![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/09/PicsArt_09-10-12.37.24-780x405.png)
அவனது கருப்பு, வெள்ளைக் குறுந்தாடியின் முடிமுட்கள் நிகழ்திய
கன்னத்தின் இளஞ்சிவப்பு நிற
சிராய்புகளையும்
முத்தம் என்றே சொல்கிறாள் அவள்!
*** *** *** ***
உனது விழிகள் இரண்டும்.
இரவுப் பறவையின் கூர்அலகைப் போன்றது.
அதில் விழுந்து துடிக்கும்.
எனது சிறு பிம்பத்தை.
விழுங்கி உயிர்ப்பித்து விடு!
இல்லையேல் உமிழ்ந்து விடுவித்து விடு!
இப்படி அகப்பட்டுக் கிடப்பதெல்லாம்.
பேரவஸ்தை.
*** *** *** ***
வாசித்து முடித்து
மூடிவைத்த புத்தங்களிலிருந்தெல்லாம்
இதுவரை யாரும் நுகர்ந்திடாத.
ஒரு நறுமணம் பரவுவதாக,
சொல்பவர்களுக்கு எப்படி தெரியும் இனியா!
ஒவ்வொரு தாள்களையும்
எச்சில்களால் நனைத்துத் திருப்பும்
வழக்கம் கொண்டவன் நீ என!