இணைய இதழ் 117கவிதைகள்

செளமியா ஸ்ரீ கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

எனதல்லாதவை மீதுதான்
எத்துனை காதல் இதயத்திற்கு…
இனியும் என்ன சொல்லி இழுத்துச் செல்வேன்
என்னுடன் என்னை?

*

அத்தனை எதிர்ப்புகளுக்குப் பின்னால்
உன் நெஞ்சத்து எதிர்ப்பார்ப்புகள்
உன் எதிர்ப்பை எதிர்ப்பதைக்
கண்ட பின்னும்
எப்படி விட்டுச்செல்வேன்
நீ வேண்டாமென..?

*

முறை தவறியவர்களுக்கு
மறுமுறை பலமுறையாகியது
முதல்முறை போல
இப்பொழுதாவது அவர்கள் உணர வேண்டும்
இதயம் எங்கே நிற்கிறதென்று…
இன்னொரு முறை இல்லாமலும் போகக்கூடும்!

*

வேண்டல்கள்
வேண்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
இப்பொழுது மீண்டும் புரிகிறது
கற்கள் பல
அழகிய சிலைகளே!

*

கண்ணீராலான
மௌனத்தின் இரவுகளை
அணைத்துக் கொள்கிறேன்
பிரிவுகள் எனை
சொந்தம் கொண்டாடும் தருணங்களில்.

sowmiyashree00@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button