இணைய இதழ்

  • Mar- 2023 -
    1 March

    பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 05 – கிருபாநந்தினி

    நார்ட்மேன் பச்சைக்காலி நாம் முன்னர் பார்த்த உள்ளான் இனங்களைப் போன்றே தோற்றமளிக்கும் பறவை நார்ட்மேன் பச்சைக்காலி. இது மட்டுமல்ல. பெரும்பாலான கடல் பறவைகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சிறு வேறுபாடுகள் மட்டுமே காணப்படும். நார்ட்மேன் பச்சைக்காலியின் அறிவியல் பெயர் Tringa…

    மேலும் வாசிக்க
  • 1 March

    அகமும் புறமும்; 16 – கமலதேவி

    காலத்தால் சிதையாதது கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து, வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே, பசப்பு அணிந்தனவால் மகிழ்ந, என் கண்ணே ஐங்குறுநூறு: 45 பாடியவர்: ஓரம்போகியார் திணை : மருதம் தோழி கூற்று பாடல்.…

    மேலும் வாசிக்க
  • 1 March

    லாவண்யா சுந்தர்ராஜன் கவிதைகள்

    எலுமிச்சம் பழங்களுக்கு  வயதாவதில்லை 1. எலுமிச்சம் பழமொன்றைக் கையில் எடுத்தேன் நான் சின்னஞ்சிறு வயதில் பார்த்து வியந்தது போலவே சீரான உருண்டை வடிவத்தில் இருந்தது சாறு பிழியும் முன்னர் மெல்ல உருட்டினேன் பால்யத்தில் நான் கண்ட அதே மினுமினுப்புடன் என் முன்னே கண் சிமிட்டியது இரக்கமின்றி இரண்டாய் வகுந்தேன் பதின் வயதில் ரசித்த அதே மணத்தை விரித்தது அதே ஆறு பிரிவான அறைகள் மிக மென்மையாக உள்சதை அல்லிகள் எல்லாமே எல்லாமே அப்படியே இருந்தன முதல் சாறு பிழிய மென்மையாய் அதக்கினேன் அப்போது வடியும் சாற்றின் நிறம் என் முதல் தூமையின் தினத்தில் பிழியப்பட்ட சாற்றின் வண்ணத்தைப் பிரதிபலித்தது கசப்பு கலக்காமல் சாற்றைப் பிழிந்தெடுக்க அரைவட்டத் துண்டங்களை மெல்லத் திருப்பி அல்லிகளை உடைத்துடைத்து சாற்றை ஒட்டப் பிழிந்தேன் கன்னிப் பருவத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கை முன் ஏற்றி வைத்த எலுமிச்சை அகல்களாய் இருந்தன இவ்விரு கிண்ணங்கள் எத்தனை முயன்றாலும் அவை கன்னி பருவத்திற்கு மேல் வளர்வதேயில்லை. *** என் பதின் வயத்தில் சாறு முற்றிலும் பிழிந்த பின்னர் அம்மாவிடம் நான் சொல்வேன் “எலுமிச்சைத் தோலை முகத்தில் தேய்க்கிறேன் முகப்பரு குறையுமாம்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சுஷ்மா கவிதைகள் 

    ஏன் எழுதுகிறாள்? ஏன் எழுத வேண்டும்? என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள். ஊர் கூடுமிடத்தில் இருக்கும் ஒற்றைப் புளியமரம் எனக்கது! அதன் வேர் பிடித்துத் துயில்வேன், கிளை எண்ணிச் சுகிப்பேன், ஏதேனுமொரு பொந்திடை ஜீவன் ஒளித்துத் தேடுவேன், பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சபேஷா கண்ணதாசன் கவிதைகள்

    மரியாதை கிடைக்காத இடத்தில் கால் கடுக்க நிற்கும்போது மூளைக்குத் தெரிகிறது இது அவமானமென இது புறக்கணிப்பென இங்கிருந்து சென்று விட வேண்டுமென்று ! நகரத் தயங்கும் கால்களுக்கோ கடமையின் குணம்..! அன்பின் மனம்..! **** மரம் சரிந்து வீழும்போதெல்லாம் சேர்ந்தே வீழ்ந்திடும்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    சத்யா சொக்கலிங்கம் கவிதைகள்

    மௌனத்தின் சத்தம் என்னை எப்போதாவது நிசப்தத்தின் வழியே கேட்டதுண்டா? நான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் உன் ஒலியை… *** உனக்கெனக் கூறுவதற்கென்றே ஓரிரு வார்த்தைகளை வைத்துள்ளேன் கூறாமலே நெடுநாள் கழிகிறது அவ்வார்த்தைகளின் கணம் கூடிக்கொண்டே போகிறது நிறைகொள்கலனை தாண்டிப் பெருகும்போது என்றாவது…

    மேலும் வாசிக்க
  • 1 March

    வாசிப்பு அனுபவம்; தீபா ஸ்ரீதரனின், ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு – நந்தினி

    கடல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள, ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு  தீபா ஸ்ரீதரன் என்ற படைப்பாளியின் முதல் தொகுப்பு. இதிலுள்ள பதினோரு கதைகளும் அறியாத பாதைகளில் அலைந்து திரிந்து, வகுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் துடிக்கும் மனித மனங்களைப்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    நமக்கான காதலைக் கண்டடைதல் – காயத்ரி மஹதி 

    எலிசபெத் கில்பர்ட் ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய, ’Eat Pray Love’ என்ற நூல் பத்து மில்லியன் காப்பிகள் கடந்து உலகம் முழுவதும் விற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்நூலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் நம் டிஜிட்டல்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    அகத்தின் அல்லாடல்கள் – கா.சிவா 

    கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… ’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற  எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின்  இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில்  பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள்…

    மேலும் வாசிக்க
  • 1 March

    வெள்ளையுடுத்திய தேவ கணங்கள் – ஜார்ஜ் ஜோசப்

    சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில்…

    மேலும் வாசிக்க
Back to top button