கவிதைகள்
-
Oct- 2023 -16 October
ம. இல. நடராசன் கவிதைகள்
எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…
மேலும் வாசிக்க -
16 October
ராணி கணேஷ் கவிதைகள்
சுடுபாறையின் முதல்துளி உனக்கெதுவுமே தெரியவில்லை நான் படிப்பிக்கிறேன் எல்லாம் புரியும் என எண்ணங்களை எடுத்தியம்புகிறாய் கவிதையாய் வாழ்வது கடினம், காதல் ஒரு மாயை, சந்தோஷம் பூசப்பட்ட மிகை, வாழ்க்கை மிகுந்த போராட்டம்… என விளக்கிச் செல்லும் உனக்கு நிகழ்காலத்தின் எதார்த்தமானது சுடுபாறையில்…
மேலும் வாசிக்க -
16 October
ச.சக்தி கவிதைகள்
கண்ணீர் குளம் எல்லோரும் வந்துவிட்டுப் போனார்கள் நான் கடைசியாகத்தான் பார்த்தேன் நான் வந்ததை என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும் அந்த நால்வரின் தோளிலும் நானொரு குழந்தையாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பேன் ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது என் தாயின் கண்ணீர் குளம்.…
மேலும் வாசிக்க -
1 October
குமரகுரு கவிதைகள்
சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…
மேலும் வாசிக்க -
1 October
திருமூ கவிதைகள்
சிகரெட்டு முதல் பேனா வரை எனது அறையில் இருந்தபடியே அலுவல்கோப்புகளைச் சரி பார்த்துத் திருத்தியவாறு நடுவீட்டின் மேற்பரப்பில் சமரன்குட்டி பறக்கவிட்டிருந்த பொம்மை உலங்கூர்தியைப் பார்த்திருந்தேன் எதிர்பாராத விதமாக அது தன் கட்டுப்பாட்டை இழந்து செய்தித்தாள் வாசித்தவாறு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின் சிகரெட்டுப்…
மேலும் வாசிக்க -
1 October
மீ.மணிகண்டன் கவிதைகள்
சொந்த வீடு நடேசன் மிதிவண்டி நிலையத்திலிருந்து மணிக்கு ஐம்பது காசு வாடகையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கண்மாய்க் கரையில் புளியமர நிழலில் குண்டு விளையாடித் திரும்புகையில் ஒரு மணி இருபது நிமிடங்கள் கடந்திருந்தது நடேசன் இரண்டு மணி நேர வாடகையாக ஒரு ரூபாய்…
மேலும் வாசிக்க -
1 October
ரமீஸ் பிலாலி கவிதைகள்
நான் என்னும் உண்மை அறிவு மிகுதலுமில்லை குறைதலுமில்லை. *** கடலுள் மூழ்குபவன் உயர்த்திய ஒரு கை மட்டும் வெளியே காப்பாற்றக் கேட்கிறதா? விடைபெறும் சமிக்ஞையா? அபய முத்திரையா? *** எழுபிறப்பின் முன் உயிரும் மோனம் மெய்யும் மோனம் மோனம் இரண்டன்று. ***…
மேலும் வாசிக்க -
1 October
லக்ஷ்மி கவிதைகள்
என் ஆன்மாவைத் துடைத்து வைக்கிறேன் அழுக்குகள் இல்லை யாரிடமும் யாசிக்காதே என்கிறது இதயம் எனக்கான எதிர்பார்ப்புகளை அழித்துவிடுகிறேன் அன்பைப் பெருகச் செய்கிறேன் என் கணகளை அகல விரித்து இவ்வுலகைப் பார்க்கிறேன் வெண்மையும் கருமையும் நிறைந்துள்ளது எனக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கிறது…
மேலும் வாசிக்க -
Sep- 2023 -18 September
உமா செளந்தர்யா கவிதைகள்
யாருமற்ற பிரகாரத்தில் சுற்றி வருகிறாள் இறைவி கையிருப்பில் இருக்கும் வரங்களை எண்ணிக்கொண்டு. *** நினைவுகளை விழுங்க முடியாமல் புரையேற அருந்த வேண்டுகிறேன் கொஞ்சம் கண்ணீர். *** என் கன்னங்களை ஊதியது பலூன் வண்ணங்களாய் முகப்பருக்கள். *** உள்ளும் புறமும் எப்படி ஓயாமல்…
மேலும் வாசிக்க -
18 September
சவிதா கவிதைகள்
விடைபெற்ற பின் வாழ்வின் மொத்தங்களும் இச்சிறு திரியில் வழியும் ஒளிக்கெனவே ஒற்றை மலரின் ஈரத்துக்கெனவே இன்னும் பொருந்திய உதட்டில் ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு நெடுநேரம் வெளியில் நிறுத்திய பின் உள் அழைத்துக்கொண்ட கனிவுக்கு தெறித்த கடைசி பட்டனுக்கு விம்மும் இதயத்தின் ஆற்றாமைக்கு நீண்ட…
மேலும் வாசிக்க