கவிதைகள்

  • Aug- 2019 -
    31 August
    முருக தீட்சண்யா

    கவிதைகள்- முருக தீட்சண்யா

    இந்த முற்பகல் வெயிலில் அப்பேரிளம் பெண் நிறம் வெளிறிய வாதாம் பூக்களைப் போல பிரகாசிக்கிறாள். அந்நிழற்குடை சற்றே சரிந்திருக்கிறது முதிர்மரத்தில் இற்று விழ காத்திருக்கிறது கிளையொன்று. அழுகிய பழங்களை அவன் ஒவ்வொன்றாய் வீசீக்கொண்டிருக்கிறான். கால்பந்தாட்டம் முடிவுற இன்னும் சில உதைகள் மிச்சமிருக்கிறது.…

    மேலும் வாசிக்க
  • 31 August

    அழைப்பு மணி

    யார் வீட்டில் அழைப்பு மணியை அழுத்தினாலும் கதவைத் திறக்கும் முகம் என்னுடையதாக மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நான் இருப்பது அவர்களுக்கு பயமாக இருக்கிறது திரும்பிச் செல்லுமாறு கூச்சலிடுகிறார்கள் தலைகளை வருட ஆரம்பிக்கிறேன். சிலைகள் செய்வதற்காக வந்திருக்கிறேன் பாறைகளைக் கொடுங்கள் என்றேன்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    பெண்ணே பேசிவிடு

    சிறியன சிந்தியாதான்  வாலி! என்னைப் பற்றிச் சிறிதும் சிந்தியாதான்  இலக்குவன்! சீதை சில காலம்  பிரிந்ததற்கே சிந்தை கலங்கியவன் இராமன்! நான் கம்பனாலும் கவனிக்கப்படாதப் பாத்திரம்! சீதைக்கு அசோகவனம் எனக்கு அயோத்தியே வனம்! நான் ஓவச்செய்தியாய் நின்றபோது என்னைப் பாவச் செய்தி…

    மேலும் வாசிக்க
  • 31 August
    ஶ்ரீதர் பாரதி

    கவிதைகள்- ஸ்ரீதர்பாரதி

    பூரணி பொற்கலைகளின் நிலம் மாமாங்கத்திற்குப் பிறகு நிரம்பித் ததும்பும் குளத்திற்கு கேத வீட்டின் சாயல்   குளக்கரையில் கிடை திருப்பும் கீதாரியின் முகத்தில் பிரேதக் களை கிணற்றடியில் பூத்துக் குலுங்கும் புளியங்கிளைகளில் அமர்ந்து பறக்கும் கொண்டலாத்திகளின் பாடல்களில் இனம் புரியா சோகம்…

    மேலும் வாசிக்க
  • 31 August

    கவிதைகள்- சு.நாராயணி

    எலும்புத்துண்டுகளின் இறைச்சித்துணுக்குகள் கால் தேக்கரண்டி கருணை கூடக் கிடைப்பதில்லை ஆனாலும் கைகள் விண்ணோக்கி இறைஞ்சியபடியே… மறுக்கப்பட்ட உயிர்கள் எண் பூஜ்யத்தை அழுத்தவும் பூஜ்யம் ஒரு எண்ணே இல்லையென்கிறார்களே? இருக்கட்டும்…இவர்கள்கூட உதிரிகள்தானே. 0 0 0….. காத்திருக்கும் நேரத்தில் கென்னிஜியின் பியானோ உங்களுக்காக……

    மேலும் வாசிக்க
  • 31 August

    கவிதைகள் – ம.இல.நடராசன்

    இழக்காதது வனாந்திரம் நிறைந்த ஜீவன்கள் அற்ற ஒரு பெருமலையின் கும்மிருட்டு சிறு குகைக்குள்ளேயே தனிமையோடு தினமும் என் பொழுதுகள் நகர்கின்றன. ஆம், உணர்தலைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்து விட்டேன் என்றே தோன்றுகிறது… அனைத்தையும். மழைத்துளி வானம் பூக்கள் உங்கள் நட்பு…

    மேலும் வாசிக்க
  • 17 August

    கவிதைகள்- கவிஜி

    இறந்தவனின்  ஆடைகள் என்னவாகின்றன ? ************************************************************ இறந்தவனின் ஆடைகள் என்னவாகின்றன ? பதில் வேண்டாத கேள்வியோடு மௌனிக்கும் காலத்தை தாங்கி பிடிக்கின்றன…. ஸ்பரிஸங்களாலும் அணைத்தல்களாலும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன…. ஒவ்வொரு ஆடையிலும் அவன் அணிந்த போதிருந்த வெளிப்பாடு தேங்கி  நிற்கின்றன….. பாதுகாக்கப்படும் பொருள்களோடு…

    மேலும் வாசிக்க
  • 16 August

    கவிதை- மா -னீ

    அததுஅததுவாக இதிது இதிதுவாக இருந்தன பின் அதிதுவாகவும் இததுவாகவும் இருக்கலாயின மீண்டும் மாறின இப்போது அததுஅததுவாகவும் இதிது இதிதுவாகவும் இருக்கின்றன.   என் இனமானாலும் எனக்கு எவரும் எதிரிகள் தான் . ஆடென்ன மாடென்ன கோழியென்ன குயிலென்ன மானென்ன மனிதனென்ன யார்…

    மேலும் வாசிக்க
  • 16 August

    கவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்

    01 ஈழத் தாயே ஈன்றாய் நீயே அறிவைத் திரட்டும் நூலகத்தை அன்று கூளச் சாக்கடை யெரித்தது உன்னைத் தீயே தின்றது தாயகத்தை தாயகப் பெருமையைத் தரணியிற் கொன்று தகனம் செய்தவர் யாரு? எங்கள் வாயகம் ஒலித்த வாசிக சாலையை விழுங்கிய தீயே…

    மேலும் வாசிக்க
  • 16 August

    கவிதைகள்- இரா.கவியரசு

    அணுக்களால் ஆனது இவ்வுலகம் ••••••••••••••••••••••••••••••••••••••••••••••• எரியும் மீன் வயிற்றுக் குருதியில் வறுக்கப்பட்ட குட்டிக் கருவாடுகள் கப்பலில் ஏற்றுமதி செய்ய உகந்தவை. அதோ! கப்பலில் அசையும் கொடி கரைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. உப்பில் அரிக்கப்படாத துப்பாக்கி ரவைகள் மீன்களின் வயிற்றிலிருந்து  எடுக்கப்பட்டு பழைய…

    மேலும் வாசிக்க
Back to top button