கையில் கிடைத்த கல்லை யெறிஞ்சு ‘தாயோளி தாயோளி’ என அடிக்க ஆரம்பத்தவளின் கோபத்தின் வேகம் தணிவதற்குள் அப்படியொரு அழுகையை ஆரம்ப்பித்தாள். மழை விடத் தொடங்கியது.

-chenijanthan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button