கவிதைகள்
-
இணைய இதழ் 113
காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள்
கடலோரச் சிறகுகள் மூங்கில் நிழலாய் விழும்,கதிரவன் பூச்செவியில் நிசப்தம் பேசும் வானில்நான் பார்த்தது ஒரு கடல்,என் நாடுகளைக் கடந்து வந்த ஒரு மொழி.அலைகள் என்னைத் தடவிக் கேட்டன,“வந்த ஊர் எது?”நான் பதிலளிக்காத நிஜங்களோடுஅவற்றின் மெல்லிய அசைவில் தேங்கி நின்றேன்.பின்வட்டிய காலடிச் சுவடுகள்,ஓர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
ப.மதியழகன் கவிதைகள்
ஒரு கணம் இதற்கு முந்திய நாட்களிலெல்லாம்அப்படியொன்றும் நடந்துவிடவில்லைமொட்டு விரிந்து மலராவதையாரேனும் பாரத்ததுண்டா?இந்தவொரு இரவுக்காகத்தான்இத்தனை இரவுகள் காத்திருந்தேன்அணைக்கப்படாத விளக்குகளும்நிறுத்தப்படாத தொலைக்காட்சியும்கலைந்து கிடக்கும் உடைகளும்தான்வீடுகளை வீடுகளாய் வைத்திருக்கின்றனஅழைப்பு மணி ஒலித்தவுடன்அனிச்சையாக உடைகளைத்திருத்திக் கொள்கிறாய்உன்னில் நானும்என்னில் நீயும்ஏதோவொன்றைத் தேடிக்கொண்டிருந்தோம்பகல்பொழுது முழுவதும்ஆறுதல் அளிக்கும் இரவுகளைஅழைத்துக் கொண்டிருந்தேன்இரவு வானத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
செளமியா ஸ்ரீ கவிதைகள்
விளங்கிக்கொள்ள முடியாதவிசித்திரக் கதையின்ஒவ்வொரு பக்கத்திலும்உதிர்ந்து விழுகிறது இதயம் நாவில் உமிழ்ந்தபிரிவின் சோகம்நஞ்சாய் நழுவிஎனக்குள் சென்றுஉயிரைக் கொல்கிறது வந்தீர்கள்செல்கிறீர்கள்உங்கள் இருப்பிற்கு பழக்கப்பட்டுவிட்டஎன் சிறுநெஞ்சைஎந்த மருத்துவரிடம் கொடுத்துபழுது பார்க்க? * மன்னிப்பே கிடைக்காதகுற்றங்களை எல்லாம் செய்துவிட்டுமானிட வேடத்தில்திரிந்து கொண்டிருக்கிறாய்தேவன் உன்னை எப்படி மன்னிப்பான்?உனக்கு தண்டனை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
கிருத்திகா கவிதைகள்
சற்றுமுன் பெய்து முடித்தஅடைமழையோசாலையில் தேங்கிக் கிடந்தமழைநீரோமழைநீரில் பிரதிபலித்தஎதிர் வீட்டுக்கூரையோகூரையின் மேல் அமர்ந்திருந்தபறவையோஅந்தப் பறவை உதிர்த்தஒற்றைச் சிறகோஇவற்றுள் எதுவோ ஒன்றில்தொடங்கக் காத்திருந்ததுஅந்த ஓவியரின் வரையப்படாத ஓவியம். * ஒரு கொத்து மொட்டுகளில் மலர்ந்திருக்கும்ஒரே ஒரு பூவைப் போலஒரு கூடை காய்களில் கனிந்திருக்கும்ஒரே ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 113
மேகலா கருப்பசாமி கவிதைகள்
மழைக்கால வேட்டை குடைக்கும், மழை கோட்டிற்கும்இருமலுக்கும், ஜலதோஷத்திற்கும்ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்மழைக்காலம் அது.நானும் அப்பாவும் மட்டும்வேட்டைக்குத் தயாராவோம். மன்னர்களைப் போல,அம்மாவையும் தங்கையையும்ஆச்சரியப்படுத்தும்புலி வேட்டை;நரிக்குறவர்களின் சாமர்த்தியத்திற்க்குஇரையாகும்முயல் வேட்டை;பொந்தில் புகை மூட்டபுறந்தள்ளி ஓடிவரும்ஆடவர்களின் எலிப்பிடி வேட்டை – அல்லஎங்கள் வேட்டை. மழை பெய்தஈரமான தரையின் பதத்தைசூரியன் உண்ணுவதற்குள்,எங்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
ஷினோலா கவிதைகள்
மன அடுக்குகள் அடுக்கப்பட்ட புத்தகங்களின் மேல் அடங்கிக் கிடக்கும் தூசிகள் வாசிக்கப்படாத பக்கங்களில் புதைந்து கிடக்கும் புராணங்கள் கலைத்திட எவர் வருவர் என அச்சமின்றிக் கட்டிய சிலந்தி வலைகள் அடைந்து கொள்வதற்கு ஏதுவாய் பதற்றமின்றி கொசுக்கள்… என்றோ ஒருநாள் ஒவ்வொன்றாய் தூசி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
பிறைநுதல் கவிதைகள்
பற்றுக்கோல் வெக்கையினூடான விருப்பமில்லா பயணத்தையும் அழகாக்கிவிடுகின்றன ஒரு பேரிளம்பெண்ணின் மலர்ந்த முகமும் புன்சிரிப்பும். * வேறென்ன? ஆண்டுகள் ஐந்து தொலைந்த பின் கண்ட உன்னுள்ளும் என்னுள்ளும் கேள்விகள் பல இருந்தன ஒன்றுமே கேட்காமல் வெறும் நலம் மட்டுமே விசாரித்துக் கொண்டோம் அதன்பிறகு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
கி.கவியரசன் கவிதைகள்
கல்லொன்றை எறிந்தேன்அலைகள் எழுந்தனஒன்றையொன்றுஅடித்துக் கொண்டனபின் எப்படியோ அமைதியாகினபிரச்சினை ஓய்ந்ததெனகிளம்பி விட்டேன்அப்படியே கிடக்கிறதுகுளத்தின் அமைதிக்குள் மூழ்கிய கல். * என்னோடு இருந்தவையெல்லாம் உதிர்ந்துவிட்டன எல்லோரும் பாவம் பார்க்கிறார்கள் வெறுமையெனக் கூறுகிறார்கள் வெறும் கிளையோடு நான் எவ்வளவு லேசாக இருக்கிறேன் தெரியுமா? * துயரமொன்றுநிலவாகிக் கொண்டிருந்ததுபடபடப்புகள் நட்சத்திரங்களாகமாறிக் கொண்டிருந்தனகாற்று களைத்து விட்டிருந்ததுஎதையும் பேசாமல்என்னவென்று கேட்காமல்தலைசாய்த்து ஒரு பிடிகூடுதல் அழுத்தத்தில் வருடுகிறாள்கருமேகம் படர்கிறதுபலத்த இடிகூடவே ஒரு பெருமழைஇறுதிச் சொட்டின் சத்தம் நின்றதும்மலையொன்றுசமவெளியாக மாறியிருந்ததுதன் வருடல்களை முடித்துக்கொண்டுநெற்றியில் முத்தமிடுகிறாள்இந்த இரவுபகலெனும் தன் முகமூடியைமுழுதாய் கழற்றி வைத்திருந்தது.kaviyarasu1411@gmail.com
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
நிவேதிகா பொன்னுசாமி கவிதைகள்
கடைசித் துளி அரிதாய்மிகச் சமீபமாய்கேட்ட அந்தக்குருவி சத்தத்தால்எனது சிறுவயதுஞாபகத்திற்குசிறகுமுளைத்துக் கொண்டதுஅப்போதெல்லாம்குருவிகள் எத்தனைஎளிதாய் உறவுகளாய்கலந்துவிட்டன தெரியுமா?வீட்டில் ஒரு நபரைப் போலஅத்துணை உரிமைஅவற்றுக்குஅன்றெல்லாம் தனியாகஅதற்கு இடம் கிடையாதுபழசாய்க் கிடந்தஎங்கள் வீட்டுகேஸ் அடுப்புதான்அதன் உறைவிடம்அதிலும் அலைந்துதிரிந்து சேர்த்தவைக்கோல்சிறு குச்சிகளைக்கொண்டு ஒரு கூடுதயார் செய்துவிடும்வெளியில் எளிதாய்காயவைத்த தானியங்கள்தான்உணவுக்கெல்லாம்இதில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
மதுசூதன் கவிதைகள்
ஞாபக முடிச்சுகளாய் நான் சுமந்து கொண்டிருப்பதுஎன் பொழுதுகளைக் களவாடியஉன் ஆகர்ஷணப் பார்வைகளைசாம்பல் பூத்த தீக்கட்டியாய்என் இமைப்பீலிகளில் அதன் ஊழிக்கூத்துகள்உன் மீதான காதல் பொருட்டேதீக்கொண்டு எரியும்என் எல்லா பழைய நாள்களின் நொடிகளில்பூவொன்றின் மெல் அசைதலென உன் சிருங்கார ரூபம்என் சகல ப்ரியங்களையும்தாரை வார்த்துத்…
மேலும் வாசிக்க