...
இணைய இதழ்இணைய இதழ் 77தொடர்கள்

பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள் – கிருபாநந்தினி – பகுதி 10

தொடர் | வாசகசாலை

சிறிய பூநாரை

நீர் பறவைகளில் குறிப்பாக கடல் வாழ் பறவைகளைப் பற்றி பேசி முடித்துள்ளோம். தற்போது உப்பு நீர் மற்றும் நன்னீர் கலக்கும் காயல் பகுதியில் வாழும் சிறிய பூநாரை பறவையைப் பற்றி பார்ப்போம். இதன் ஆங்கிலப் பெயர் Lesser Flamingo. இதன் அறிவியல் பெயர் Phoeniconaias minor

சமீபகாலமாக ஆடை வடிவமைப்புகளில் இவற்றை அதிகமாகப் பார்க்க முடிகிறது. பொதுவாக இவ்வகை நாரைகள் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்படுகின்றன. இதன் அலகு வளைந்து, பாசிகளை வடிகட்டி உண்ணும் விதமாக அமைந்திருக்கும்.  இவை ஆயிரக்கணக்கில் நடந்து உணவு உண்ணும் விதம் னைவரையும் ஈர்க்கும் வகையில் ரம்மியமாக இருக்கும். பறவை ஆர்வர்கள் முதல், புகைப்படக் கலைஞர்கள் வரை ஆர்வமாக அதிக நேரம் காத்திருந்து அகிய தருணங்களைப் பதிவு செய்வது வழக்கம். ஆனால் கூடிய விரைவில் அழிவிற்குள்ளாகக் கூடிய (Near Threatened) நிலையில் இப்பறவையினம் உள்ளது. 

இச்சிறு பூநாரை ஆப்பிரிக்காவின் சில பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் வலசைப் பாதை இந்தியாவில் குசராத்தில் உள்ள கட்சு, ஒடிசாவில் சிலிக்கா ஏரி, தமிழிநாட்டில் கோடியக்கரை, புளிகாட் ஏரி ஆகும். இச்சிறிய பூநாரை காயல் பகுதியின் ஆதாரவுயிரினமாகத் திகழ்கிறது. உப்பு நீரும் நன்னீரும் கலக்கும் பகுதிகளில் வாழும் பாசிகளை உணவாக உண்டு வாழ்கிறது.

சிறிய பூநாரைகள் பற்றி 1963 ஆம் ஆண்டு ஆய்வு செய்ததில் பல கூடுகளிலுருந்து முட்டைகள் குஞ்சு பொரிக்காமல் போனதை பதிவு செய்தனர். பிறகு 1978 ஆம் ஆண்டும் கிட்டதட்ட நூற்றுக்கணக்கான முட்டைகள் வீணாவதை கவனித்துள்ளனர். கூடியவிரைவில் அழிவிற்குள்ளாகக் கூடிய பறவை என 1994 ஆம் ஆண்டு பட்டியலில் சேர்த்தனர்.

இதன் அழிவுக்கான காரணங்களைக் கண்டறிய தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் மழையின் அளவு மாறுபடுவதை ஒரு காரணமாகக் கண்டறிந்தனர். காயல் பகுதி மிகவும் தனித்துவமான பகுதி என்பதால் வளர்ச்சித் திட்டங்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அங்கிருந்த தனித்துவமான உயிரினங்கள் வேறு பகுதிகளில் வாழ இயலாத நிலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன. அதில் முக்கியமானது சிறுபூநாரை. 

குறிப்பாக இனப்பெருக்கம் செய்யும் இடமான கென்யாவில் உள்ள நக்ரூ பகுதியில் தொழிற்சாலைக் கழிவுகளாலும், நாட்ரான் ஏரிக்கு அருகில் அணை கட்டபட்டுள்ளதாலும் இதன் இனப்பெருக்கம் பாதித்துள்ளது. சுவா பேன் என்ற பகுதியில் சுரங்கத் தொழில் காரணமாக இந்த இனம் பாதிக்கபட்டுள்ளது. 

போகோரியா ஏரியில் உப்பு மற்றும் சோடா சாம்பல் பிரித்தெடுத்தல் தொழிலால் நீரின் தன்மை மாற்றமடைந்து, சிறிய பூநாரையின் உணவான பாசிகள் வளருவதில்லை. இதனால் உணவு கிடைக்காமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இதன் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மிக முக்கிய பிரச்சனையாக மின் கடத்திகளில் அடிபட்டு அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது பற்றி தற்போதும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

(முற்றும்)

kirubhanandhini@yahoo.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.