சிறுகதைகள்
-
Mar- 2024 -16 March
பவியக்காவும் நானும் – வாசு
அது ஒரு கார்த்திகை மாத வெள்ளிகிழமை. அன்று நான் சூரியனுக்கு முன்பாகவே எழுந்து விட்டுருந்தேன். சமீபமாகவே நான் முன்னெழும் பழக்கத்திற்கு வந்திருந்தேன். பெரிய விஞ்ஞான விசயம் இல்லை. விடலைப்பருவ கோளாறுதான். நான் இருக்கும் வீட்டிலிருந்து சரியாக எதிர்ப்புறம் மூன்றாவது வீடு அது.…
மேலும் வாசிக்க -
16 March
பொருத்தம் – சௌம்யா
“வாங்க ஸார், நல்லா இருக்கீங்களா? அம்மா நல்லா இருக்காங்களா?” அவன் வருகையை எதிர்பார்த்திருந்த என் முகம் என்னை அறியாமல் மலர்ந்தது. “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” “அப்படியே போகுது ஸார். இருங்க, புதுசா வந்திருக்கற ப்ரொஃபைல்ஸ் காட்டறேன்.” அருகிலிருந்த அலமாரியிலிருந்து…
மேலும் வாசிக்க -
16 March
பிறைகள் – இத்ரீஸ் யாக்கூப்
ஊரெல்லாம் தலைப்பிறை ஜோரு அதாவது ரமலான் மாதத்திற்கு முந்திய நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டிருந்தன. நோன்பை வரவேற்கும் பொருட்டில் அந்த நாளை தலைப்பெருநாள் என்றும் அழைப்பதுண்டு. அதையொட்டி பெரும்பாலான வீடுகளில் சோறும் ஆட்டுக்கறி இறைச்சி ஆனமும் (குழம்பும்) சமைக்கப்பட்டன. இருக்கப்பட்டவர்கள் புது உடைகள்…
மேலும் வாசிக்க -
16 March
பிரகிருதி – உஷாதீபன்
என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…
மேலும் வாசிக்க -
16 March
தோன்றுதலும் மறைதலும் – யுவன் சந்திரசேகர்
சற்று முன்தான் நடந்ததுபோலப் பசுமையாய் இருந்தாலும், நிஜமாக நடந்து பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. தேதிகூடத் துல்லியமாக நினைவிருக்கிறது. ஆனால், அதெல்லாம் இப்போது சொல்லவிருக்கிற சம்பவத்துக்கு நேரடியாய்த் தேவைப்படாத விவரங்கள்… என்னடா இது, முடியெல்லாம் இப்பிடிக் கொட்டிப்போச்சு! கிழவனா ஆயிட்டியேடா! என்று வியந்தபடி…
மேலும் வாசிக்க -
2 March
ஹலோ…. – அகிப்ரியா
அந்தச் சத்தம் என்னை இன்னமும் கடுப்பேற்றியது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனால், அந்த அழுகை அடங்கியபாடில்லை. விடாமல் கேட்கும் அழுகைச் சத்தம் என் மண்டைக்குள் என்னவோ செய்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. தலைக்குள் ஏதோ நுழைந்து குடைந்தது. குழந்தையை…
மேலும் வாசிக்க -
2 March
வடு – பாஸ்கர் ஆறுமுகம்
அந்த மனிதர் மிகவும் களைத்திருந்தார். பல நாட்களாக மழிக்காத தாடி மீசையில் அவரின் சோபையான கிழட்டு முகம் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தது. தூக்கம் காணாத கண்கள் கண்ணாடி ஃபிரேமுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. மஞ்சள் கரையேறிய அரைக்கை சட்டையொன்றை அணிந்திருந்தார். அது…
மேலும் வாசிக்க -
2 March
நண்பனிருந்தான் – கா.ரபீக் ராஜா
அன்பு நண்பனை இப்போதுதான் கழுத்தை நெரித்துக் கொன்றேன். கழுத்தை என் கைகளால் இறுக்கும்போது அவன் காட்டிய மறுப்பு படிப்படியாக குறையத் தொடங்கியபோது ஒரு தெய்வீகமானச் சூழலில் மனம் லயித்தது. என் கைகளை அவன் கைகள் உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டிருந்தான். பின்…
மேலும் வாசிக்க -
2 March
பள்ளிக்கூடத்திற்கு அப்பால் – த.குணசுந்தரி
பரிட்சை அட்டையால் கீழ்பாகம் அடைக்கப்பட்ட உடைந்த தகரக்கதவு கொண்ட கழிவறைகளை ஆசிரியரின் கட்டளைப்படி நான் பூட்டிக் கொண்டிருக்கும்போதே மணி அடித்தது. அவசரமாய் ஓடிச்சென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். ‘நீராரும் கடலுடுத்த’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த கட்டிடங்களுக்கு நடுவில்…
மேலும் வாசிக்க -
2 March
ஆயிரம் குற்றவாளிகளும், ஒரு நிரபராதியும்..! – சகா
காவல் நிலையத்தின் வாசல் தள்ளி ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு பதட்டமாக இறங்கினேன். எத்தனையோ தடவை இதே சாலை வழியாகச் சென்று வந்திருந்தாலும் இத்தனை நாள் பார்ப்பதற்கு சாதாரணமான, கண்களுக்குப் பழக்கமான ஒரு கட்டிடம் போலத் தோன்றிய இந்த…
மேலும் வாசிக்க