இணைய இதழ் 117

  • இணைய இதழ் 117

    இரு குறுங்கதைகள் – மணி ராமு – மலேசியா

    அதீதம் இருட்டுவதற்குள் வீட்டில் விளக்கேற்றி விடுவார் வைதேகி. பூஜை மேடையில் பூச்சரங்கள் சருகாவதற்குள் மாற்றி விடுவார். அகர்பத்தியின் நறுமணமும் சாம்பிராணியின் வெண்புகையும் வீட்டைக் கடந்து வீதிவரை தத்தம் இருப்பை நிலைநாட்ட மறவாது. வைதேகியின் வீட்டைக் கடந்து போவது ஆலயத்தை கடந்து போகும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    அவளின் அவன் – ஹிதாயத்

    மெய்யழகிக்கு கனலியின் இந்த இறுக்கம் பழகிப் போனதுதான். ஆனாலும் வெகு சமீபமாய் கனத்த வலி ஒன்றை கனலியின் செயல்பாடுகளில் மெய்யழகியால் காண முடிந்தது. கனலி அப்படியானவளல்ல. மத்தாப்பு பொறியும் புன்னகைக்குச் சொந்தக்காரி. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாய் இருக்கும். சிரித்த முகத்தோடு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    ரோஜாச் செடிகளில் தாமரைகள் மற்றும் இரு நுண்கதைகள் – ஷாராஜ்

    மூலகங்களில் யார் பெரியவர்? பூமியின் நால்பெரும் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றுக்குள் ஒரு வாக்குவாதம். தம்முள் யார் பெரியவர், யார் முக்கியமானவர் என்பதே பேசுபொருள்.முதலில் நிலம் கம்பீரமாக மொழிந்தது. “நான்தான் பூமியில் அனைத்திற்கும் ஆதாரம். நான் இல்லையென்றால், எந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    மீட்சியின் பாதை – கிருஷ்ணமூர்த்தி

    எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மையப்படுத்திய புனைவுகள் பெருவாரியாக படைப்புச் செயல்பாட்டை மையப்படுத்தியதாக அமையும். அவர்களின் படைப்பு செயலில் கிடைக்கப் பெறும் தரிசனங்களும், அதன் லௌகீக இடையூறுகளும், யதார்த்தத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் இடையில் அல்லாடும் அரசியல்-பண்பாட்டு சொல்லாட்சிகளும் எனும் வகைமையில் அவற்றைப் பிரிக்கலாம். அதன் வேறொரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் – பீட்டர் துரைராஜ்

    அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது. ‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    சுயம்பு – உதயா சக்கரவர்த்தி

    அரிசிக்கடைக்குள் நுழைந்தபோதும், பதட்டம் குறையவே இல்லை சிவாவுக்கு. காலை பதினோரு மணி, வியாபாரம் இல்லாத நேரம். பெரியசாமி உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தார். வாய் கொஞ்சமாய் திறந்திருக்க, லேசாக குறட்டை வந்தது. சிவா சுற்றிலும் பார்த்தான். அரிசி மூட்டைகள் நிறைய அடுக்கப்பட்டு இருந்தது.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    யாரால் நாற்றம்? – அரிகரசின்னா

    தனஞ்செயன் வீட்டின் கொல்லைப் புறமிருந்த இந்தியக் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீரும் மலமும் மூத்திரமுமாய் தேங்கி, கால் பதித்து அமரும் கற்களும் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கழிவறையின் கதவைத் திறந்தாலே மல நாற்றம் குடலைப் புரட்டியது. கழிவறையைப் போலவே, அந்த வீட்டில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    பிடி மண் – சௌ.இரமேஷ் கண்ணன்

    சென்னையில் வசிக்கும் சம்பந்தமூர்த்தி அண்ணனிடமிருந்து காலையில் தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்து எனக்குக் கை கால் ஓடவில்லை. குடும்பத்தில் அண்ணன்தான் மூத்தவர். தலைமைச் செயலகத்தில் உயர்பதவி வகித்து வருபவர்.அவருக்கு அடுத்து பங்கஜம் அக்கா. அக்காவைச் சொந்தத்தில் கட்டிக் கொடுத்தோம். மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    நி:சிரிப்பின் ஸ்வரம் – விக்னேஷ் சேதுபதி

    பேருந்தை போல் அல்லாத நெருங்கிய சன்னல் கம்பிகளைக்கொண்ட இரயிலின் கடைசிப் பெட்டியின் முன்பதிவில்லா இருக்கையில் ஏதோ ஒரு புத்தகத்தை தூக்கிப் போட்டு தனக்கான இருக்கையை அவள் குறுக்குப் பதிவு செய்துக்கொண்டாள். உள்ளே நுழைந்த கூட்டம் ஒருவாறு இருக்கை பங்கீட்டில் திருப்தி அடைந்தவர்களாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    நாமம் – ஜெயநதி

    பெரிய்ய்ய்ய சாண்டில்யர் ஒவ்வொரு கண்ணாடி சிம்னியுள்ளும் காலையிலேயே ஏற்றி வைத்த தீபஒளி ஆரஞ்சு குச்சி ஐஸை செருகி வைத்த மாதிரி ஜில்லென்று பளிங்கு தரையிலும், சுற்றுச்சுவரிலும் சிவப்பு ரிப்பனை கொத்தாக பறக்கவிட்ட மாதிரி பாவியிருந்தது. கண்ணாடி வளையல்கள் கும்பலாய் குலுங்குகிறதைப்போல சிலீர்…

    மேலும் வாசிக்க
Back to top button