Order Your Foods On zomato 50% Offer @ First Delivary
Skip Ad
தற்போது அவன் பார்க்கவிருந்த வீடியோவிலேயே Ad வந்தது.
www. ReincarnationInvestment.com
அடுத்த ஜென்மத்துல நல்லாயிருக்க இப்பவே இன்வெஸ்ட் பண்ணுங்க. அடுத்த ஜென்மத்துல உங்களத் தேடி கண்டுபிடிச்சு உங்க பணத்தக் கொடுத்துடுவோம்….
சடாரென ஒரு நிமிடம் ‘ம்ச்ச்’ என்ற ஒலியோடு நகர்த்தப்பட்டது.
“ஓப்பனா சொல்லணும்னா” வரும் வெள்ளி முதல் உங்கள் திரையரங்குகளில்…
‘கடவுச் சொல்’
வின்சென்ட், மிதிலா நடிப்பில் வந்திருக்குற படம். தலைப்புல இருக்க மாறியே ஒரு பாஸ்வேர்டு காதல சேர்த்து வைக்கிறதுதான் கதை. மிதிலா கிஷோர் இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்றாங்க.ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு சம்மதம் வாங்கி ரொம்ப சந்தோசமா இருக்காங்க. அந்த சமயத்துலதான் வின்சென்ட் அவனோட காலேஜ் பிரண்ட் சிவா ரெக்கமண்ட்ல அவங்க ஆபிஸ்க்கு வேலைக்கு வராரு. சிவா மிதிலா கிஷோர் மூனு பேருமே ஸ்கூல்மேட்ஸ். எங்கேயும் ஒண்ணாவே போவாங்க. வின்சென்ட் சிவா பிரண்ட்ன்றதுனால அவளோட பிறந்தநாள் ட்ரீட்க்கு கூப்பிடுறா.. இந்த சமயத்துல கிஷோர் 2 வருச அக்ரிமெண்ட்ல பாரின் போறான். போயிட்டு வந்ததும் கல்யாண்ம்னு அழகா வாழ்க்கை போகுது. அவன் போன ஆறுமாசத்துல ஒரு ஆக்சிடெண்ட்ல மிதிலா பழசெல்லாம் மறந்துடுறா. ஆக்சிடென்ட் ஆனவளப் பாக்கக் கூட வின்சென்ட் போகல. கொஞ்சம் சரியாகி வர மிதிலா திடீர்னு வின்சென்ட் முன்ன வந்து, “என் மெயில் பாஸ்வேர்ட்ல உன் பெயர் இருக்கு” நமக்குள்ள எதாவது ரிலேசன்சிப் இருக்கானு கேக்குற இடத்துல இன்ட்ரவல். முதல் பாதியிலே அவங்க கதாபாத்திரத்த வலுவா கட்டமைச்சிட்டு இரண்டாம் பாதி முழுக்க எமோசனலா விளையாடிருக்காரு இயக்குநர்.
ரொம்ப நாளைக்கு அப்பறமா ஒரு நல்ல காதல் படம் வந்திருக்கு. இயக்குநர் இந்த படத்……………
நல்லா காசு வாங்கிருப்பான் போல
அந்த ரிவியூவில் நம்பிக்கையில்லாததால் அடுத்த ரிவியூவை ஓப்பன் செய்தான்.
‘கடவுச் சொல்’
டைட்டிலே இவளோ பழசாயிருக்கேனு நினச்சிட்டு போய் உக்காந்தா, “டேய் படமே பழசுதான்டா” னு டைரக்டரு சொல்றாரு.
வாழ்த்துக்கள் சார்.
பல வருசமா பொறட்டி அடிச்ச நியாபக மறதி கன்டன்ட எடுத்து அத மெயில் பாஸ்வேர்டோட கொஞ்சம் கலந்தடிச்சு எடுத்துருக்காங்க. அதாவது படத்துல ஹீரோயின் பழச மறந்துரும்னா டைரக்டரு லாஜிக்க மறந்துட்டாரு. அந்தப் பொண்ணு எல்லா பாஸ்வேர்டயும் ஒரு டைரியில எழுதி வச்சிருக்குமாம். அத ஆக்சிடென்ட்க்கு அப்பறம் பாத்து அந்த பாஸ்வேர்ட்ல இருக்கவன் மேல லவ் வருமாம். அவ லவ் பண்ற பையன் கரெக்டா பாரின்லருந்து வரமுடியாதபடி மாட்டிக்குவானாம். ஆக்சிடெண்ட்க்கு அப்பறம் இவன புடிச்சுடுமாம். என்னடா மூன்றாம் பிறை, இயற்கை படம் கிளைமேக்ஸ்லாம் வருதுனு பீல் பண்ணா அத அவனே டயலாக்ல சொல்லிடறான். ஒருவழியா அவகிட்ட காதல சொல்லப் போற அன்னைக்கு ஒருத்தன் அவள பாத்து “பூந்தென்றல்” நியாபகமில்லையா, ஸ்கூல்ல லவ் பண்ணோமே னு கேக்கறான்.
ஒட்டுமொத்தமா ஒரு சார்ட் பிலிமா பண்ண வேண்டிய படத்த இவளோ பெருசா எடுத்து வச்சிருக்கான்.
மிதிலா மாறி எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி என் பாஸ்வேர்ட் ரிக்கவர் பண்ணிப் பாத்தா அதுல மியாகலிபானு இருக்கும். நான் போய் மியாகிட்ட நமக்குள்ள எதாவது சம்மந்தம் இருக்கானு கேட்க முடியுமா!
முத பாதி புல்லா ரேனுகா(மிதிலா) சியாம(கிஷோர்) லவ் பண்றது, பூந்தென்றல்(வின்சென்ட்) அவங்க ஆபிஸ்ல ஜாயின் பண்றதுனு சவ்வா இழுத்து வச்சிருக்காங்க. குரங்கு கூட்டத்துக்கு இடையில அவுத்து வைச்ச செருப்பு மாறி காமெடி அங்கங்க சிதறி கிடக்கு.
மியுசிக்.. எங்க ஊருல ஆர்மோனியம் அல்போன்ஸ்னு ஒருத்தர் இருப்பாரு. ஆர்மோனியத்துல எதாவது ட்யூன் போட்டுட்டு இது என்ன பாட்டுனு சொல்லு பாப்போம்னு கேப்பாரு. அத ஒரிஜினல் ட்யூன் போட்ட மியூசிக் டைரக்டராலேயே சொல்ல முடியாது. அதேதான். இந்த படத்து மியூசிக் டைரக்டரும் பண்ணிருக்காரு. என்ன அல்போன்ஸ் அண்ணன் கடைசியா இது இந்த பாட்டுனு சொல்லிடுவாரு இவரு என் பாட்டுனு சொல்லுறாரு. வாழ்த்துக்கள் மியுசிக் டைரக்டர் சார்.
பூந்தென்றல் அதான் நம்ம வின்சென்ட் ஸ்டார்ட்டிங்க்லேயே இந்த மாறி உன் பாஸ்வேர்ட் என் பெயர்னு எப்படி சொல்ற, உன்கூட இருந்த வேற யாராவதா வேணாயிருக்கலாம்ல! நான்னு எப்படி முடிவு பண்ணுன கேப்பான். கடைசியா லவ் சொல்லப் போகும் போது பூந்தென்றல் னு ஒருத்தன் வந்து நிக்கும் போது அப்பிடியே கட் பண்ணி Directed By Robert D Wilde னு போட்ருக்கலாம்.
அவள லவ் பண்ணி வீட்டுல சம்மதம் வாங்கிட்டு ரெண்டு வருசத்துல வந்தவுடனே கல்யாணம்னு போன சியாம் தான் பாவம். பேரக் கூட சியாம் க்கு பதிலா வேற வச்சிருக்கலாம். இயற்கை படம்தான் நியாபகம் வந்துச்சு. அதையும் வின்சென்ட் சொல்லுவாரு.”இயற்கை படம் மாறி நியாபகம் வந்ததும் என்ன மறந்துருவாளோனு பயமாயிருக்கு”
அவள மூன்றாம் பிறை ஶ்ரீதேவி மாறி ட்ரீட் பண்ணுவான். அத மிதிலா கண்டுபிடிச்சு,”என்ன பாத்தா பைத்தியம் மாறியிருக்கா!” னு கேக்கறது நம்ம டைரக்டர பாத்து கேக்க வேண்டிய கேள்வி..
வாழ்த்துக்கள் சார்.
இதெல்லாம் தாண்டி படத்துல சில விஷயங்கள் மெச்சூரா ஹேண்டில் பண்ணிருக்காங்க. ஆக்சிடெண்ட் க்கு அப்பறம் மிதிலாக்கு அதாவது ரேணுகாவுக்கு நம்ம பூந்தென்றல் மேல ஒரு இன்ட்ரஸ்ட் வருது. அதுக்கு காரணம் பாஸ்வேர்ட். இதே மத்த படங்கள் எடுத்துகிட்டா இப்படி ஒரு சூழ்நிலை வந்தவுடனே அவங்க முன்னால் காதலன வில்லனா காட்டிடுவாங்க. ஆனா இதுல எந்த இடத்துலயும் அத தப்பா காட்டல. சேம் அவள லவ் பண்ண எல்லா பசங்களும் ரெண்டு பூந்தென்றலும் ஷியாமும் அவள தப்பு சொல்லமாட்டாய்ங்க. அத ஆடியன்ஷயும் பீல் பண்ண வச்சுட்டான்.
வீடியோ கடைசி 30 வினாடிகளுக்கு ஓட்டப்படுகிறது.
யேய் எனக்கு பழைய கதையா இருந்தாலும் பிரச்சனையல்லயப்பா, என் லவ்வரோட நான் ஒரு படத்துக்கு போகணும் படம் பாக்கணும்னு அவசியமில்லனு நினைக்கிறவங்க தாராளமா போலாம்.
நன்றி.
படம் பாக்கலாம் போலேயே என எழுந்து லேப்டாப்ல தமிழ்ராக்கர்ஸில் 700 எம்பி க்கு டவுன்லோட் போட்டான்.
டவுன்லோட் ஆனது. ஓப்பன் செய்தான்.
“என்ன படம் மாமா ?” என தன் கைலியின் முனையை வாயில் பிடித்துக் கொண்டு அவன் ரூம்மேட் சந்திரன் கேட்டான்.
ஹெட்செட்டைக் கழற்றி “என்னடா?” என கேட்டான் சகா.
“என்ன படம் பாக்குறனு கேட்டேன் டா” என கைலியை கட்டிக் கொண்டே சொன்னான்.
“கடவுச்சொல்” டா.
“நல்லாருக்கா?”
“இப்பதான் பாக்கபோறேன்.”
“ரிவியுல என்ன சொன்னாய்ங்க”
“ஒரு வாட்டி பாக்கலாம் னான்டா.”
“பாத்துருவோம்.
ஹெட்செட்டை கழட்டிட்டு ஸ்பீக்கர்ல போடுறா மாமா.”
வேண்டா வெறுப்பாக கழற்றினான்.
படம் ப்ளே செய்தான்.
கடவுச்சொல் என சற்று கோணலாக திரையில் தெரிந்த படம் இரண்டொரு வினாடியில் மிகச்சரியாக நேராக்கப்பட்டது.
அந்த படத்திற்காக தூங்காமல் சம்பளம் வாங்காமல் வேலை செய்த, அந்த படத்திற்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே சம்மந்தமான டைட்டில் கார்டு ஓட்டப்பட்டது.
சியாம், ரேணுகா, சிவா ஆபிஸ் போறது பேசறது னு மான்டேஜ் சாங் .
ஓட்டினான்.
“டேய் ஏன்டா அப்படியே ஓடட்டும்டா”
“மாமா ஃபுல்லா இருக்கானு ஓட்டிப் பாத்துட்டு அப்பறம் பாத்துக்கலாம் டா. நான் பாத்துட்டு கூப்படறேன். சேந்து பாக்கலாம்.”
சகா எப்பொழுதுமே இப்படிதான். முதலில் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு அதன் பின் முழுப்படத்தையும் பார்ப்பான்.
“இல்ல பரவால்ல நீ பாரு.”
இன்னும் கொஞ்சம் பார்வர்டு செய்யப்படுகிறது.
“டேய் ,அவ நம்ம ரேணுகாடா. தைரியமா போய் சொல்லுடா ,”
“ஸ்கூல்ல லவ் பண்ணப்பலாம் ரேணுகாட்ட தைரியமா சொல்லிருக்கேன். இப்போ சொல்றதுக்கு பயமா இருக்குடா சிவா,”
“ஸ்கூல் படிக்கும்போதே சொல்லிட்டிங்களா ஜி.”
“எப்படி பயமில்லாமயிருக்கும் ஜி. அப்போ இவன் லவ் பண்ணது அருணாவ. அதயில்ல இவன் ரேணுகாட்ட சொன்னான்.”
“அய்ய்ய்ய என்ன சியாம் ஜீ”
“அதவிடு பாஸ்.”
“டேய் சிவா, நீ எனக்காக அவகிட்ட சொல்றியா ப்ளீஸ்டா..”
“நான்லாம் சொல்லமாட்டேன். நீயா சொல்லு போ. அவ வேற யாராயிருந்தாலும் பயப்படலாம். நம்ம ரேணுட்ட சொல்லலாம் ஏன்டா பயப்படற,”
“பயமில்லடா வெக்கமாயிருக்கு. இவளேயே அருணாகிட்ட என் லவ் சொல்ல வச்சேன். இப்போ இவளே லவ் பண்றேன்னு சொன்னா என்ன நினைப்பா”
“ஒண்ணும் நினைக்கமாட்டா. டேய் அவ வரா. வரதுக்குள்ள போய் சொல்லிடு போ.”
ஸ்லோமோசனில் அழகாக நடந்து வந்தாள்.
பாஸ் செய்துவிட்டு “மிதிலா செமயா இருக்காள்ள மாமா.”
“சகா முதல்லருந்து போடறா..”
சகா கொஞ்சம் ஓட்டினான்.
“நீ இயற்கை ஷியாம் மாறியே போயிடுவியோனு பயமாயிருக்கு. அதுல அவன் சொல்லிடுவான், ஆனா நீ”
“சொல்லிடறேன் டா. அவ வரா. நீ போ..”
“மாட்டேன். நீ சொல்லு”
“டேய் சிவா! போடா,ப்ளீஸ் டா”
“ரேணுகா,இவன் உன்கிட்ட ஒண்ணு சொல்லனுமா”
“டேய் “என முறைத்தான்.
“சொல்டா” என்றான் சிவா. அவளும் “சொல்லு சியாம் “என்றாள்.
கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டு
“ரேணு நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அந்த பொண்ணுகிட்ட கேட்டு என்ன்னு சொல்றியா”
“யார்ரா அந்த பொண்ணு!”
நீ தான்.”
திடீரென திரையை மறைத்து ஒருவன் காதில் போனை வைத்துக் கொண்டே எழுந்து சென்றான்.
இவனுங்க வேற , சும்மா ஒரு இடத்துல உக்காந்து பாக்க மாட்டானாமா என சொல்லிக் கொண்டே இன்னும் கொஞ்சம் ஓட்டினான்,
கிஷோரும் மிதிலாவும் டூயட் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஹீரோ வின்சென்ட் தான, என்ன இவனோட ஆடிட்டு இருக்கா.அவன காட்டவேயில்ல.
“இந்தா வருவான் பாரு” என சகா இன்னும் கொஞ்சம் ஓட்டினான்.
சியாம் ரேணுகா வீட்டில் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.
இன்னும் வின்சென்ட்ட காட்டவேயில்லல
“இப்பிடியே ஓட்டிட்டு இருந்தா எப்படிடா தெரியும் சுன்னி”
இன்னும் ஓட்டினான்.
ரெசியூமில் பெயரை நன்றாகப் பார்த்து, “பூத்தெ….” என இன்டெர்வியூவர் திணற,
“இட்ஸ் பூந்தென்றல்” என வின்சென்ட் குரல் மட்டும் கேட்கிறது.
ஊஊ யேய் மற்றும் விசில் சத்தம் கேட்கிறது.
“யா பூந்தென்றல். வாட் இஸ் யுவர் ஸ்ட்ரெந்த் பூந்தென்றல்.“
திரையில் சிரித்துக்கொண்டே வரும் பூந்தென்றல் கையை ரசிகர்களை நோக்கி காட்ட , வின்சென்ட்டை மறைத்து ரசிகர்கள் எழுந்து நின்று கத்துகின்றனர்.
“இப்பதான்டா வரான்” என சிரித்துக்கொண்டே சகா சொன்னான்.
வாட்,
கையை ரெசியூமில் காட்டி “அதான் ரிசியும்லே இருக்கே சார்” என பூந்தென்றல் சொன்னது அந்த சத்தங்களில் கேக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் பார்வர்டு செய்தான்.
சிவா பூந்தென்றலை ரேணுகாவிற்கும் சியாமிற்கும் அறிமுகம் செய்கிறான்.
இன்னும் ஓட்டுகிறான்.
ரேணுகா பிறந்தநாள், கிஷோர் ரேணுகாவிற்கு கேக் ஊட்டிவிட்டு கட்டிப் பிடிக்கிறான். பின்னால் நிற்கும் பூந்தென்றல் சிவா எல்லாம் ஓ வென கத்துகின்றனர்.
சந்திரனுக்கு கால் வருகிறது. சகா பாஸ் செய்தான். பரவால்ல நீ பாரு முழுசா நான் அப்பறம் பாத்துக்கறேன் என போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். கிட்டத்தட்ட 20 நிமிடம் அவன் காதலியிடம் பேசி விட்டு திரும்ப உள்ளே வந்து அமர்ந்தான்.
“இன்னுமாடா பாத்துட்டு இருக்க முதல்லருந்து வைடா.”
இன்னும் கொஞ்சம் ஓட்டப்படுகிறது.
அலுவகத்துக்கு வெளியே ரேணுகாவும் பூந்தென்றலும் பேசிக்கொள்கின்றனர்.
“நான் சியாம லவ் பண்ணது எனக்கு தெரியும் பூந்தென்றல். I asked about our relationship. நான் உன்னையும் லவ் பண்ணேனா?”
“ஆக்சிடென்ட் ஆனதுல நீ லூசாயிட்டனு நினைக்கிறேன். நமக்குள்ள அப்பிடியெல்லாம் ஒண்ணுமேயில்ல ரேணுகா.”
“நோ…நமக்குள்ள ஒண்ணுமேயில்லனா நீ என்னையப் பாக்க வந்துருப்பல. நமக்குள்ள ஏதோ ஒரு ரிலேசன்ஷிப் யாருக்குமே தெரியாம இருந்துருக்கு. அப்படி ஒண்ணுமேயில்லனா இந்த Accident க்கு அப்பறம் என்னைய நீ ஏன் பாக்கவே வரல?”
“உன்னைய பாக்கற அளவுக்கு கூட முக்கியமான ஆளா என் வாழ்க்கையில நீயில்ல. எங்கயாவது க்ராஸ் பண்ணறப்ப பாத்தா ஒரு ஸ்மைல். நம்ம வீட்டு பேப்பர் போடறவன் மொபைல ரீசார்ஜ் பண்றவன பாக்கறப்போ வர ஒரு தெரிஞ்சவன் அளவுதான் நம்ம ரிலேசன்ஷிப்.”
“அப்படியா.அப்போ போன Birthday celebration ல எனக்கு கேக் ஊட்டுன போட்டோவ என்ன சொல்லுவ? பேப்பர் போடறவனும் ரீசார்ஜ் பண்ணறவனும் கேக் ஊட்டுவானா?”
“அந்த Birthday Facebook ஆல்பத்த நல்லா பாரு. அதுல இன்னும் நாலு பேரு cake ஊட்டுவாங்க.”
“இல்ல. நீ என்னை Intentionalஆ avoid பண்ணுறியோனு தோணுது. என் கேரக்டர் வாழ்க்கை நல்லாருக்கணும்னு நீ என்னைய விட்டு ஒதுங்கிப்போக நடிக்கிறியோனு தோணுது. எனக்கு சியாம விட உன்னைய பிடிச்சிருந்ததோனு தோணுது.”
“உனக்கு நம்பிக்கையில்லனா உன் அப்பா அம்மா ப்ரண்ட்ஸ கேட்டுப்பாரு.”
“அப்ப ஏன் என் Facebook password உன் பேர் இருக்கு. நீ சொன்ன இவங்க எல்லாருக்கும் தெரியாமக்கூட நம்ம ரிலேசன்ஷிப் இருந்துருக்கலாம்ல…”
“ஒரு மயிறுமில்ல. அந்த பேஸ்புக்லயே போய் Chat History பாரு. நம்ம ரிலேசன்ஷிப் மாறி காலியா கிடக்கும். நம்ம பேசிக்கிட்டதே கிடையாது.”
“அதான் இன்னும் சந்தேகமா இருக்கு பூந்தென்றல். நீ எனக்கு கேக் ஊட்டி விட்ருக்க. ஃப்ரண்டோட ஃப்ரண்டா அடிக்கடி மீட் பண்ணிருக்க ஒரு பேச்சுக்கு கூட ஒரு மெசேஜா கூடயில்லையே. அதான் தப்பாயிருக்கு.”
“அது எல்லாம் சரியாயிருக்கு. நீதான் தப்பாயிருக்க. ஆக்சிடென்ட்க்கப்பறம் என்னமோ பெரிய டிடெக்டிவ் மாறி பேசற. நீ ஏன் பூந்தென்றல்னு பாஸ்வேர்ட் வச்ச னு எனக்கு இன்னும் தெரியல. நான் கௌம்பறேன். இன்னும் கொஞ்ச நேரமிருந்தா நான் பைத்தியமாயிடுவேன் போல..”
ரேணுகா எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள்.
பூந்தென்றல் கிளம்பினான்.
இன்னும் கொஞ்சம் ஓட்டினான்.
எதோ ஒரு மால். ரேணுகா பூந்தென்றல் பேசிக் கொள்கின்றனர்.
“இதுக்குத்தான் மீட் பண்ணலாம்னு வர சொன்னியா, நேத்தே சொன்னேன்ல உன் பேர் தான் வச்சுருந்தேன்னு”
“இல்ல ரேணுகா, ஒரு வேள என் பேர்லே வேற யாராவது உனக்கு தெரிஞ்சவங்க இருக்கலாம்ல..”
ரேணுகா சிரித்தாள்.
“நான் விசாரிச்சுட்டேன். நீ தான் எனக்குத் தெரிஞ்ச ஒரே பூந்தென்றல் போதுமா.. ” என அவள் வலது கையை ஆசிர்வாதம் செய்வது போல வைத்துக் கூறினாள்.
“சியாம்கிட்ட இதபத்தி சொன்னியா”
“இல்ல..”
“சொல்ல வேணாம்.ரொம்ப பீல் பண்ணுவான். நீங்க எப்படி லவ் பண்னிங்க தெரியுமா”
“ம்ம்ச்ச் அதப் பத்தி பேசாத. ஏன் எல்லாரும் அதயே பேசுறிங்க!”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சகாவின் கைகள் கன்ட்ரோல் கீயையும் வலது ஆரோகீயையும் பிடித்தன.
அவன் கைகள் விலகிய இடத்தில் திரையில்
பூந்தென்றலின் கைகள் கோவத்தில் வேகமாக நடந்து கொண்டிருந்த ரேணுகாவின் கைகளைப் பிடித்தன.
“ஐ எம் சாரி ரேணு.”
“கையை எடுறா பூ.”
“உனக்கு நியாபகம் வந்ததும் என்னைய விட்டுட்டு போய்டுவியோன்ற பயத்துல இன்செக்யூரிட்டில அப்படி சொல்லிட்டேன் சாரி”
“என்னைய நீ மூன்றாம் பிறைல வர ஶ்ரீதேவி மாறியே ட்ரீட் பண்ற. என்னைய பாத்தா உனக்கு எப்படி தெரியுது பூ. பைத்தி
யம் மாறியா..”
அதை நிப்பாட்டிவிட்டு
“இந்த டயலாக்க வச்சு ரிவியூல கலாய்ச்சுருந்தான்டா”
என சந்திரனைப் பார்த்து சிரித்தான்.
சந்திரன் முறைத்துப் பார்க்க அடுத்து கொஞ்சம் ஓட்டினான்.
சோக பாட்டு. மான்ட்டேஜ் ல பூ, ரேணு, சியாம் எல்லாருமே சோகமா இருக்காங்க.
சகா திரும்ப கொஞ்சம் ஓட்ட , “டேய் வைடா ஒரு எழவும் புரிய மாட்டுது.”
“முழுசா பாக்கறப்ப பாத்துக்கலாம் டா.”
ட்ரஸ் ட்ரையல் பாத்துட்டு எப்படீருக்குனு பூவை ரேணுகா கேக்க, “ஶ்ரீதேவி மாறியே இருக்க” , என வர்ணிக்க முறைக்கிறாள்.
திரும்ப ஓட்டப்படுகிறது.
சாரி எனக்கு நியாபகமில்ல .
பாப்கார்ன் வாங்கி விட்டு வந்து ரேணுவிடம் வந்தான் பூந்தென்றல்.
“யார் ரேணு இது?”
“ ரேணுகாதான நீங்க!.”.
“நான் உன்க்ளாஸ்மேட் ரேணு.நியாபகமில்லையா!”
“அவனைத் தனியாக அழைத்து பாஸ் ஒரு ஆக்சிடெண்ட்ல பழச மறந்துட்டா . அதான்..”
“எப்போ பாஸ்!.என்ன சொல்றிங்க”
“அவளுக்கு நியாபகிமில்ல, சோ டிஸ்டர்ப் பண்ணாதிங்க!.இப்போதான் ரெக்கவர் ஆய்ட்டு வரா.”
“ஓகே பாஸ்.நீங்க?”
“லவ்வர்” என சிரித்துக் கொண்டு சொன்னான்.
“செம்ம பொண்ணு பாஸ். மிஸ் பண்ணிடாதிங்க!.”
“கண்டிப்பா.”
“உங்க பேரு?”
சட்டென ஓட்டினான்.
போன் காலில்…
“நான் உங்கிட்ட எத்தன தடவ கேட்டேன். உனக்கு அந்த பேர்ல வேற யாராவது தெரியுமானு. அது நாந்தான்னு நினைச்சு எவ்வளவு தூரம் போயிடுச்சு.”
“நான் சொல்றத ஒரு நிமிசம் கேளு”
“இட்ஸ் ஓவர் ரேணு. பேச ஒண்ணுமேயில்ல. அடுத்த மாசம் சியாம் வரான்ல.. அவன்கிட்ட நம்மள பத்தி நேர்ல பேசி புரிய வைக்கலாம்னு நினச்சது நல்லது. அவன் கிட்ட சொல்ல வேணாம். அவன் தான் உனக்கு கரெக்ட்”
“லூசு மாறி பேசாத பூந்தென்றல்.”
“ப்ளீஸ் டோன்ட் கால் மை நேம். எனக்கு அவன் நியாபகம் தான் வருது. உன்னோட கேர்லஸ் இது ரேணு. அத நீ முதல்லே சரியா கண்டுபிடிச்சிருந்தா இப்படி நிலைம வந்திருக்காது. ஓகே. இப்ப மட்டும் என்னாச்சு. சியாம்ட்ட எதுவும் சொல்ல வேணாம். நடக்குறது நடக்கட்டும். நான் மூன்றாம்பிறை ஶ்ரீதேவி மாறி உன்ன ட்ரீட் பண்ல ரேணு. என்ன கமல் மாறி ஆக்கிடுவியோன்ற பயத்துல பண்ணேன். கடைசியா அதான நடந்துருக்கு,”
கடைசி காட்சி வைத்தான்.
வின்சென்ட்டும் மிதிலாவும் கட்டிப் பிடித்து அழுதனர்
“லவ் யூ பூந்தென்றல்”.
“எந்த பூந்தென்றல்!”
பளார்னு அறை.
சிரித்துக்கொண்டு மீண்டும் கட்டிப் பிடிக்கிறான். பேஸ்புக்கில் அவள் பாஸ்வேர்ட் அவள் ஐடி நேமாக மாறுகிறது.
ரேணுகா பூந்தென்றல். அந்த ஐடியின் எழுத்து அப்படியே ரிட்டன் டைரக்ட்ட் பை என மாறுவதற்குள்ளேயே தியேட்டர் கேமராமேன் முடித்துவிட்டான்.
முகப்புத்தகத்தில் வாட்சிங் கடவுச்சால் என வைத்தான். கமெண்டில் எப்படி இருக்கு என கேட்டதற்கு ஒரு தடவ பாக்கலாம் என ரிப்ளே செய்துவிட்டு முதல் காட்சி வைத்தான். சகா முதல் காட்சி வைக்க கோணலான திரையில் இருந்த கடவுச் சொல் டைட்டில் ஒரு சில வினாடிகளில் நேராகிறது.
டைட்டில் கார்டை ஓட்டத் திரும்ப சகா அழுத்தினான். அப்படியே சந்திரன் பாஸ் செய்தான்.
கதை
சேவியர்
என பாஸாகி நின்றிருந்தது.
“ங்கோத்தாலக்க இனிமே லேப்ப தொட்ட நான் மனுசனாவே இருக்கமாட்டேன்”
எனக் கூறி முதலிலிருந்து ப்ளே செய்தான்.
படம் துவங்கியது.
கோணலான திரையில் இருந்த “கடவுச் சொல்” டைட்டில் ஒரு சில வினாடிகளில் நேராகிறது.
தம்பி புது concept kathaiyoda kalam ரொம்ப புதுசு என்ன அங்கங்க கொஞ்சம் கெட்ட வார்த்தை இருக்கு அதை கொஞ்சம் avoid பண்ணு.. கதை எங்கையும் kolapala அழகா nakarndadu.. keep it up. God bless u