இணைய இதழ் 121மொழிபெயர்ப்பு கவிதைகள்மொழிபெயர்ப்புகள்

ஜூலி ஈஸ்லி கவிதைகள்

[தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி ]

நாம் தெய்வங்கள்

தெய்வமும் அவளே

கன்னியும் அவளே,

தாயும் அவளே

வானத்தை இருளாக்கும்

மூதாட்டியும் அவளே;

தோற்றமும் ஆக்கமும்

தெய்வமான அவளாலே

பாறைகளைத்     தூசாக

உட்கொள்வாள்பவளும்,

காலை நேரப் பனிமூட்டமும்,

சமுத்திரம் மேலுள்ள நிலவும் அவளே;

கனவு காணச் சொல்லி

சகோதரிகளிடம் முணுமுணுக்கும்

மாய எதிர்வினைத் தென்றலும் அவளே.

உலகின் பண்பும் அவளே;

மூச்சும், நாடியும்

அனைத்து தேசங்களின்

பிறப்பிடமும்,

அனைத்து சகோதரிகளின்

துடிப்பும் அவளே.

தெய்வமும் அவளே,

கன்னியும் அவளே,

தாயும் அவளே,

வானத்தை இருளாக்கும்

மூதாட்டியும் அவளே;

தோற்றமும் ஆக்கமும்

தெய்வமான அவளாலே.

பாதுகாவலரும் அவளே

ஆவலும் அவளே,

வினவுபவளும் அவளே

ஒருவரின் வெளிப்பாட்டிற்கான

மெதுவான அசைவும் அவளே

விளைவும் அவளே.

அநீதிக்கான வருந்தத்தக்க

கூச்சலும் அவளே

கைவிடப்பட்ட குரல்களின்

நாவிலிறுக்கும் வார்த்தைகளும் அவளே;

ஒலியும், அதன் பதிவும் அவளே

தெய்வமும் அவளே.

அடக்குமுறையால்

இருளடைந்தவர்களின் மேல்

ஒளிர்பவளும்

புயல் போற்றப்பட்டவளுமான       

அவளே சொல்கிறாள்,

நினைவில்க்கொள்ளுங்கள் சகோதரிகளே:

நாம் ஆயுதங்கள் அல்ல

நாம் தெய்வங்கள்

நாம் உடுத்தும் நம் உடல்கள் நம் உடமைகள்.

***

கடவுள் பிறப்பாலினத்தவர்

தற்போது கடவுள்

உன் முன் தோன்றினால்,

அவர்களது வேண்டுகோளானது:

அவர்களது வார்த்தைகளைத் திருடி

அவர்களையே காயப்படுத்தத் துணிந்தால்,

அவர்களது முகத்தில் விழிக்க வேண்டாம் என்பதுதான்.

அவர்கள் தங்கள் கூந்தலைக்  கட்டிக்கொண்டு

ஒன்று அல்லது இரண்டு

மேல் பொத்தானைக் கழற்றிவிட்டு

குதிகால் செருப்பினுள்

கால்களை நுழைத்துக்கொண்டு

உங்கள் வெறுப்பு பிரச்சாரங்களைப்

போதிக்கும் பலகைகளை மிதித்தவாறு

அணிவகுத்துச் செல்வார்கள்.

நீங்கள் ஊளையிடும் கடவுள் அழிந்துவிட்டார்

அன்பு இல்லையேல் கடவுளும் இல்லை

கடவுள் அவர்களே

கடவுள் பிறப்பாலினத்தவரே

சில சமயங்களில்

கடவுள் ஒரு சிறுவர்

வளர்ந்து அவர்களாவார்

சில சமயங்களில்

ஒதுங்கிக்கொள்வார்

இணையத்தில் தனது சமூகத்தைத் தேடிக்கொள்வார்

சில சமயங்களில் முழங்கால் உயர பூட்ஸினை

அணிந்துக் கொண்டு

குளியலறையில் தடுக்கி விழுந்து

தனது உயிரைக் கூட அபாயித்துக் கொள்வார். 

***

யோசித்துப்பாருங்கள்

யோசித்துப் பாருங்கள்

தற்பொழுதுதான்

அலைகளிடம் முட்டி மோதி

முழங்காலிட்டு விழுந்தபடியே

கடலைக் கடந்துள்ளீர்கள்

யோசித்துப் பாருங்கள்

உங்கள் குழந்தைகள்

உங்கள் இடுப்பில் கட்டப்பட்டு

பிளாஸ்டிக் போர்த்தியபடி  

காத்துக்கொள்ளப்படும் அவர்களது உயிரானது

புகைப்படங்களாகவும் செய்திகளாகவும்

அனைத்து முதல் பக்கங்களிலும்!

அந்தப் பயணத்தை யோசித்துப் பாருங்கள்

நினைவில் பயத்தின் வீக்கமும், 

மணலில் கால்தடம் பட்டதும்

மனதில் தணிவும்      

இராணுவக் கரம் கொண்டு

உங்களை அணுகுவதையும்,

அவர்களது வலிமையையும் ஆற்றலையும்

உங்களை நோக்கி திசைமாற்றுவதையும்,

யோசித்துப் பாருங்கள்

இத்தனை பலத்தை

வருகையின்போது எதிர்கொள்வதை

யோசித்துப் பாருங்கள்

மூழ்கும் நம்பிக்கையும்

காக்கும் கரங்கள் இல்லாமல்

மிதப்பதையும்; 

யோசித்துப் பாருங்கள்

அந்த ஆபத்தையும்

மாற்றத்திற்கான தவிப்பையும்

யோசித்துப் பாருங்கள்

ஆறு மணி செய்திகளில்

உச்ச நேரலையில்

பொதுமக்களின் முழுப் பார்வைக்கு

உங்களது வேதனைகளும் காயங்களும்

யோசித்துப் பாருங்கள்

இவை யாவுமே உண்மை இல்லையெனில்!   

***********************

ஆசிரியர் குறிப்பு:

ஜூலி ஈஸ்லி (அவள்/அவளது) ஓர் உழைக்கும் வர்க்கக் கவிஞர், ஆர்வலர், பெண்ணியவாதி மற்றும் பிறப்பாலினவாதி. அவரது  படைப்புகள் பரவலாக தொகுப்புகளில் (இணையத்திலும் அச்சிலும்)  வெளிவந்துள்ளன. பின்லாந்து மற்றும் எஸ்டோனியாவில் அவர் தனது கவிதைகளை வாசித்துள்ளார். அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு எஸ்டோனியாவில் வெளியிடப்பட்டுள்ளன. அவரது முதல் கவிதைத் தொகுப்பு 2023-இல், ’தி பிளாக் லைட் என்ஜின் ரூம் பிரஸ்ஸால் வெளியிடப்பட்டது.

YouTube channel: https://www.youtube.com/@julieeasleypoet 

Film poem (skin published by IceFloe Press):  Skin – A Video by Julie Easley – IceFloe Press

X: @JulieEasley

***

-sriram_dc@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button