கவிதைகள்
-
இணைய இதழ் 111
மதுசூதன் கவிதைகள்
ஞாபக முடிச்சுகளாய் நான் சுமந்து கொண்டிருப்பதுஎன் பொழுதுகளைக் களவாடியஉன் ஆகர்ஷணப் பார்வைகளைசாம்பல் பூத்த தீக்கட்டியாய்என் இமைப்பீலிகளில் அதன் ஊழிக்கூத்துகள்உன் மீதான காதல் பொருட்டேதீக்கொண்டு எரியும்என் எல்லா பழைய நாள்களின் நொடிகளில்பூவொன்றின் மெல் அசைதலென உன் சிருங்கார ரூபம்என் சகல ப்ரியங்களையும்தாரை வார்த்துத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
ப.மதியழகன் கவிதைகள்
ப்ரம்மம் இன்னொரு முறையும் அந்தப்பாடலைக் கேட்கிறேன்அதன் இசைக்காக அல்லஅதன் வரிகளுக்காக அல்லஅந்தக் குரலுக்காக அல்லஎனக்குள் அன்பினைபூக்கச் செய்யும்ஏதோவொன்று அந்தப்பாடலில் ஒளிந்திருக்கிறதுவாழ்வு என்பதுதேடலின் நீண்ட தொடர்ச்சிஎன எனக்கு அந்தப்பாடல்புரிய வைத்ததுபிளவுண்ட சர்ப்பத்தின்நாக்குகள் போல்என்னுள்ளிருந்து புத்தனைஎட்டிப் பார்க்க வைத்ததுசபிக்கப்பட்ட இரவுகளின்கொடுங்கனவுகளிலிருந்துஎன்னை சுவர்க்கத்துக்குஅழைத்துச் சென்றதுஎன்னை எரித்துக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
செளவி கவிதைகள்
மனம் பிறழ்ந்தவன் அவன் எந்த வீட்டின் மீதும்கல் வீசவில்லைஅவன் எவர் வீட்டுப் பூட்டையும் உடைத்துத்திருடவில்லைஅவன் யாரோடும்சண்டை போடவில்லைஅவன் வசவு வார்த்தைகள் எதையும்பேசவில்லைஅவன் மது அருந்திவிட்டுஆடை விலக ரோட்டில் கிடக்கவில்லைஅவன் குழந்தைகளின் நடுவேபுகை பிடித்துப் புகைவிடவில்லைஅவன் யார் கையையும்பிடித்து இழுக்கவில்லைஅவன் யாரையும்பலாத்காரம் செய்யவில்லைஅவன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
கண்ணன் கவிதைகள்
மூன்று நாட்கள் அங்குநான்கு நாட்கள் இங்குநன்றாகத்தான் இருக்கிறது இந்தநாடோடிப் பிழைப்புவராத தூக்கம் இரவெல்லாம்பக்கத்தில் அமர்ந்து விடியல் வரை வெறிக்கிறதுஇடதுகாலில் புடைக்கும் நரம்பைவலதுகாலால் அழுத்திவலியுடன் கத்தியவனின் குரல்கிரிக்கெட் வர்ணனையுடன் கரைந்து போகிறதுபுகைவண்டி நிலையத்தில்வழியனுப்பி வைத்துவிட்டு“அடுத்த வாரம் மீண்டும் பார்ப்போம்”எனத் தன்மொழியில் குனுகும்புறா மட்டுமே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 111
இராஜலட்சுமி கவிதைகள்
நிணம் பாலைவன மணலில்பாதங்கள் புதைய நடக்கிறதுஅந்த யானைவயிறு குலுங்கநாக்கு இழுக்கநீருக்குத் தவிப்பாய்உயிரின் இறுதித் துடிப்பாய்…கலகலவென சிரித்தாள்அருகில் ஒருத்திகையில் நெகிழிப் புட்டியில் நீர்“வேணுமா?” என்றாள் இளக்காரமாய்“புட்டி திறந்து ஊற்றேன்” கெஞ்சியது யானை“இல்லை. விழுங்கு அப்படியே” என்றாள்.வலப்புறம் பிணமெரியும்மசானம் பார்த்தது யானைஇடப்புறம் புட்டியோடு அவள்.வேதனையாய்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
கி.கவியரசன் கவிதைகள்
இவ்வளவு அழகாகமெதுவாகஇந்த வாத்துகள்சாலையைக் கடக்கும்போதுஉலகம் எவ்வளவு வேகமாகச் சுழன்றால்எனக்கென்ன?* திடீரென வந்து முட்டி மோதும்புரட்டிப் போடும்அடித்துச் செல்லும்பிறகு எங்காவதுகரை ஒதுக்கி விடும்காட்டாற்று வெள்ளம் கவிதை.* அன்றொரு நாள் இங்குதான்செடிகளுக்கு அருகில்மண்ணின் மீதுஒரு பழத்தை வைத்தேன்அதைக் காணவில்லைமண் தின்றிருந்தது நேற்று கடற்கரையில்அலைகளில் கால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
இளையவன் சிவா கவிதைகள்
பிறந்த தின வாழ்த்தெனமகளுக்கு மரக்கன்றைப் பரிசளித்தேன்பாடங்களிலும் படங்களிலும் மண்ணின் பெருமைகளைமனப்பாடம் செய்த மகள்மரக்கன்று நடவீட்டைச் சுற்றித் தேடுகிறாள் மண் பரப்பைஅரையங்குல இடத்தையும்அறை என நிரப்பி விடும்அடுக்கக இல்லத்தில்அனாதையாய்இறப்பு நாளை எதிர்நோக்கி மூலையில் கிடக்கிறாள்வனங்களின் தாய். * ஆங்கார மிருகம் அடிபணியாமல்அதிகாரம் கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
பிறைநுதல் கவிதைகள்
சட்டப்படி இரண்டு போதுமே! அப்பொழுது அதன் பெயர் அதுவல்ல!இப்படித்தான் அன்றும் ஆரம்பித்ததுஅது ஒரே வார்த்தைதான்மூன்றே மூன்று எழுத்துகள்தான்இரண்டரை மாத்திரைகள்தான்அதனால்நடுகல்களையும் அண்டவெளியையும்மட்டும் வணங்கியவர்களின் தெய்வங்கள்முப்பத்து முக்கோடி என்று பல்கிப்பெருகினகுலம் கோத்திரமாகி அதுபிறப்பின் அடிப்படையில் என்றானதுகோடாரிக்காம்புகளும் வந்தேறிகளும்அரசக்கட்டிலில் அதனை அமர வைக்கசிறு குறு தெய்வங்களையும்இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 110
ராணி கணேஷ் கவிதைகள்
எல்லாம் முடிந்துவிட்டதுஎன்ற எண்ணத்தில் சோர்வுறும் மனதைஒற்றைப் புன்னைகையில் உயிர்க்க வைக்கிறாய்மாயங்கள் நிறைந்த மந்திரப் புன்னகைமறையாமல் இருக்கட்டும் உன்னிடமிருந்துநான் கொஞ்சம் சந்தோஷமாய் வாழ்ந்து கொள்கிறேன். * பேசவேண்டாமென நான்தான் கூறினேன்அதையே வேதவாக்காக்கி பேசாமல் இருக்கிறாய்அதற்காக உன்னுடன் நான்தான் சண்டையிடுகிறேன்நான் அப்படித்தான் பேசுவேன் என்றும்இப்படித்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 109
ஷினோலா கவிதைகள்
பிரியாது விடைபெறுதல் எதையெதையோபேசிக்கொண்டு வரும்பக்கத்து இருக்கைக்காரர்கள்சாவகாசமாய் ஒரு சிநேகிதத்தைஏற்படுத்திக்கொண்டுவிடைபெறுகிறார்கள்அடுத்த மணி நேரத்தில்எந்தப் பரிட்சயமும் இல்லாதஒரு நெருக்கத்தை தைத்துவிட்டுவிலகி செல்கிறது பேருந்துஅடுத்தடுத்தநிறுத்தங்களுக்கானஅவசரத்துடன். * மேக நிழல் சாத்தியமற்ற தருணங்களைகடக்க முடியாதவன்கழுத்தோடு கயிற்றை இறுக்குகிறான்நடுங்கும் கைகளால்நாடியை நறுக்குகிறான்யாரும் காணாத தொலைவில்யாரும் தேடாத மறைவில்துயர் இழுத்துத்…
மேலும் வாசிக்க