சிறார் இலக்கியம்
Trending

வானவில் தீவு: 3 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்

இதுவரை…

தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் பல மீன்களின் உதவியை நாடிச் சென்றனர். அதில் வலசை மீன் மட்டும் ஊரில் இல்லை. அதன் பிறகு என்ன ஆனது? வாங்க பாக்கலாம்.

இனி…

மகேஷ்: சரி! முதல்ல நாம வலசை மீன்களுக்கு தகவல் சொல்லி அனுப்புவோம். கிளம்புறதுக்கும் தயார் பண்ண வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அத இப்போ ரெடி பண்ணலாம்

ராம்: கரெக்ட்டு. நம்ம வேலைய ஆரம்பிப்போம்.

லூனா: வலசை மீன்களுக்கு தகவல் அனுப்புற வேலைய நான் பாத்துக்கிறேன். அதுக்கு சரியான ஆளு sailfish மீன்தான்!

ராம்: Selfish மீனா? அது யாரு?

லூனா: Selfish இல்ல ராம் Sailfish. அவங்க தான் வேகமா நீந்திப் போற மீன். நான் போய் தகவல் சொல்லிட்டு வரேன்.

ராம்: ஓகே லூனா. பாத்துப் போய்ட்டு வா.

மகேஷ்: எல்லாரும் கவனிங்க. இங்க இருந்து நாம கிளம்புறதுக்கு கப்பல், சாப்பிடத் தேவையான பொருட்கள்னு நிறைய தயார் பண்ண வேண்டியிருக்கு. எல்லாரும் ஆளுக்கு ஒரு வேலையா ஒதுக்கி செஞ்சோம்னா, டக்குனு முடிச்சிடலாம்

பாலா: சரிதான். எனக்கு என்ன வேலைனு சொல்லுங்க.

மகேஷ்: நாம முதல்ல சயின்டிஸ்ட் தாத்தா கிட்ட பேசுவோம். அவருக்குதான் நிறைய விஷயங்கள் தெரியும்

ராம்: ஆமா! முதல்ல நாம போய் அவரச் சந்திப்போம்.

******

அதே சமயம், கடலில்

லூனா: ஏப்பா லைட்டு, இந்த sailfish குடும்பத்துல யாரையாவது பாத்தியா?

லைட்டு: நான் உன்ன மாதிரி கடல சுத்திட்டு இருக்கிறவன் இல்ல. நான் உண்டு, என் ஏரியா உண்டுனு இருக்கேன். வேற யாருகிட்டயாவது கேளுப்பா.

லூனா: பாத்தியானு கேட்டதுக்கு ரொம்ப பேசுறியே. ம்ம்ம்.. ம்ம்ம்.. இருக்கட்டும்.

கடலின் பல பகுதிகளிலும் தேடிய லூனா, ஒரு வழியாக மர்லின் மீனைக் கண்டுபிடித்தது. மர்லின் மீன் sailfish கூட்டத்தில் ஒன்று.

லூனா: ஹாய் மர்லின். பாத்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்க?

மர்லின்: ஹேய் லூனா! நான் சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்க? சின்ன வயசுல நாம எவ்ளோ ஜாலியா விளையாடுவோம். ஓட்டப்பந்தயந்துல உன்ன நான் எப்பவும் முந்த விடவே மாட்டேன்ல! அந்த நாட்கள நினைச்சாலே சந்தோசமா இருக்கு.

லூனா: (Mind voice: வந்த உடனே எப்டிக் கலாய்க்குறா பாரு. நல்லவேள யாரும் கூட இல்ல) ஹிஹிஆமா மர்லின். நீதான் புயல் வேகமாச்சே!

மர்லின்: சரி சொல்லு. என்ன விஷயமா வந்திருக்க?

லூனா மொத்தக் கதையையும் வேகவேகமாகச் சொல்லி முடித்தது.

மர்லின்: அடேங்கப்பா! இவ்ளோ நடந்திருக்கா? எப்படியோ நமக்கெல்லாம் கலர் கிடைச்சா சரிதான்.

லூனா: ஆமா மர்லின். இப்போ வலசை மீன்களச் சந்திச்சு இதச் சொல்லி கூட்டிட்டு வரணும். மேற்குப் பக்கம் போனதாக, அந்த ஏரியா அம்மு மீன் சொல்லுச்சு.

மர்லின்: சரி சரி. எனக்குத் தெரிஞ்ச அந்த இடத்துக்குதான் அவங்க போயிருக்கணும். நான் சீக்கிரம் போய் அவங்களச் சந்திச்சு, விஷயத்த சொல்லி கூட்டிட்டு வரேன். நீங்க மத்த வேலைகள கவனிங்க

லூனா: ரொம்ப நன்றி மர்லின். சரியான நேரத்துல உன்னோட உதவி கிடைச்சது.

மர்லின்: எதுக்குப்பா நமக்குள்ள நன்றி எல்லாம். கலர் கிடைச்சா, எல்லாருக்கும் சந்தோஷம் தானே!

லூனா: ஆமா மர்லின்

மர்லின்: சரி நான் கிளம்புறேன். டாட்டா.

லூனா: கவனமா போய்ட்டு வா மர்லின்.

******

ராம், பாலா, மகேஷ் மூவரும் சயின்டிஸ்ட் தாத்தாவிடம் சென்று அடுத்து செய்ய வேண்டிய யோசனைகளைக் கேட்டனர்.

தாத்தா: பசங்களா, ஒரு விஷயத்துக்காக ப்ளான் போடும்போது, நமக்கு என்னென்ன தேவைகள் இருக்குனு முதல்ல யோசிக்கணும். யோசிங்க

ராம்: கப்பல், உணவு, தண்ணீர், எரிபொருள், ஆடைகள்

பாலா: டைரி, பேனா, பென்சில், டார்ச் லைட்

தாத்தா: கப்பல்ல ஏதாவது பிரச்னைன்னா life jacket மாதிரி பாதுகாப்பு உபகரணங்கள் வேணும்.

மகேஷ்: ஆமா தாத்தா! பாதுகாப்புக்குத் தேவையான பொருட்கள் எல்லாமே வேணும்.

தாத்தா: அதே மாதிரி நீங்க 3 பேருமே கப்பல இயக்க கத்துக்கணும்

மூவரும்: சரி தாத்தா.

தாத்தா: கப்பல், பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் நான் ஏற்கெனவே தயார் பண்ணது இருக்கு. சில ரிப்பேர்கள் மட்டும் சரி பண்ணித் தரேன். உணவு, மற்ற பொருட்களை நீங்க தயார் பண்ணுங்க. குறைந்தது 10 நாட்களுக்குத் தேவையானதை எடுத்து வச்சுக்கோங்க.

மூவரும்: சரி தாத்தா.

தாத்தா: அதுக்காக ரொம்ப அதிகமா எடுத்து வச்சுடாதீங்க. நம்ம கப்பல் அதிக எடை தாங்காது.

ராம்: சரி தாத்தா. நீங்க எங்க கூட வருவீங்க தானே?

தாத்தா: அது ரொம்ப கஷ்டம். நீங்க 3 பேரும்தான் போகணும். உங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் நான் சொல்லித் தரேன். வழியில வேற ஏதாவது பிரச்னைன்னா நீங்கதான் சமாளிக்கணும்.

தாத்தா வர மாட்டார் என்பது மூவருக்கும் கவலையாக இருந்தாலும் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கக் கிளம்பினர்.

தொடரும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button