புதிய வருடம் தொடங்குகிறது. என்னுடைய முதல் நாவல் வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசித்துக் கருத்துகளைப் பகிருங்கள். நாவலின் பெயர் ‘யூதாஸ்’. ஸீரோ டிக்ரி நடத்திய நாவல் போட்டிக்காக எழுதினேன். நெடும்பட்டியலில் தேர்வாகியது. நான் பெரிதும் விரும்பும் பாஸ்டன் நகரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்.
எழுத்துக்களைத் தாண்டி எனக்குப் பெரும் ஆறுதல் தரக்கூடியது இசை. இசைத் துணுக்குகளை உற்று நோக்கினால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். தனித்தனி ஸ்வரங்களை எடுத்துக்கொண்டால் அவை வெறும் ஒலி. அதில் நெகிழ்ச்சித் தன்மை எதுவுமில்லை. அதாவது ‘ச’ என்ற ஸ்வரத்தை எடுத்துக் கொள்வோம். ‘ச’ என்ற ஒலியைத் தவிர அதை வேறெதுவாகவும் உச்சரிக்க முடியாது. இப்படியாகவே ஒவ்வொரு ஸ்வரங்களும் கூழாங்கற்களைப் போல கடினமானவை. ஆனால் அவை ஒன்றோடோன்றுச் சேரும் போது நெகிழ்ந்து இசைப் பேரருவியாய் பெருக்கெடுக்கிறது. அதேப் போல இசையின் மாயத் தன்மைக்கு மற்றுமொரு காரணமாக நான் நினைப்பது, அதனைப் பார்க்க முடியாது கேட்க மட்டுமே முடியும். ஒருவேளை இசையைப் பார்க்க முடிந்தால் ஒரு பௌர்ணமி நிலவைப் போலோ விடிகாலை நட்சத்திரங்களைப் போலோ கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும்.
ஒவ்வொருக் காலங்களில் ஒவ்வொரு இசையோடு மனம் லயித்துவிடுகிறது. காரில் செல்லும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜாவின் பாடல்களும் ரஹ்மான் பாடல்களும் வைத்திருக்கிறேன். அதைத் தாண்டி அவற்றில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஹிந்துஸ்தானி சங்கீதம் பிடிக்கும் ஆனால் நண்பன் வினித் சில மாதங்களுக்கு முன் பீம்சென் ஜோஷியும் பாலமுரளி கிருஷ்ணாவும் பாடும் ஜுகல்பந்தி கேட்டுவிட்டு சாஸ்திரிய சங்கீதத்துக்கு அடிமையாகிவிட்டேன். கர்னாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானியும் நம்மில் பலருக்கு அந்நியமாக இருக்கிறது. ஆனால் பழகிவிட்டால் அவையிரண்டும் தேன். இதை போகிற போக்கில் சொல்லவில்லை. பீம்சென் ஜோஷியும் பாலமுரளியும் பாடும் இந்த ஏழு நிமிடக் காணொலியைப் பாருங்கள். இசைக் கொடுக்கும் ecstasy என்னவென்றுப் புரியும். இரண்டு இசைப் பேரரசர்கள் சமர் செய்துக் கொள்ளும் தருணம்! https://www.youtube.com/watch?v=AWxQacHGhzY கடவுள் மட்டும் ஒரு வாய்ப்புத் தந்தால் இந்த இசை நிகழ்ச்சியை வரலாற்றின் பின் சென்று நேரில் பார்த்துவிட்டு வரவேண்டும்.
சமீபத்தில் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது உரையாடலுக்கு இடையே எல்விஸ் ப்ரஸ்லியின் ‘Blue Suede Shoes’ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். எல்விஸைப் பிடிக்குமா? என்றுக் கேட்டார். எல்விஸைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? என்றுத் திரும்பிக் கேட்டேன். அதுவும் எல்விஸ் பேரழகன். அவரது காணொலிகளை நமக்கு காணக் கிடைக்கிறது. அவர் மேடையில் தோன்றினால் அரங்கிலிருக்கும் யுவதிகளுக்குப் பித்துப் பிடித்துவிடும். நண்பருக்கு என் கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. இசையைப் பொறுத்த வரை எனக்கு கால நிர்ணயங்கள் இல்லை. சமகாலத்தில் இருப்பவரையும் பிடிக்கும் எல்லோரையும் பிடிக்கும்.
இப்படி 1960 மற்றும் 1970களின் பாடல்களை பைத்தியக்காரனைப் போல தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். இதில் எப்போதும் கேரன் கார்பென்டரின் (Karan Carpenter) குரலைக் கேட்டால் உடைந்து அழுதுவிடுவேன். கன்னெக்டிகெட் மாகாணத்தில் பிறந்தவர்கள் ரிச்செர்ட் கார்பென்டர் மற்றும் கேரன் கார்பென்டர். ரிச்சர்ட் பிறந்த வருடம் 1946 அதன் பிறகு கேரன் 1950ல் பிறந்தார். இருவருக்கும் இசையில் ஆர்வம். பல தடைகளுக்குப் பிறகு கார்பென்டர் என்ற குடும்பப் பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பிக்கிறார்கள். தடங்கல்களுக்குப் பிறகு 1970ல் இவர்களின் கூட்டணியில் வெளியான ‘Close to you’ என்ற ஆல்பம் பெரும் வெற்றிப் பெறுகிறது. கேரனின் குரலைப் பற்றி சொல்லியாக வேண்டும். தங்கத்தில் குழல் செய்து ஊதினால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான குரல்! என் குறைந்த அனுபவத்தில் இப்படியான ஒரு குரலைக் கேட்டதில்லை. ஒப்பிடவே முடியாதபடியான இனிமையானக் குரல். https://www.youtube.com/watch?v=PjFoQxjgbrs ‘Rainy days and Mondays’ என்ற இந்தப் பாடல் என் ஆத்மாவுடன் கலந்தப் பாடல். இதைக் கேட்டால் நான் சொல்ல வருவதுப் புரியும்.
குரல் மட்டுமல்ல கேரன் ஒரு பேரழகி. பாடும் தோரணையும் ட்ரம் வாசிக்கும் வசீகரமும் கேரனை ஒரு தேவதையைப் போலவே நினைக்கச் செய்யும். ரிச்சர்ட் பியானோ வாசிக்க கேரன் பாடும் பாடல்கள் அத்தனையும் பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் விதி வேறு மாதிரி சதி செய்தது. 1975ல் கேரன் உடல் எடைக் குறைய ஆரம்பித்தது. அதற்கு காரணமும் கேரன் தான். Anorexia Nervosa என்ற உளம்சார்ந்தப் பிரச்சனை. அதாவது தன்னுடைய உடல் எடைக் கூடுவதாக கற்பனைச் செய்துக் கொண்டு எடையைக் குறைக்க முற்படுவது. எல்லா உணவுகளையும் குறைத்துக் கொண்ட கேரன் இந்தச் சிக்கலின் அடுத்த பரிணமமான சுத்தமாக இருக்க வேண்டும், கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டும் போன்ற அதீத மனநிலையில் மீண்டும் உணவுகளைக் குறைத்து வெறும் சாலட் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். இதே சமயம் கணவன் தாமஸ் பரிஸ் செய்து வந்த வணிகத்தில் பின்னடைவு. எனவே குடும்ப வாழ்வில் விரிசல் விழுகிறது. சகோதரர் ரிச்சர்ட் இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் போதை பொருளுக்கு அடிமையாகிறார். இவைகளைத் தாண்டி அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டிருந்திருக்கிறார் கேரன். கடைசியில் உடல் வற்றி இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனையால் 1983ல் மரித்துப் போகிறாள். சாகும் போது கேரனுக்கு 32 வயதுதான்.
ரிச்சர்ட் இன்றும் நலமுடன் இருக்கிறார். சமீபத்தில் கேரனின் பதிவு செய்யப்பட்ட குரலுடன் ஒலிக் கோர்ப்புகள் செய்து அனைத்துப் பாடல்களையும் வெளியிட்டதாகச் சொன்னார்கள். நான் இன்னும் கேட்கவில்லை. கேரனின் குரலில் ‘Top of the World’ பாடலை இதுவரை எத்தனை முறைக் கேட்டிருப்பேன் என்று நினைவில்லை. அதுவும் பாடலின் தொடக்கத்திலும் முடிவிலும் அவர் கொடுக்கும் ‘ஹி ஹா’ என்ற ஒலி அட்டகசமாக இருக்கும். கேரனின் நினைவுகள் வரும் போதெல்லாம் டாப் ஆஃப் த வேர்ல்ட் தான் கேட்பேன். அதனோடு கண்ணீரும் பெருக்கெடுக்கும். அன்பைக் கொண்டாடும் அந்தப் பாடல் வரிகளுடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். இந்த உலகத்தின் அத்தனை இனிமையான தருணங்களுடன் கேரன் நினைவுக்கூறப்படுவாளாக! https://www.youtube.com/watch?v=Tt1MqAZ9XHw
Such a feelin’s comin’ over me
There is wonder in most every thing I see
Not a cloud in the sky, got the sun in my eyes
And I won’t be surprised if it’s a dream
Everything I want the world to be
Is now comin’ true especially for me
And the reason is clear, it’s because you are here
You’re the nearest thing to heaven that I’ve seen
I’m on the top of the world lookin’ down on creation
And the only explanation I can find
Is the love that I’ve found, ever since you’ve been around
Your love’s put me at the top of the world
Something in the wind has learned my name
And it’s tellin’ me that things are not the same
In the leaves on the trees, and the touch of the breeze
There’s a pleasing sense of happiness for me
There is only one wish on my mind
When this day is through I hope that I will find
That tomorrow will be, just the same for you and me
All I need will be mine if you are here
I’m on the top of the world lookin’ down on creation
And the only explanation I can find
Is the love that I’ve found, ever since you’ve been around
Your love’s put me at the top of the world
I’m on the top of the world lookin’ down on creation
And the only explanation I can find
Is the love that I’ve found, ever since you’ve been around
Your love’s put me at the top of the world
(தொடரும்…)