சிறுகதைகள்

  • Jan- 2026 -
    8 January

    புரியுது மேடம் – மனுஷி

    மதிய உணவு சமைப்பதற்காகக் கண்கள் கசிய வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தேன். எனது பூனைக்குட்டிகள் இருவரும் கண்கள் பனிக்க நான் வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது…’…

    மேலும் வாசிக்க
  • 8 January

    விட்டில் பூச்சிகள் – லாவண்யா சுந்தர்ராஜன்

    வீட்டு வெளிவாசலில் காம்பவுண்ட் கேட் ஓட்டி ஒரு ஜோடி செருப்பிருப்பதைப் பார்த்ததும், “வேணு வந்துட்டா போல” என்றார் பெரியவர். குலதெய்வ கோவிலுக்குப் பெரியவரும், அவர் மகன் விஷ்ணுவும் மருமகள் கனகாவும் போய்விட்டுத் திரும்பியிருந்தனர். பெரியவர் அப்படிச் சொல்லும் முன்னரே, வண்டியை விட்டு இறங்கியதுமே,…

    மேலும் வாசிக்க
  • 8 January

    அஸீர் – இத்ரீஸ் யாக்கூப்

    இன்றும் பணி நிமித்தமாக இரு வேறு எல்லைகளுக்குச் சென்றிருந்தேன். இது கொஞ்சம் குறைவுதான். பெரும்பாலும் ஒரே நாளில் நான்கைந்து இடங்களுக்குக் கூட எந்திரம் போலச் சுழன்று வர நேரிடும்! பாலிடெக்னிக் முடித்து விட்டு இரண்டாண்டுகள் உள்ளூர் அனுபவத்தோடு ஒரு மெக்கானிக்காக இருபத்தி…

    மேலும் வாசிக்க
  • 8 January

    காலாதீதம் – அருணா சிற்றரசு

    சரியாக மாலை ஆறு மணிக்கு கோவிலின் கிழக்கு வாசல் முன் கார் நின்றது. தென்காசிக்குச் செல்வது என்பது என் திட்டத்தில் இல்லை. ‘காசி விஸ்வநாதரைப் பார்க்கிறாயா?’ என்று அவன் கேட்டதுமே மனம் ஒப்புக்கொண்டது. அவனுக்கு என் மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது…

    மேலும் வாசிக்க
  • 8 January

    விழித்திரை – அபுல் கலாம் ஆசாத்

    மூன்றாவது ஊஞ்சலில்தான் பேத்தி ஆடிக்கொண்டிருந்தாள், இப்போது ஊஞ்சலில் அவளைக் காணவில்லை. ஒரு சுற்று நடந்து முடிப்பதற்குள் எங்கு போனாள்? ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தொலைவிலிருந்து உற்றுப் பார்த்தேன். இரண்டு சிறிய கரிய பஞ்சுப்பொதிகள் விழிக்குள் பறந்து காட்சியைத் தொல்லை செய்தன. அவை…

    மேலும் வாசிக்க
  • 8 January

    ராஜராஜ சோழன் – ஆத்மார்த்தி

    சித்தரஞ்சன் மெல்ல நடந்தான். இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. மதுரை முன்பிருந்தாற் போல் இப்போது இல்லை. நிறைய மாறிவிட்டது எங்கு பார்த்தாலும் பாலங்கள். எல்லாப் பெரிய கட்டிடங்களையும் ஏற்கனவே இடித்துக் கட்டி விட்டார்கள், அல்லது தற்போது கட்டட வேலை நடந்து…

    மேலும் வாசிக்க
  • 7 January

    அந்திமாலை நேரங்கள் – தேவவிரதன்

    எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு அடையாறில் ஓர் முக்கியமான பகுதியில் இருக்கிறது. இன்று, முக்கியமான பகுதி என்றால், அருகே ஏகப்பட்ட கடைகளும், வாகன, மற்றும் மக்கள் போக்குவரத்து இருந்தாக வேண்டும். நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் குடி வந்த ஒற்றை படுக்கை…

    மேலும் வாசிக்க
  • 7 January

    பழகத் தெரிந்த மனமே…! – ஷைலஜா

    “கார்த்திக், உனக்கு ஒரு குட் நியூஸ். நேர்ல கலெக்டர் ஆபீஸ் வாசலுக்கு வா. சொல்றேன் என்ன?” என்று மகிழ்ச்சி கலந்த படபடப்பான குரலில் சொல்லிவிட்டு சுமதி போனை வைத்து விட்டாள். கார்த்திக்கிற்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னவாக இருக்கும் என்று மண்டை குடைய…

    மேலும் வாசிக்க
  • 7 January

    பித்ருக்கள் கடன் கொடுப்பதில்லை – கே.ரவிஷங்கர்

    சுரீர்ரென்று மண்டையில் மின்னல் போல வலி ஊடுருவியதும் உடம்பு உதறியது அம்பிகா குமாரிக்கு. அதே வேகத்தில் உஸ்ஸ்ஸென்று பல்லைக் கடித்துத் தலையில் கை வைத்துக் குனிந்தபடித் திரும்பிப் பார்த்தாள். ‘விஷ்க்’ – காக்கை பறந்து வந்து கொத்திய அதே வேகத்தில் இறக்கையைப்…

    மேலும் வாசிக்க
  • 7 January

    வேலை – ராம்பிரசாத்

    ஜன்னல் வழியே மொட்டை மாடிக்கு மேலாக அந்த பறக்கும் வாடகை மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடைமேடை மெல்ல கீழிறங்கியது. ப்ரியா வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு மாடிப்படியேறி மொட்டை மாடி அடைந்து படியேறி வண்டிக்குள் அமர, மகிழுந்து அவளை ஏந்திக்கொண்டு,…

    மேலும் வாசிக்க
Back to top button