![Jhansi Rani](https://vasagasalai.com/wp-content/uploads/2019/07/IMG_20190606_021133-780x405.jpg)
என் கிறங்கிய கண்களில்
கோடி கோடி நட்சத்திரப்பரல்கள் தேகமெங்கும் பூத்துக்கிடக்கும்
சூரிய சந்திரக்கிரணங்கள்
உள்ள எரிமலைகள் மெல்ல உமிழும் காதற்காம லாவாக்கள்
உறைந்து கிடந்த காலவெளியில்
பிறந்தது நமக்கான
ஒற்றைப் பிரபஞ்சம்
நீ குனிந்தணைத்து
எனை முத்தமிட்ட அந்த
Big bang க்ஷணம்.