சிறுகதைகள்

  • Dec- 2022 -
    1 December

    ஊர் திரும்புதல் – குமாரநந்தன்

    தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஜெயக்குமாருக்குள் தீவிரமடையத் தொடங்கியது. அவர் ஒரு சினிமா நடிகர்.  பல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் சமீபத்தில்தான் நடிகராக அறிமுகமானார்.  அதற்குள்  அவருடைய வாலிபம் முடிந்திருந்தது. முதலில் அவர் டைரக்டராக விரும்பித்தான் வீட்டை விட்டு வந்தார்.…

    மேலும் வாசிக்க
  • 1 December

    கொக்கி – உஷாதீபன்

    விஜயாதான் இவனை வளைத்துப் போட்டாள். இவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. பாடத்துல கொஞ்சம் சந்தேகம்…நாகுட்டக் கேட்டுக்கட்டுமா? என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். நாகராஜன் என்ற என் பெயரை எல்லோரும் அப்படித்தான் சுருக்கிக் கூப்பிடுவார்கள். நாகு, நாகு என்று அழைப்பது எனக்குப் பிடிப்பதில்லைதான். இனி…

    மேலும் வாசிக்க
  • 1 December

    நிமிர்ந்தவாக்கில் மிதப்பவள் – பத்மகுமாரி

    “யம்மா… யம்மா….” வானில் விழிக்கத் தொடங்கியிருந்த பறவைகளின் கீச்சொலியோடு சாரதா ஆச்சியின் ஓங்காரமான முனகல் சத்தமும் எங்கள் வீட்டு வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது. நேற்று இரவு நான் விடுமுறைக்காக வீடு வந்து சேர்ந்த பொழுது, “ஒழுங்கா சாப்பிடுனா கேட்டாதான. மெலிஞ்சு…

    மேலும் வாசிக்க
  • 1 December

    பிறன் – மோனிகா மாறன் 

    தெற்குப்புறம் வரிசையாக மங்களூர் ஓடுகள் வேயப்பட்ட ஒன்பது வீடுகளும், எதிர்ப்புறத்தில் நடுவில் அழகான சிமெண்ட் வளைவுகளுடன் கூடிய ‘வனத்துறை குடியிருப்பு’ என்ற கல்வெட்டும், அதன் இரு புறங்களில் ஏழு வீடுகளும் கொண்ட அந்தத் தெரு சாதாரணமானது தான். அது ஒரு சின்ன…

    மேலும் வாசிக்க
  • Nov- 2022 -
    16 November

    பரகாயப் பிரவேசம் – பிரியா கிருஷ்ணன்

    தனக்கு முன்னால் நீட்டப்பட்ட பையை எட்டிப்பார்த்த வேலப்பர், அதில் சில நகைகளும் கசங்கிய பணத்தாள்களும் இருப்பதைக் கண்டு மெதுவாய் நிமிர்ந்துப் பார்த்தார். எதிரே நின்றிருந்த ராசம்மாவின் முகம், அழுது அழுது வீங்கியிருந்தது. இவர் பார்த்ததும் மீண்டும் அவளுக்கு கழிவிரக்கம் அதிகமாகி பொத்துக்கொண்டு…

    மேலும் வாசிக்க
  • 16 November

    ஒரு நாளில் உலகம் – நான் விஜய் 

    அன்று மிகுந்த சோர்வு. மனம் ஒரு நிறைவில் இருந்தாலும் எதோ கொஞ்சம் உடனே அசந்து தூங்க வேண்டும் என்பது போன்ற உணர்வு விஜய்க்கு. தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தான், மனம் போல வேலை…

    மேலும் வாசிக்க
  • 16 November

    பூரண பொற்கொடி – சுரேஷ் பரதன்

    பொம்பளைக்கு எதிரின்னு யாரும் வெளியிலேர்ந்து தனியா வரத் தேவையே இல்லை. அவளை பொம்பளைன்னு சொல்ல வைக்குற அந்த உடம்பு ஒன்னே போதும். வழி நிறைய சம்பாதிச்சு வச்சுருக்குற எதிரிங்க ஒவ்வொருத்தரா வர்ற மாதிரி வயசு ஏற ஏற இந்த உடம்பு படுத்துற…

    மேலும் வாசிக்க
  • 16 November

    ஏரியம்மா – குமரகுரு 

    கட்லா மீன்களின் பிளாக்கள்* நீருக்குள் மின்னுவதை விட கூடையில் துள்ளுகையில் அதிகம் மின்னுவதாய் தெரியும் கண்களைப் பெற்றவன் நீருக்குள்ளிருந்து துள்ளியபடி நெளிந்தான்!! வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் தண்ணீர் சுண்டிப் போயிருந்த ஏரியில் ஆங்காங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும் நீரில் தப்பித்துப்…

    மேலும் வாசிக்க
  • 1 November

    கண்ட கனவு – கா. ரபீக் ராஜா

    எப்போது திருமணமானது என இருவருக்கும் பரஸ்பரம் நினைவிலில்லை. இவள் மட்டும் திருமணமான அன்றைய நாளை காலண்டரில் இருந்து கிழித்து வைத்துள்ளாள். வருடத்தில் ஒருநாள் அதை எடுத்துக்காட்டுவாள். அதை பார்க்கும் அவன் காறை படிந்த பல் கொண்டு சிரித்துக்கொள்வான். பதிலுக்கு அவளும் சிரித்துக்கொள்வாள்.…

    மேலும் வாசிக்க
  • 1 November

    கூடுதலாக ஒரு தம்பியும் – பத்மகுமாரி

    “இறங்கிட்டு கூப்பிடு, நான் எப்படி வரணுன்னு சொல்லுறேன்”  “சரி” ஜன்னல் வழியே உள்ளேறி வந்து முகத்தில் சூடேற்றியது, வெக்கை கலந்த காற்று. கூடவே கொஞ்சம் புழுதியும். வெக்கையோ புழுதியோ, நான் முதன் முதலில் சுவாசித்த வெளியூர் காற்று என்கிற வகையில், இந்த…

    மேலும் வாசிக்க
Back to top button