![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/02/Screenshot-2020-02-03-at-7.26.52-PM-780x405.png)
03-கருமை நிற ரத்தம்
எலும்புகளாலான சிம்மாசனத்தில்
நதிக்கரையில் அமர்ந்து
அதனுள் உதிக்கும் சூரியன்,
பறக்கும் பறவைகளைக் கண்டேன்.
வெண்மேகங்கள் நுரைத்திருந்தன.
என் பிம்பத்தின் மீது
வட்டம் மற்றும் தாள் வடிவக் கற்களை
எரிந்தேன்
அதிலிருந்து வழிந்த கருமை நிற ரத்தம்
மறுகரையில் இருக்கும்
உயர்திணைகள் மற்றும் உயிருள்ள
அஃறிணைகளின் குடிநீரான இந்நதியில் கலந்தது.
மகிழ்ந்து தலைமேலிருந்த
ஒன்பது கிரீடத்தின் மேல்
பத்தாம் கிரீடம் வைத்துக்கொண்டு
வேறொரு நதிக்கரைக்குச் சென்றேன்
“நான்” என்னும் திணைப் பொதுப்பெயருடையன்.