போலி
உன் வளம்
நிலம்
வீடு
உறவுகள்
நீ தூய்மையானதென
ஊற்றியதனைத்தையும்
நெருங்க
நெருங்க
பழக
பழக
அசுத்ததிலும்
அசுத்தமாய்
இருக்கிறது .
***
கடன்
நாளை நீ
தராமல் போவதற்கு
என்னென்ன காரணம்
சொல்லலாம் என்று
தந்துவிடுகிறேனென
உறுதியளித்த பின்பு
யோசிக்கத்
தொடங்கி விடுவாய்
நீ கொடுக்கிறாயோ
இல்லையோ
இந்த நிமிடம்
கொடுத்துவிடுவதாக
வாக்குறுதியளித்த
உன் சொற்களில்
ஒளிந்திருந்த துள்ளலை
ஆவணம் செய்து
என் உளமானது
மகிழத்தான் செய்கிறது .
***
உணர்வு
கல் தோசையில்
தேங்காய் சட்னி
ஊற்றி
சாப்பிடும்போது
முழு நிலவை
பிய்த்து
நட்சத்திரங்களை
தொட்டு
சாப்பிடுவதாக
உணர்கிறது
கடவுளின் குழந்தை.
*********