கவிதைகள்
-
Jul- 2023 -21 July
மித்ரா அழகுவேல் கவிதைகள்
இரண்டு பாதைகள் என் முன்னே எப்போதும் கலைந்து கிடக்கின்றன இரண்டு தெரிவுகள் எளிதானதும் பொதுவானதும் வில்லங்கமற்றதுமான ஒன்றுடன் வசீகரத்துடன் ஒட்டியிருக்கிறது ஆபத்துடன் நிறைவும் தரக்கூடியதுமான இன்னொன்று பாதுகாப்பும் ஆன்மதிருப்தியும் சுலபத்தன்மையும் சுயமும் எக்காலத்திலும் தலைகீழி இந்தப் பாதையிலேயே நடந்திருக்கலாம்தானே நான் சொன்னதையே…
மேலும் வாசிக்க -
21 July
ராணி கணேஷ் கவிதைகள்
வாழ்வின் பச்சையத்தையும், சருகுகளையும் ஒருசேரக்கொண்ட பெரும் மலைக்காட்டில் தனியே சுற்றித்திரிகிறேன்… தூக்கம் கலைந்த ஒரு மாலையில் ஞாபகப் பெட்டகத்துள் உறங்கும் காலப்பறவை தன் சிறகுகளை மெதுவாய் அசைத்துப் பார்க்கிறது உயிர்த்தலின் பயனாய் உடன்வரும் முதல் முத்தம், காதல் , துக்கம்,துரோகம் என…
மேலும் வாசிக்க -
21 July
நலங்கிள்ளி கவிதைகள்
நில நிலவரம் ஏற்கனவேயிருந்த இடத்தை விற்று மெயின் ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்டலாம் என்பது திட்டம் தரகர் காட்டிய இடம் சதுர வடிவம் அவ்விடத்தை பொறியாளர் ப்ளூ பிரின்டில் முக்கோணமென உறுதியளித்தார் இரண்டாம் தரகரிடம் விசாரிக்கச் சொன்ன பொழுது அந்த இடம்…
மேலும் வாசிக்க -
21 July
குமரகுரு கவிதைகள்
கடினமான காலங்களில் இளைப்பாறுதல் தந்த மலர்களாய்ப் பூத்துக் குலுங்கிய செடி! நான் மகிழ்ச்சியில் ஆடிய அன்று வாடிப் போயிருந்தது. நான் எப்படி அதற்கு ஆறுதல் சொல்வேன்? என் துக்கத்தில் அதற்கு நீரூற்ற மறந்தவனல்லவா நான்? **** என்னிடம் ஒரு உவமை உள்ளது…
மேலும் வாசிக்க -
6 July
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
கழிவறை கவிதைகள் கழிவறையில் மலர்ந்த மலர் கழிவறை பீங்கானின் விளிம்பில் கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து கோலம் இடுவது போல கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன் தொடர்பற்ற துளிகள் விழ விழ புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய் அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை வெறும் வெள்ளை இல்லை அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன நீலம் இணைந்த புள்ளிகள் மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர். ***** நிறங்களின் அரசி கழிவறையில் நீல திரவம் பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம் நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ நீலம் என்பது நிறங்களின் அரசி அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது இல்லையில்லை…
மேலும் வாசிக்க -
5 July
கார்த்திக் நேத்தா கவிதைகள்
அணிகலன் அசையும் அச்சுடர் அழகிய ஓர் அணிகலன் பேரிருட் கழுத்தில் சிறுநல் ஒளிஅசைவு அகம் சூடிக்கொள்ள ஓர் ஒப்பற்ற நகை வடிவிலா விசும்பில் முடிவிலாச் செவ்வணி குளிக்கும் குறத்தியின் குன்றனைய மார்பிடையில் செருத்துச் சிவந்த செங்காந்தள் மாலை. **** வெறும் வாழ்க்கை…
மேலும் வாசிக்க -
5 July
தேவதேவன் கவிதைகள்
கடற்கரை மணல்வெளி காற்று அவர் கண்களின் நீரைக் கொண்டுசென்று மேகங்களில் வைக்கிறது… அவர் இரத்தத்தை உறிஞ்சுகிறது வெயில் தன்னைக் கண்டுகொள்ளாது பாதையற்ற வானில் மிதந்துசெல்லும் மேகங்களைக்கண்டு சூரியனும் திகைக்கிறான். எப்போதும் மழைநோக்கித்தானே அண்ணாந்து கிடக்கின்றன அனைத்து உயிர்களும்? காலம் காலமாய் அவரைக்…
மேலும் வாசிக்க -
5 July
வருணன் கவிதைகள்
மூளைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் சிந்தனைச் சரடை அறுத்த தடையொலி சுடரணைக்கிற அனல் காற்றென ஊமையாக்கிய அலைப்பேசியின் அதிரோசை திக்கற்றுப் பெய்யத் துவங்கிய மழையென அறுந்த சரடு விட்ட இடமும் மறந்து, தொடர்ந்த தடமும் துறந்து அனாதை நாயென அலைகிறது எடுத்து நோக்க…
மேலும் வாசிக்க -
5 July
மௌனன் யாத்ரிகா கவிதைகள்
சிறிய கல் அஃது; முற்றிய சோளத்தினும் சற்று பெரிது; நிரம்பிய குளத்தில் எறிந்து அலை போகும் தூரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்; எனக்கு அடுத்து நின்ற ஒருவன் பெரிய கல்லைப் போட்டு என் சிறிய கல்லின் சிறிய அலையைத் தொந்தரவு செய்தான்; பெரிய கல்லின்…
மேலும் வாசிக்க -
5 July
இந்திரலேகா கவிதைகள்
யாருமற்ற சிலுவை இயேசுவை சிலுவைச்சாவுக்கு தீர்வையிடுகிறார்கள் நான் உன்னிடம் காதலைச் சொல்கிறேன் இயேசு சிலுவை சுமக்கிறார் நீ மறுமொழியற்று திரும்பிப் பார்க்கிறாய் இயேசு முதல் முறை கீழே விழுகிறார் நீ முதல் முறையாய் கை கோர்க்கிறாய் இயேசு இரண்டாம் முறை கீழே…
மேலும் வாசிக்க