கட்டுரைகள்

துப்பறியும் க்ளாசிக் மலையாள சினிமாக்கள்..! – சாண்டில்யன் ராஜு

கட்டுரை | வாசகசாலை

சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ”பெண்குயின்” திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே சைக்கோ படங்களை, துப்பறியும் படங்களை, அவற்றின் கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எத்தனையோ கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் சின்னச் சின்ன குடும்ப காரணங்களுக்காகவும் நடந்து கொண்டிருக்கின்றன. அதுபோன்ற கொலைகளை வைத்து பல சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்துள்ளன. அவற்றில் சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.

Oru CBI Diary kurippu (1998)

hotstar with subtitles.

80 களில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு முக்கியக் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு எஸ்.என்.சுவாமி எழுதி, கே.மது இயக்கிய திரைப்படம்.

பணக்காரக் குடும்பத்தின் மருமகளான ஓமனா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். முதலில் போலிஸ் விசாரித்தாலும் அதில் திருப்தி இல்லாததால் பெண் வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது.

சிபிஐ அதிகாரி சேதுராம ஐயராக மம்முட்டி அசத்தியிருப்பார். அவருக்கும் போலிஸ் அதிகாரியான சுகுமாரனுக்குமிடையே நடக்கும் வாக்குவாதங்கள் படத்துக்கு கூடுதல் பலம். மலையாள சினிமாவின் மிக முக்கியமான திரைப்படம்.

கேரளாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம்.

Oru CBI Diary Kurippu

Ee kanni koodi (1990)

Hotstar with subtitles.

அஸ்வினி என்ற ஒரு பெண் தனது வீட்டில் இறந்து கிடக்கிறார். அவள் ஒரு Sex worker. அந்த வழக்கை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரியின் மூலமாக அஸ்வினியின் துக்ககரமான வாழ்க்கை நம் கண்முண்ணே விரிகிறது. இயக்குனர் கே.ஜி.ஜார்ஜ் மலையாள சினிமாவின் புது அலை இயக்குனர். பெண்களின் உளவியல் சிக்கல்களை
யும் மனப்போராட்டத்தையும் தத்ரூபமாகக் காட்டக் கூடியவர். இந்தப் படம் அவரின் முக்கியமான சினிமாக்களில் ஒன்று.

Ee kanni koodi

Jagratha (1989) – CBI Part 2

( Youtube No subtitles)

ஒரு சினிமா நடிகை தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என வழக்கை போலிஸ் முடிக்கும் தருணத்தில் வழக்கு சிபிஐ கைவசம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் வழக்கை முடித்து வைக்க வேண்டிய கட்டாயம் சிபிஐ அதிகாரி சேதுராம ஐயருக்கு(!) ஏற்படுகிறது. அருமையான படம். ஆனால் முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் அறிவாளிகள் எனத் தடவிக் கொடுக்க மறக்கவில்லை.

CBI Part 2

 

Utharam(1989)

(Youtube No subtitles)

ரப்பர் தோட்டங்களுக்கு இடையே அமைந்த ஒரு அழகான வீடு. திடீரென ஒரு துப்பாக்கி வெடிச்சத்தம். அறைக்குள் ஓடும் வேலைக்காரர், முதலாளிப் பெண்மணியைப் பிணமாகப் பார்க்கிறார். சோகம் சூழ்ந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வரும் பத்திரிகையாளரான மம்முட்டி அது கொலையா தற்கொலையா என்பதற்கான காரணத்தைத் தேட ஆரம்பிக்கிறார்.

இந்த லிஸ்டில் என்னை ஆச்சர்யப்படுத்திய மலையாளப் படம் இது. அவிழும் மெல்லிய முடிச்சுகள் ஒவ்வொன்றும் மிகவும் எதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கும். திரில்லர் மிஸ்டரி விரும்பிகள் தவற விடக் கூடாத படம்.

Jagartha

Kariyila Kattu pole (1986)

Hotstar With Subtitles

மம்முட்டி இறந்து கிடக்கிறார். அதை மோகன்லால் துப்பறிகிறார். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

ஹரிகிருஷ்ணன் ஒரு திரைப்பட இயக்குனர். கோபக்காரர். வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் அச்சுதன் குட்டி அவரின் மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருகிறார். இயக்குனர் பத்மராஜன்.

Kariyila Kattu pole

 

Kaanathaya penkutty (1985)

Hotstar With subtitles.

சுற்றுலா சென்ற ஒரு பள்ளி மாணவி தண்டவாளத்தில் பிணமாகக் கிடக்கிறார். அந்த வழக்கு இரண்டு போலிஸ் அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறது. பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்படும் வழக்கு உண்மையான ஒரு போலிஸ் விசாரணை எப்படியிருக்கும் என்பதை கண்முன் நிறுத்துகிறது. மம்முட்டி, முரளிகோபி நடித்த திரைப்படம். ஆனால் துப்பறியும் போலிஸாக நடித்தவர்கள் புதுமுகங்கள். இயக்கம் கே.ஜி.ஜார்ஜ்.

Kaanathaya penkutty

 

Detective (2007)

Hotstar No subtitles

திரிஷ்யம் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் முதல் படம். உத்ரம், காணாதய பெண்குட்டி போன்ற படங்கள் எதார்த்தமானவை என்றால் இந்தப் படம் துப்பறியும் பாணியின் கமர்சியல் வெர்ஷன்.

சுரேஷ்கோபி ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவரின் மனைவி வீட்டில் இறந்து கிடக்கிறார். சுரேஷ்கோபி கைது செய்யப்படுகிறார். அந்த வழக்கு போலிஸ் அதிகாரியும் சுரேஷ்கோபியின் சகோதரருமான இன்னொரு சுரேஷ்கோபியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சின்ன சின்ன டீட்டெயில்களை வைத்துக் கொண்டு அவர் அந்த வழக்கை எப்படி துப்பறிகிறார் என்பதே கதை. கொஞ்சம் மசாலாவாகவும் இருக்கும்.

Malayala cinema

Yavanika (1982)

Hotstar with subtitles.

திலகன் தலைமையிலான நாடகக் குழுவில் தபேலா கலைஞர் அய்யப்பன். அய்யப்பன் காணாமல் போகிறார். சில நாட்களுக்குப் பிறகு அய்யப்பன் வயல்வெளிகளுக்கு நடுவே பிணமாக மீட்கப்படுகிறார்.

இந்த கொலை வழக்கை சப் இன்ஸ்பெக்டர் ஜேக்கப் விசாரிக்கிறார். விசாரணையில் அய்யப்பனின் இன்னொரு முகம் வெளிச்சத்துக்கு வருகிறது. இயக்கம் கே.ஜி.ஜார்ஜ்.

மம்முட்டியின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. சந்தேகிக்கப்படும் நபர்களைக் கேள்விகளால் துளைத்தெடுக்கும் போலிஸாக அருமையான நடிப்பு. முக்கியமாகப் பார்க்க வேண்டிய திரில்லர் இது.

yavanika

Mukham (1990)

Hotstar with subtitles.

Dirty harry வகையறா ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம் இது. பெண்களைக் குறி வைத்துக் கொல்லும் ஒரு ஸ்னைப்பர் கொலைகாரனை போலிஸ் அதிகாரியான மோகன்லால் தேடுகிறார். வெறும் இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய திரைப்படம். கொஞ்சம் கார் சேசிங், போட் சேசிங் என கமர்சியலான படம். மோகன்லால், சுகுமாறன், ரஞ்சனி, நாசர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

Malayala cinema

Paleri Manickam: Oru Pathira – kolapathakathinte Katha (2009)

(Youtube with subtitles for Rs.50 or Mx player without subtitles for Free)

கேரளாவில் 1950 களில் போலிஸால் முதன்முதலாகப் பதியப்பட்ட கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

டெல்லியில் பிரைவேட் டிடெக்டிவாகப் பணிபுரியும் ஹரிதாஸ் தனது சொந்த ஊரான பாலேரிக்கு வருகிறார். ஐம்பது வருடங்களுக்கு முன் தான் பிறந்த இரவு அன்று கொலை செய்யப்பட்ட மாணிக்கம் என்ற பெண்ணுக்கு என்ன ஆனது என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். 50 ஆண்டுகளாகக் கொலையாளி யாரென்று கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் வழக்கை முடித்து வைத்தாரா என்பதே மீதிக் கதை.

மம்முட்டி ஹரிதாஸாகவும், வில்லன் அகமது ஹாஜியாகவும் மிரட்டியிருப்பார். மிகவும் எதார்த்தமான ஒரு படம்.

malayala cinema

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button