![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/06/ramki-780x405.jpg)
எங்க வீட்டுத் தோட்டம்
அழகு கொஞ்சும் தோட்டம்.
பச்சை வண்ணத் தோட்டம்
உள்ளமினிக்கும் தோட்டம்
நாங்க ஆனந்தமாய் ஆடி மகிழும் தோட்டம்
தின்னத் தின்ன, திகட்டா கனிகள் பல தரும் கனிவான தோட்டம்
வண்ண வண்ண மலர்கள் அழகாய் பூத்துக் குலுங்குமாம்
வண்டு வந்து ஆசையாய் தேனை ருசிக்குமாம்
அதோ பாரு அதோ பாரு
தென்னை மரத்துல அணிலு போகுதாம்
இதோ பாரு இதோ பாரு
மா மரத்துல குயிலு கூவுதாம்
காகம் வந்து தினம் ராகம் பாடுமாம்
கிளிகள் வந்து கொஞ்சிப் பேசுமாம்
ஓசையாவும் இங்கு இசையாகுமாம்
எங்கள் மனம் லயித்து போகுமாம்
பறவைகள் கூடுகள் கட்டி இங்கு வசிக்குமாம்
பல உயிர்கள் கூடி மகிழ்ச்சியுடன்
இங்கு வாழுமாம்
பட்டாம் பூச்சி, தட்டான் பூச்சி நாங்க கண்டு மகிழ்வோம்
பாசமுடன் நாளும் செடிகளுக்கு நாங்க நீர்ப் பாய்ச்சுவோம்
எங்க வீட்டுத் தோட்டம்
அழகு கொஞ்சும் தோட்டம்.
பச்சை வண்ணத் தோட்டம்
உள்ளமினிக்கும் தோட்டம்…