நங்கென்று விழுவது…!
ஒரு துள்ளு துள்ளி
உடல் மொத்தமும் ஆடியமர்கிறான்
நங்கென்று விழுவது
கல்லோ கடப்பாரையோ
மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
பில்லர்களை…
••••
கதவு திறக்கிற போதெல்லாம்
ஓடிவிடுகிறது
கட்டுக்குள் நிற்பதில்லையென
ஊர் வாய் விழுகிறது
உடல் முழுக்க சொறிந்தும்
உதிரவில்லை காயங்கள்
நாயைக் கொண்டு வந்து
நடுமனையில் வைக்க முடியுமா
மாடிமுழுக்கக் கொத்தனார்கள்…
••••
படபடவென்று ஏறிவிட்டன
சுவர்கள்
மூலையில் வைத்துக் கும்பிட்டு
பூஜை போட்ட செங்கல்
நனைகிறது நட்டமாக..