கட்டுரைகள்

‘The Road Home’ சீன திரைப்படம் குறித்த அனுபவம் – முரளி ராமகிருஷ்ணன்

 

சீன திரையுலகில் இயக்குநர் Yimou Zhang ன் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.NOT ONE LESS,RAISE THE RED LATERN போன்ற அதிஉன்னதமான பல படங்களை அவர் அளித்திருந்தாலும்,இந்த காதல் காவியம் சீனாவில் மட்டுமல்லாது உலக அரங்கிலும் சிறந்த காதல் படமாக,ஒரு FEEL GOOD திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தன் தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு கிராமத்திற்கு செல்லும் மகனின் VOICE OVER ல் படம் தொடங்குகிறது.தான் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு முதல் ஆசிரியராக வரும் தன் தந்தையைப்  பற்றி தன் தாய் கூறிய செய்திகள் FLASHBACK ல் வண்ணமயமாக திரையில் ஒளிர்கின்றது.

கண்டதும் காதல் இருவருக்கும் பூத்தாலும்,இங்கே காட்சிகள் கதாநாயகியின் பார்வையிலிருந்தே சொல்லப்படுகிறது. ‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்’ என்ற வரிகளுக்கு ஏற்ப நாயகனைக் காண்பதற்கு நாயகி எடுக்கும் சின்னச் சின்ன ப்ரயத்தனங்களை திரையில் ஓவியமாக நம் கண்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.படத்தின் பின்னணி இசை பெரும் பக்கபலம்.

ஆசிரியப் பணிக்காக வந்திருப்பதால் ஒவ்வொரு நாளும் கிராம மக்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்து நாயகனுக்கு உணவளிக்கின்றனர். தனது வீட்டிற்கு வரும் நாளுக்காக காத்திருந்து மிகச்சிறப்பாக காதலுடன் நாயகி உணவு தயாரிப்பது அழகு.சமூக ஏற்றத்தாழ்வு,காதல் திருமணம் என அப்பொழுது பரவலாக இல்லாத விஷயங்களைப் பற்றிக் கூறி இருந்தாலும் இத்திரைப்படத்தில் அதற்குண்டான காட்சிகள் வாயிலாகவோ இல்லை, வசனங்கள் மூலமாகவோ விரிவாகக் காட்டாமல் சலசலப்பில்லாமல் செல்லும் நீரோடை போல இப்படத்தை இயக்குநர் எடுத்திருப்பதால்தான் இன்றுவரை எல்லாராலும் கொண்டாடப்டக்கூடிய படமாக இது இருக்கிறது.

தங்களது காதல் பயணத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் அந்த நகர சாலை வழியாக தன் கணவனின் இறுதி ஊர்வலம் மக்களால் கொண்டுவரப்பட வேண்டும் எனும் தாயின் விருப்பத்தை கொட்டும் பனிக்காலத்திலும் நிறைவேற்றுகிறான் மகன்.அவரிடம் பயின்ற மாணவர்கள் பெரும்பாலானவர்கள் பல ஊர்களிலிருந்தும் தம் ஆசானுக்காக இறுதி அஞ்சலி செலுத்த தேடி வருவது அந்நாயகனின் கருணை மனப்பான்மையை உணர்த்த வைக்கப்பட்ட அழகானதொரு காட்சி.அன்பை மையப்படுத்தி மனதை வருடும் ஓர் எளிய அழகிய படமாக இதனை நமக்கு படைத்தளித்திருக்கிறார் இயக்குநர்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. வாவ் என்ன அழகான வர்ணனைகள் எவ்வளவு அழகான ஒரு திரைப்படம் திரு முரளி ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தில் அந்த திரைப்படத்தை வாசிக்கும் பொழுது அதை இப்பொழுதே தேடிச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகியது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button