
பெர்சு உள்ளார ரெட் ஸ்பாட்………!
சூரியனிலிருந்து ஐந்தாவது பிரம்மாண்ட கிரகம் ஜுபிடர் (வியாழன்). இதன் உள்ளே 1300 பூமிகளை அடக்கிப் பேக் செய்யலாம். அவ்ளோ பெர்சு. பூமியில் இருந்து 92,12,00,000 கிமீ தூரத்தில் உள்ளது. பூமிக்குச் சில விதங்களில் செக்யூரிட்டி மாதிரி. பூமி மேல் விண் கற்கள் மோதாமல் காபந்து செய்யும். இதை ‘failed star’ என்பார்கள். நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டியது. அதற்கு வேண்டிய கொழுந்து விட்டு எரியக் கூடிய சக்தி உள்ளே இல்லாததால் கிரகத் தகுதி வந்து கிரகமாகி விட்டது. அட கெரகமே…! ஸ்டார் அந்தஸ்து போய்விட்டது.
இந்த ராட்சச ஜுபிடர் (வியாழன்/பிரகஸ்பதி/குரு) கிரகத்தில் சிவப்பாகக் கண் மாதிரி ஒன்று தெரியும். அதன் கண் திருஷ்டி கவசம் அல்ல. அதை க்ளோஸ் அப்பில் பார்த்தால் முட்டை ஆம்லெட் சாயல் இருக்கும். பிரமாண்டமாக இருந்த அது இப்போது சுருங்குகிறதாம். தொலை நோக்கிக் கொடுக்கும் தரவுகளின் லேட்டஸ்ட் ஆய்வில் கண்டு பிடித்தது. இப்போது ஒண்ணரைப் பூமி அளவிற்கு வந்துவிட்டதாம்.
ரெட் ஸ்பாட்ல என்ன நடக்குது? ரத்தக்களரி ஏன்? ஏதாவது சம்பவமா? அது தெறி புயல் மேட்டர் கைஸ்.
ஜுபிடரில் நம்ம பூமி மாதிரி நிலமெல்லாம் கிடையாது. அதற்குப் பதிலாக கீழ் லேயரில் வாயுக்கள்தான் நிலங்கள். கால் எல்லாம் வைக்க முடியாது. வைத்தால் அதோ கதிதான். 25000-க்கு மேல் ஃபாரன்ஹீட் சூடு இருக்கும். ஹீலியம் & ஹைட்ரஜன் அதிகம். அதனால் ரெட் ஸ்பாட்டும் நிலால இருக்கிற மாதிரி பாறை, மலை ஸ்பாட் அல்ல. விர்விர்ரென அதி பயங்கரப் புயல் ஸ்பாட். ரெண்டு பூமி அளவிற்குப் பெரிதானப் புயல் அந்த ரெட் ஸ்பாட்டில் அடித்துக் கொண்டிருக்கிறது.. சின்னது பெரியது என்று பல வித அளவுகளில் மாறி மாறி எதிரும் புதிருமாக சுழன்றுச் சுழன்று அடிக்கும். வெளியில் தெரியும் பட்டை வரிகளின் உள்ளேயும் அதுதான் நடக்கிறது. இதைப் பின்பு பார்க்கலாம்.
விர்விர்ன்னு மணிக்கு 270 கிமி ராட்சச புயல் உள்ளே அடிக்கிறது. காரணம் இது பெரிய வாயு கோளம். கீழே உள்ள ஹைட்ரஜன், மீதேன் அதன் கலப்பின் விளைவில் அம்மோனியா ஐஸ் கட்டிகள் என்று அதன் அழுத்தத்தில் வெளி வரும் கொந்தளிப்பு மேகக் கூட்டமாகவும் காற்றாகவும் சுழன்றுச் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புயல் வயசு எவ்வளவு? 200 வருஷமாக அடிக்கிறது. நம்ம ஊர் பருவ காலப் புயல் அல்ல. நம்ம ஊர் மாதிரி கடலில் இவ்வளவு கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த மண்டலம் அல்ல. அங்கே கடலும் இல்ல நிலமும் இல்ல. பூமி மாதிரி புயல் ஓயவும் கடக்கவும் ( land fall) நிலப்பகுதி கிடையாது.
ஜுபிடர் மணிக்கு 43000 கிமீ வேகத்தில் தன்னைச் சுற்றும் கிரகம். பூமி மணிக்கு 1700 கிமீ. நம்ம ஊர் மாதிரி 24 ஹவர்ஸ் கிடையாது. 11 மணி நேரத்தில் ஒரு சுற்று வந்துவிடும். ஒரு நாள் 11 மணி நேரம் அங்கு. இந்த வேகத்தில் உள்ளே எப்படிப் புயல் அடிக்கும்? யோசியுங்கள் மக்களே. கற்பனையே செய்ய முடியாத பயங்கரம். நம்மாளு (பூமி) ரொம்பச் சாது. பெரிசு முன்னாடித் தம்மாத்தூண்டு. ஜுபிடர் ஃபுட் பால் சைஸ் என்றால் பூமி கோலிகுண்டு சைஸ்.
ஏன் புயல் ஸ்பாட் சுருங்குகிறது? அங்கு அடிக்கும் சிறு புயல்கள் ஓய ஆரம்பித்து விட்டனவாம். அதுதான் தூண்டிவிட்டுப் பெரிதாக்கி வைத்திருந்ததாம். இப்படி காலப் போக்கில் நடக்க ஆரம்பிப்பதால் சுருங்க ஆரம்பிக்கிறது. அதன் சிவப்பு நிறமும் அங்கு நடக்கும் ரசாயன மாற்ற ரகளையின் எதிரொலிதான்.
ரெட் ஸ்பாட் உட்கார்ந்திருக்கும் வெளிப் பட்டைக் கோடுகளும் அதன் தெறி ரகளையும்
ரெட் ஸ்பாட்டிலிருந்து பட்டைக் கோடுக்கு வருவோம். கூழங்கல் மாதிரி கிரகத்தின் வெளித் தோற்றம் அழகோ அழகு. அதன் மீது வரி வரியாகப் பட்டைக் கோடுகள். அடர் வண்ணம் லேசான வெள்ளை என்று இருவிதம் இருக்கும். அடர் வண்ணம் வாயுக்கள் சூடாகி மேல் எழும்புகிறது. வெளிர் (லேசான) வண்ணம் குளிர் வாயு கீழே இறங்குகிறது. பட்டைகள் அதன் வாயுக்களோடு எதிரும் புதிருமாகப் போய்க் கொண்டிருக்கும். இவைதான் வெளித் தோற்றத்தில் பட்டைகளைப் பிரதிபலிக்கிறது. நகர்வதைக் கிட்டத்தில் பார்த்தால்தான் தெரியும். பயங்கரமாக இருக்கும். அடியில் இருக்கும் இரு வாயுக்களின் ரசாயன மாற்றம் காரணம் சூடாகி மேல் எழுந்து மீண்டும் குளிர்ச்சியாகிக் கீழே போகும். அதி வேகமாகச் சுத்தும் கிரகத்தில் இதுவும் பயங்கரமாக நடக்கும் விஷயம்.
சோதனைக் கூடத்தில் மூன்று வகையான ரியாக்ஷன் கொடுக்கும் சாதா வாயுக்களைப் பெரிய குடுவையில் ஊற்றி மூடி வைத்தால் என்ன ஆகும். மூன்று கலந்து இரசாயன மாற்றம் ஏற்பட்டுப் புகைக் கக்கிக் குடுவை முழுவதும் புகைச் சுத்தும். இதே மாதிரிதான் ரெட் ஸ்பாட் உள்ளும் வரிகளிலும் நடக்கிறது. இரண்டு பூமி அளவு குடுவைக்குள் இது நிகழ்கிறது. ஹைட்ரஜன், மீதேன்,அம்மோனியா வாயுக்கள் கிரகத்தின் கீழ் லேயரில் உள்ளது. அங்கு 40000 ஃபாரன்ஹீட் உஷ்ணம் இருக்கும்.
இந்தக் கிரகத்தைச் சில தொலை நோக்கிகள் சுற்றிச் சுற்றி வந்து படம் எடுத்து நாசாவிற்கு அனுப்புகின்றன. ஆராய்ச்சியும் தொடர்ந்து நடக்கிறது.
சூடிக் கொடுத்த சுடர்கொடி குறிப்பிட்ட வியாழன்
திருப்பாவையில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று விடிகாலையைக் குறிப்பிடும் ஆண்டாள் வரிகள் கொண்ட 13-ஆவது பாடல் ‘புள்ளின்வாய் கீண்டானை பொல்ல அரக்கனைப்’ பாடல்.
நான் எங்கே இருக்கிறேன்?

என்னோட சைஸ்

தி ரெட் ஸ்பாட் & புயல்