![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/06/prasath-780x405.jpg)
விருப்பமற்ற திருமணத்திலிருந்து மீண்டு வருவதெற்கென நல்ல நேரம் அமைவதில்லை. முன் வருடங்களிலிருந்து அவள் அதை தான் முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் , அவளின் இருவது வயதிலிருந்து . ஆனால் முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்த போதும் அவள் பாதி மனம் கொண்ட திண்டாடத்திலே இருந்தாள் . உண்மையில் ,அது ஒரு வேடிக்கைத் தான் . உத்திர பிரதேசத்தின் சிறு மூலையிலுள்ள அந்த நகரத்திலிருந்து தொலைந்து போகாமல் அவளால் எளிதாக ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல முடியும் . ஆனால் வாழ்க்கையென்ன ஒரு ஆங்கில படம் போல் அவ்வளவு சுலபமா ?அங்கு தான் ஒரு பெண் வெவ்வேறு நாடுகளில் அவளுக்கு பிடித்த உணவினை ருசிப்பாள் , சாமி வணங்குவாள் , காதலிப்பாள் .
இரவு உணவுக்கு சப்பாத்தி உருட்டும் போது அந்த எண்ணங்கள் அவளை விட்டு துண்டித்தது . ஒரு வேளை அதனால் என்னவோ அவளால் அந்த திருமண பாய்ச்சலில் இருந்து மீண்டு வர முடியவில்லை. நிச்சியமாக அவள் திபுவிற்காக தங்கியிருந்தாள் . திபுவின் பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென தனக்கு தானே சத்தியம் செய்திருந்தாள் .ஆனால் அது திபுவின் வேலை வரை நீண்டது . சரி , திபுவின் கல்யாணம் வரையென தொடர்ந்தது . திபு அனைத்து எல்லைகளையும் கடந்திருந்தான் , அவன் அப்பா ஆகினதையும் உட்பட .ஆனால் அவள் இன்னமும் ——–
” சாப்பாடு ரெடியா ? “
அவள் முதலில் அதற்கு பதிலளிக்கவில்லை . இதேபோல் மெதுவான சுலாபவம் கொண்டவள் .
” சாப்பாடு ” திலீப் மீண்டும் கேட்டான் , சற்று ஒலித்த குரலில்.
” பத்து நிமிஷம் , நான் _____ “
திலீப் வெளியேறினான் . ஒரு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் வந்து , ” சிம்னிய ஆன் பண்ணு , வீடு பூரா சப்பாத்தி கறுகுன வாட “
அவள் அதை மதிக்கவில்லை . அன்றைய மதிய நேரத்தில் அரிசியை வைப்பதற்கு அவள் சிம்னியைப் போட்டதற்கு திட்டி தீர்த்து அவனுக்கு அமைதி வேண்டும் என்று சொல்லிருக்கிறான் .
சினம் கொண்டு அவனே முன் வந்து சிம்னியை அனைத்தான் . அதே கோவத்தில் , தண்ணீரால் நிறைந்திருந்த ஒரு உருக்கு குடத்தை எடுத்து கீழே “பொட்” என்று போட்டான். அவள் அதிர்ந்தாலும் திரும்பாமல் இருந்தாள் . கையிலுள்ள சப்பாத்தி கட்டையைப் பிடித்தபடியே சப்பாத்தி திருப்பிக் கொண்டிருந்தாள் .அவன் அந்த கட்டையையும் இழுத்து கீழே போட்டு நொறுக்கினான் . ” என்ன தைரியம் இருந்தா கண்டுக்காம இருப்ப ” என்று உறுமினான்.
” என் கவனத்தை இழுக்கிற மாதிரி நீ ஒன்னும் இப்ப பண்ணல , எப்பவும் பண்ண மாட்ட ”
ஒரு நிமிடம் அவன் அவளை அடிப்பான் என்று நினைத்தாள் . சண்டை அங்கு வரவேண்டும் என்றும் விரும்பினாள் . ஒரு அடியோ அல்லது அரையோ அவளது சுயமரியாதையை இழக்க நேரிடும் . இதே காட்சி கடந்த முப்பது வருடங்களாக பல முறை நிகழ்ந்திருக்கிறது . அவன் கோவமாக இருக்கும் நேரத்தில் அவன் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வைத்தே அவள் கண்டறிவாள் . அவன் புருவத்திற்கு இடையே ஏற்படும் பள்ளம்; தொடரும் கோடுகள் ; கண் முனையில் ஏற்படும் மடிப்பு ; உறும்பும்போது வாயிற்கிடையில் ஏற்படும் துடிப்பு ;பல்லைக் கடிக்கும்போது கழுத்துச் சதை “வி ” வடிவத்தில் நிற்பது ;ஆனால் அன்று அவன் முகத்தில் வேறு எதையோ பார்த்தாள் . அது அவளுக்கு புரியாத புதிராகவே இருந்தது . அவனின் கண்ணில் கண்ணீர் தேங்கி இருந்தது . அது அவளை கலங்கடித்தது .அவனும் கலங்கியபடியே சமையலறையை விட்டு வெளியேறினான் . அதுவும் அவளுக்கு புரிந்திருந்தது. அவளை அறியாமலே அவளுக்குள் ஒரு பரிதாபம் தோன்றியது ;அவன் நிச்சியமாக ஒரு கடின மன வலியில் இருக்கிறான் . நாயாக இருந்திருந்தால் மடிந்து விழுந்திருப்பான் .
அவள் கீழே கிடந்த சப்பாத்தி கட்டையையும் குடத்தையும் எடுத்தாள் . கட்டை, உடைந்து பாகம் பாகமாக பிரிந்திருந்தது . அதை அவள் குப்பைத் தொட்டியில் போட்டாள் .இனி , அவன் புது கட்டையொன்று வாங்கும் வரை சப்பாத்தி கிடையாது . குடம் ஒரு பக்கமாக நசிக்கிருந்தது .அவன் மீண்டும் சமையலறை வருவது போல சத்தம் கேட்டு மெதுவாக திரும்பினாள். அவன் உடைந்த கட்டைத் துண்டுகளைப் பார்த்தப்படி ,
“எட்டு மணி ” , என்று வெளியேறினான் .
அவள் பின் தொடர்ந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள் .அவன் சர்க்கரைக்கான ஊசியை எடுத்து அவளுக்குப் போட்டுவிட்டு சாப்பாட்டு டேபிளில் அமர்ந்தான். அவள் கையிலிருந்த சூட்டு பெட்டியில் இருந்து அவன் தனக்கான உணவினை எடுத்துக் கொண்டான் .
” உனக்கு எவ்வளவு சப்பாத்தி இருக்கு ?” மெதுவாக கேட்டான் .
” நிறையா “
அவன் சூட்டு பெட்டியை வாங்கி , சப்பாத்தியை எண்ணிக் கொண்டு , உள்ளே போட்டான் .
அவள் டேபிளில் இருந்த தனக்கான தட்டை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தியபடி தொலைக்காட்சியைப் போட்டாள் . பாம்பைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று வந்தது . ராஜ நாகங்கள் பல்லில் இருந்து விசத்தைக் கக்கிக் கொண்டிருந்தது .
” ஏன் சாப்பிடும்போது அருவருப்பான நிகழிச்சிய பாக்குற ” என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டான் .
அவள் கோவத்தோடு அவனின் பின்புறத்தைப் பார்த்தபடி , தொலைக்காட்சி சத்தத்தை அதிக படுத்தினாள் . அப்போது தான் அவனின் தோல்கள் தொங்கி இருப்பதைப் பார்த்தாள் . வேறு ஒளி வரிசையை மாற்றியபோது அதில் , சந்திர கிரகணம் வெளிப்படையாக தொடங்க போவதாகவும் அதை அவர்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய போவதாகவும் காட்டிக் கொண்டு இருந்தார்கள் .
நீ பால்கனில இருந்தே அதை நேரடியாக பார்க்கலாம் ” என்று ஐந்தே நிமடத்தில் உணவினை அருந்தி விட்டான். சிறிது நேரம் அதையே பார்த்திருந்த அவளுக்கு பாத்திரம் கழுவும் சத்தம் கேட்டது. அமர்ந்தபடியே , தரையில் தொடப்பம் நகருவதையும் பார்த்தாள் . அங்கு தான் அவன் குடத்தின் தண்ணீரைச் சிந்திருந்தான் . கையில் ஒரு மாப்பு சுபான்ஜை வைத்து அவன் தொடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவள் சற்றேன்று சமையலறைக்குள் சென்றாள் .அவன் கோவமடைந்தது போல ஆனான் . சுபான்ஜை பாத்திர சிங்கிள் வீசி எறிந்து வெளியேறினான் . அவள் அப்பொழுது தான் அழுக்கு படிந்திருந்த அந்த பாத்திர சிங்கைப் பார்த்தாள் .அவன் அதில் ”மிக்கி மவுஸ் ” என்று எழுதிருந்தான் . அதற்கு அவள் சிரித்தாள் .அவர்கள் திபுவிற்கு அவன் பால்ய காலத்தில் அப்படிதான் பாடமிட்டார்கள். திபு அவனின் முதல் வார்த்தையையே ஆறாவது வயதில் தான் சொன்னான் . ஆசிரியர்கள் அனைவரும் அவன் சிறப்பு குழந்தையென்று பள்ளியில் இடமளிக்க மறுத்தார்கள் .ஆனால் அவளுக்கு தன் மகனுக்கு ஒன்றுமில்லை என்று தெரியும் .திபு திறமைமிக்கவன் . அவன் படங்கள் மூலம்தான் பேசி வந்தான் . அநேகமாக அன்று தான் திலீப் இவளிடம் சரிசபமாக பேசினான் . அவர்கள் திபு பேசுவதற்கு நேரம் எடுத்து கொள்வான் என்று நம்பினார்கள் . அவர்கள் தான் எழுத்துக்களையும் எண்களையும் படங்கள் மூலம் கற்பித்தார்கள். பெரும்பாலான சாயிற்காலத்தில் தான் திலீப் திபுவிற்கு பாத்திரம் கழுவும் அழுக்கு படிந்த இடத்தில் வரைய தொடங்குவான் . ” ‘எப் ‘ வடிவத்தில் தொடங்கிற மிருகத்தை வரையனும் ” என்பான் . அவளும் சப்பாத்திகளை எண்ணி மொத்தத்தை எழுதுமாறு கூறுவாள் .ஆனால் அந்த சிறுவனுக்கு இன்று முப்பத்தி இரண்டு . நெதர்லாந்தில் விஞ்ஞானியாக இருக்கிறான். ” அவர்கள் கொடுத்த கணக்க நான் படம் மூலம் செஞ்சுடுவேன் மா ” – அன்பு திபு. அப்படிப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் அவர்களை நொறுங்கச் செய்யும் . அவர்கள் திபுவென்ற ஒருவனுக்காக தான் குடும்பமாக வாழ்கிறார்கள் .
ஒரு வேளை திலீப் திபுவை தேடுகிறானோ , பாத்திரம் கழுவும் இடத்திலே அதை யோசித்தாள் .அவன் முன்பைவிட இப்பொழுது நன்கு எரிச்சல் படுகிறான் . ஒரு வேளை அவனின் கள்ளத் தொடர்பு எல்லைக் கடந்திருக்குமோ . ஆமாம் , கடந்த மூன்று வருடங்களாக இது இவளுக்கு தெரியும் . இருப்பினும் அந்த பெண் யாரென்று தெரியாமல் இருந்தாள் . அவளிடமிருந்து கைபேசி அழைப்பு வரும் பொழுது இவன் முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ரசிக்கவும் செய்வாள் .
குத்தும் குழியுமாக இருக்கும் முக வரிகள் பின் வாங்கி கூப்பாடு போடும் . இயற்கையாகவே முகத்தில் ஒரு மென்மைத்தன்மை தோன்றி , ஐம்பத்தி எட்டிலும் அவன் அழகாக இருப்பதை நினைவூட்டும் . குறளிலும் ஒரு இனிமை தோன்றி பாடகரின் குரல் போல வியப்பை தரும் . அவள் இன்னோருத்தியை அரை மனதோடு ஏற்கவோ , அனுமதிக்கவோ இல்லை, அவனுக்கு மட்டும் காதல் அமைந்ததை கண்டு ஆத்திர மடைந்தாள் . அவளுக்கு அந்த பாக்கியமும் இல்லை .
படுக்கையறைச் சென்று துணிகளை வரிசைப் படுத்த தொடங்கிய போது தான் அதை யோசிக்க தொடங்கினாள். திலீப் அவளைவிட்டு பிரியாததற்கு காரணம் அவளுக்கு மர்மமாகவே இருந்தது. அவனும் அதையே நினைக்க கூடும் . ஒரு வேளை அவனும் திபுவை நினைத்து வருந்திருக்கலாம். ஆனால் உலகில் சிறந்த அப்பா யாரென்றால் திலீப்பைத் தான் கூறுவாள் . அவனிடம் அன்பு காட்ட ஏதாவது காரணமிருக்கிறதா என்றாலும் இதை தான் சுட்டிக் காட்டுவாள். துணிகளுக்கு நடுவில் அவனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து விழிந்திருந்த மாத்திரை துண்டை மடித்து வைத்தாள் . அதிலிருந்த பெயரைப் படித்தாள் , ” ஷோல்பிரஷ்” . மேசையிலுள்ள அலமாரியைத் திறந்து அதை போட்டால், அங்கு இருவதிற்கும் மேலான மாத்திரைத் துண்டுகள் இருந்தது . ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகள்.
வாழறைக்கு சென்றபோது , திலீப் அங்கு இல்லை. அவன் சாப்பிட்டு விட்டு வெளியே நடக்கச் செல்வான் . நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனாலும் வர மாட்டான் . ஆவலுடன் தென்பட்ட அவள் உடனே தொலைப்பேசியில் இருந்த ரகுநாதன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள் .ரகு , சாலை ஓரத்தில் மருந்துக்கடை நடத்தி நோயாளிகள் வீட்டிற்கு மருந்துகளை எடுத்துச் செல்பவன்,
” ரகுநாதன் , நான் திலீப்ஜீ வீட்டிலிருந்து பேசுறேன் “
” ஆ …சொல்லுங்கம்மா , ஏதாவது மாத்திரை வேணுமா ?”
” இல்லை , ‘ ஷோல்பிரஷ் ‘ எதுக்கு பயன்படும்னு சொல்ல முடியுமா?”
” தூக்க மாத்திரை மா .அவசரத்துக்கு மட்டும் தான் பயன்படுத்தனும் , டாக்டர் கன்சல்ட் கண்டிப்பா வேணும்மா ..எதுக்கு கேக்கறீங்க ? “
” இல்லப்பா ஒண்ணுமில்லை …தேங்க்ஸ்…”
அவள் நடுங்கி போனாள் .திலீப் தற்கொலை முயற்சிக்க போறானா ?இல்லை அவளைக் கொல்ல போறானா ?திபு . அவள் திபுவிற்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் . அவள் வாழ்வறையிலிருந்து ஒரு கூரிய சத்தத்தைக் கேட்டாள் . அது திலீப்பின் சத்தம் என்று உணர அவள் சில வினாடிகள் எடுத்துக் கொண்டாள் . அவள் வேகமாக சென்று பார்த்தாள் , அவன் சுவரோடு சுவராக குனிந்து அழுதபடி கிடந்தான் .
“திலீப்” என்று பயந்த குரலில் அழைத்தான் .அவன் மேலே பார்த்தபடி கைகளை வெளியே எடுத்தான் . அவள் அவனை ஒரு தருணம் ஐந்து வருட திபுவைப் போல பார்த்தாள் . கையால் எதையோ செய்கைச் செய்ய தெறியாமல் செய்துக் கொண்டிருந்தான் .
சட்டென அவன் அருகில் சென்றாள். அவன் இதய துடிப்பு அவளுக்கு கேட்க தொடங்கின . மடிந்தெழுந்த அவன் அவள் கழுத்தில் விழுந்து , தேம்பி அழுதான் . அவனை இழுத்துப் பிடித்து ,
” திபு ? சொல்லுங்க திபுக்கு ஒன்னுமில்லையே “
” திபு நல்லா இருக்கான் ” விவரிக்க முடியா துக்கத்தில் இருந்து .
” எத்தனை மாத்திரை போட்டீங்க? டாக்டர பார்க்கலாம் .”
வேண்டாமென தலையசைத்தான் .
” எனக்கு தைரியம் இல்ல , உன்னையும் திபுவையும் விட்டு , என்னால முடியல ”
” எனக்கு அந்த பெண் பத்தி தெரியும் . திலீப் . போங்க ..அவக்கிட்டையே போங்க .இதுதான் நல்ல டைம் நம்ம சந்தோசமா இருக்க ..சரி தான ?”
திலீப் அமைதியாக இருந்தான் .
” அவன் இறந்துட்டான் . மார்ட்சிரேட் . மூனு நாளைக்கு முன்னாடி , காஷ்மீர்ல அவனோட படைய தாக்கிட்டாங்க . அவன் என் பெயரைத்தான் அவசர உதவி பெயர்ல கொடுத்திருக்கிறான் .ஒரு மணி நேரம் முன்னாடித்தான் தெரியும் “என்று கதைத்தான். அவள் அவனை நன்கு பற்றிக் கொண்டு அப்படியே விட்டுவிட்டாள் .இப்பொழுது அவள் பேசுவதற்கு விரும்பவில்லை .அவளுக்கு அவனின் துன்பத்தை விட தனது துன்பம் மேலென்று பட்டது .
அமைதியாக உட்காந்திருந்தார்கள் .ஒருவரை ஒருவர் அணைத்தபடி மேலே வானை நோட்டமிட்டார்கள் .அப்பொழுது நிலா தன் சந்திர கிரகணத்தை தொடங்கிருந்தது .
( “Writers Magazine” – ஆகஸ்ட் 2018 இதழில் வெளிவந்த ஆங்கில கதையின் மொழிபெயர்ப்பு )