சிறுகதை

  • சிறுகதைகள்

    ஓங்காரமாய் நின்ற மெய்யே – மகேஷ்குமார் செல்வராஜ்

    இரவு மழை பெய்திருக்க வேண்டும்.கங்கையின் படித்துறை கழுவி சுத்தம் செய்ததைப் போல் பளிச்சென்று இருந்தது. கங்கை இன்னும் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூன்றாவது முறை முங்கி எழுந்து அப்படியே சில நிமிடங்கள் ஆற்றில் நின்று கொண்டிருந்தான். கரையேறி வந்தவன் அப்படியே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    எட்டு செகண்ட் முத்தம் – சந்தோஷ் மாதேவன்

    எஸ்கலேட்டர் படிகட்டுகளுக்கு இருக்கும் விசித்திரப் பண்பு அவன் கண்களுக்கு அன்றுதான் புலப்பட்டது. ஏன் அவை மற்ற படிக்கட்டுகள் போல் இருவழிப் பாதையாக இருக்கவில்லை என அவனைச் சிந்திக்கத் தூண்டியது. “கீழ் நோக்கி இறங்கும் படிக்கட்டுகளால் ஏன் மேல் நோக்கி ஏற முடிவதில்லை”…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சித்தார்த்தன் கடவுளாகின்றான் – நீலாவணை இந்திரா

    இந்தக் கதையின் பெரும்பகுதி ஜேஆர் – ராஜிவ் காந்தி இடையே நடந்த ஒப்பந்தத்தின் முன்னரான இரண்டு வருடங்களுக்குரியது. ஆனாலும் இந்தக் கதையின் மாந்தரை இன்றைய பொழுதிலேயே நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். கூட்டுப் பெட்டி காங்கையேறி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    உடன்போக்கு – கமலதேவி

    கார் முன்னிருக்கையில்  விரல்களால் தட்டிக்கொண்டு  குமரன்  அமர்ந்திருந்தான். கண்கள் சிட்டுக்குருவியின்  உடல் அசைவுகளென  படபடத்துக் கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக பிராண்டட்  பேண்ட்  சட்டையில்  பள்ளிக்கூடத்து வாத்தியார்  போல  இருந்தான். “என்ன முதலாளி நீங்க, இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாப்ல பதட்டபடுறீங்க… தங்கச்சியே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    இரவை வெளிச்சமிடும் வானம் – அமுதா ஆர்த்தி

    அவள் தங்கியிருந்தது ஏரியை ஒட்டிய  உண்டு உறைவிடப்பள்ளி. கட்டிடம்  நிறங்களை இழந்து ஈர நயப்புடன் இருந்தது. ­­சுற்றுப்புறம் சதுப்பு நிலம் போல் பொதுக் பொதுக்கென்றே காணப்பட்டது. மாடியில் ஏரியைப் பார்த்தபடி நின்றாள். “பாம்பு…பாம்பு..” என்ற குழந்தைகளின் கூச்சல். சிறுவன் ஓடி வந்து,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மெல்லினா – செல்வசாமியன்

    மெல்லினாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவள் அம்மாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. கனிந்திருந்த அவரின் முகத்தசைகள் அதிர்ந்துகொண்டிருந்தன. நான் வருவதைப் பார்த்ததும் வெடித்துக்கொண்டிருந்த வார்த்தைகளை நிறுத்தி அப்படியே விழுங்கிக்கொண்டார். சூழலை நான் புரிந்துகொண்டாலும் எப்போதும் போல அவரைப் பார்த்து சிறியதாய் புன்னகைத்தேன். குறையாத…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ’தேம்ஸ் நதிக்கரையில்….’ – மோனிகா மாறன்

    நரேன் சீக்கிரம்  கண்ணைத் திறந்து என்னைப்  பார்த்துவிடேன். எத்தனை நேரம் காத்திருப்பது? எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் வாசனையும், ஸ்பிரிட் நெடியும் குமட்டிக்கொண்டு வருகிறது. எத்தனை எச்சரிக்கையாய் இருந்தும்   தங்கிவிட்டதா? அதானால்தான் குமட்டலும் மயக்கமுமா? யாரிடம்  இதை நான் சொல்லமுடியும்? உன்னைத் தவிர.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சாமந்திப்பூக்களை அதங்கும் கோணமூஞ்சிகள் – க.மூர்த்தி

    வீட்டின் நடையில் உள்ள மேற்கூரையில் சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் புலக்கத்தில் இருக்கும். தலைவாணிக் கட்டைக்கு அடியில் கூளங்களை  சேகரித்துக்கட்டிய கூட்டில் ‘விரிட் விரிட்’ டென குருவிகளின் இறகோசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன. கருங்காட்டில் சோளத் தட்டைகளை குத்திரி போட்டுக் கொண்டிருக்கும் தாத்தா பழனிமுத்துவுக்கு பழையது…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஆரஞ்சு மிட்டாய் – கிருத்திகா கணேஷ்

    ”ஏட்டி.. ஏ மாரி.. எந்திரி.. விடிஞ்சு நேரம் என்னாவுது?’ சத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சந்திரா தன் புடவையை அணைத்தபடி சுருண்டு படுத்துக் கொண்டு சலனமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த தன் மகள் மாரிச்செல்வியின் முகத்தை அப்படியே நின்று பார்த்தாள்.. தாய்மை அவள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பலகாரச்சீட்டு – ஜே.மஞ்சுளாதேவி

    எங்கோ வெகு தூரத்தில் ஒரு வெடி வெடித்தது. நினைக்க நினைக்க கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ராணிக்கு. கோசலையக்கா  இப்படிப்  பண்ணுவாள் என்று நினைக்கவேயில்லை. தீபாவளி  நாளும் அதுவும்  தனக்கு இப்படி விடிந்ததே  என்று  அடக்கி  அடக்கிப் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை. விடியற்காலையிலேயே…

    மேலும் வாசிக்க
Back to top button