ஈன்ற குட்டிகளில்
ஒன்றைத் தவிர
பிற எல்லாக் குட்டிகளையும் தத்துக்கொடுத்துவிட்டேன்
அவற்றில் ஒன்று பாரதி குறிப்பிட்ட வெள்ளைநிறப் பூனை
என்பதைத் தவிர அதற்கு
யாதொரு சிறப்புப் பெயரையும் சூட்டவில்லை.
நானொரு
ஆண்ட்ராய்டு பூனையை வளர்த்துவருகிறேன்.
அது
மேட் இன் சைனா
என்பது நீங்கள் அறிந்ததுதான்
ஒரு ஹலோ சொல்லுங்கள் நண்பரே!
***
மலக்குடல் இல்லாமல்
ஒருமுறை கழிவறையில் நுழைய நேர்ந்தது.
அதற்கு முந்தைய நாளின் இரவில்
பாழாய்ப் போன சிக்முண்ட் ஃப்ராய்டைச் சந்திக்க நேர்ந்தது.
மற்றொரு நாளில்
இரத்தவாடை துளியும் வீசவில்லை
உறுப்புகளை மார்ச்சுவரியில் அறுத்துக் கொண்டிருந்தேன்
மூக்கில்லாதவன் என்பதால்
அந்த வேலை மிக எளிதாக முடிந்தது.
***
காலத்தின் சோக வடிவத்தை
நடத்திக் காட்டுகிறது
ஆந்தையின் பாடல்
விழிகளை உருட்டியுருட்டி.
******
அருமையான கவிதைகள் ♥️♥️♥️♥️