இணைய இதழ் 116
-
Aug- 2025 -23 August
அகிலாக்கா – பிறைநுதல்
புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அவனுக்கு. மணி மதியம் மூன்றரை இருக்குமா? ஏனோ அவனுக்கு பசியே இல்லாததுபோல் ஆயாசமாக இருந்தது. மண்டபத்தின் செலவுக் கணக்குகளைப்பார்த்து மீதிப்பணத்தையும் கொடுத்து கணக்கை முடித்துவிட்டு வெளியில் வந்தான். கொஞ்சம் முன்புதான் மீதமிருந்த உணவுப் பதார்த்தங்களையும் மளிகை சாமான்களையும்…
மேலும் வாசிக்க -
22 August
முன் தீர்மானங்களைக் கலைக்கும் ‘தீர்மானம்’ – தயாஜி
முக்கியம். அதுவே, ஆம் அதுதான், அந்தச் சம்பவம் நடந்துவிட்டது எனச் சொல்லிவிட்டு, அது எப்படி நடந்தது தெரியுமா என அதிகப்படியாகச் சொல்ல ஆரம்பிக்கும் போது வாசகர்களிடம் தோன்றிய பதைபதைப்பு மாறி ஒரு பத்திரிகை செய்தியை வாசிக்கின்ற மனநிலைக்கு மாறிவிடுகிறது. இந்தக் கதையைச்…
மேலும் வாசிக்க -
22 August
பெர்சு – ரவிஷங்கர்
பெர்சு உள்ளார ரெட் ஸ்பாட்………! சூரியனிலிருந்து ஐந்தாவது பிரம்மாண்ட கிரகம் ஜுபிடர் (வியாழன்). இதன் உள்ளே 1300 பூமிகளை அடக்கிப் பேக் செய்யலாம். அவ்ளோ பெர்சு. பூமியில் இருந்து 92,12,00,000 கிமீ தூரத்தில் உள்ளது. பூமிக்குச் சில விதங்களில் செக்யூரிட்டி மாதிரி.…
மேலும் வாசிக்க -
22 August
‘ஒரு காலனியில் ஒரு ராணி’ – குறுநாவல் வாசிப்பனுபவம் – கார்த்திக் வாசன்
புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படமும் என்னை மிகவும் வசீகரித்தது. ராஜா ராணி என்றால் அரண்மனையில்தானே இருப்பார்கள் ஆனால் இந்த புத்தகத்தின் தலைப்பான “ஒரு காலனியில் ஒரு ராணி “என்பது காலனியில் ராணியா…! என்ற ஆச்சரியத்தையும் அதை அறிந்து கொள்வதையும் என்னுள் தூண்டியது.…
மேலும் வாசிக்க -
22 August
கருணையின் தத்துவம் : சித்தாந்தன் கவிதையை முன்வைத்து- ஜெயபால் பழனியாண்டி
கவிதைகள் ஊற்றெடுப்பதற்கு காரணம் தேவையில்லை. எங்கிருந்து வேண்டுமானும் ஒரு கவிதை பிறந்துவிடலாம். ஆனால், சில கவிதைகள் தன் பிறப்பைத் தீர்மானித்துக் கொண்டே பிறக்கின்றன. தான் இந்த உலகிற்கு சொல்ல நினைப்பது என்ன என்பதை முடிவு செய்து கொண்டே அவை இந்த உலகத்தில்…
மேலும் வாசிக்க -
22 August
தமிழின் தடம் தேடி – அரிகரசின்னா
“என் சரித்திரம்” என்ற உ.வே. சாமிநாத ஐயரின் சுய சரிதை புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரை, சரியாகத் தூங்கவே இல்லை. இது எப்போதும் நிகழ்வதுதான் என்றாலும், இந்த முறை இன்னும் மோசமாக மாறியது. அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின்பும் கூட…
மேலும் வாசிக்க -
22 August
ஷினோலா கவிதைகள்
மெல்லிய அதிர்வு வழக்கத்தை விடபாட்டியின் தும்மல் சத்தம்அதிகமாகவே கேட்டது தாத்தா புரட்டும்செய்தித்தாளில்பெரியதாய் சலசலப்பு நடந்துதான்சென்றார் அப்பாஎன்றும் இல்லாத அதிர்வு அம்மா திட்டியதுஅன்றுதான்என் காதை கூராய்க் கீறியது தம்பி உருட்டும்சின்னச் சின்ன பொருளும்திரும்பிப் பார்க்க வைத்தது இதுவரை கவனித்ததில்லைஅக்காவின் கொலுசில்தவழ்ந்தாடிய இசையை இது…
மேலும் வாசிக்க -
22 August
விக்னேஷ் குமார் கவிதைகள்
பால் பல் முப்பது வயதைத் தாண்டியும் விழாமல்குழந்தைப் பருவத்தின் நடுகல்லென நின்று கொண்டிருந்ததுகடவாயின் இறுதியில்மஞ்சளில் பூத்த பூஞ்சையின் நிறத்தேஒற்றைப் பால் பல் ஒற்றைப் பல் ஞானக் குறியீடெனஅம்மாவும் அப்பாவும் அப்படியே விட்டுவிட்டார்கள்எனக்கு மட்டும் ஞானம் அதிகமெனஎல்லோரும் சொல்வதுமுண்டுஎனக்கும் உண்டு முப்பத்து மூன்றிற்கும்முப்பத்து…
மேலும் வாசிக்க -
22 August
பூர்ணா கவிதைகள்
காதல் யாதெனில் மழையில் நனைந்ததைசிலாகித்துச் சொன்னாய். உன்னில் தொப்பை, தொப்பையாக நனைந்த மழைசளிப்பிடித்துக் கிடந்ததை யாரிடம் போய் சொல்லியிருக்கும்? வெயிலடித்தபடியே மழை பெய்கிறதுஎதை நனைத்து,எதைக் காய வைப்பதற்காகவாயிருக்கும்? உழவன் மழையைப் பார்பதைப் போல்தான்உனைப் பார்க்கிறேன் இப்போதும் விதைநெல் போல் சேமித்துள்ளேன்நீ தூவிச்சென்ற…
மேலும் வாசிக்க -
22 August
ப.மதியழகன் கவிதைகள்
நீலம் எனது விடியல்கள்வேதனை அளிக்கக்கூடியவைநிரந்தரமின்மையின் அவலம்தெரிய வருகிறதுஒவ்வொரு நொடியிலும்உரையாடலை எங்கு ஆரம்பிப்பதுஎங்கு முடிப்பது என்றுதெரியவில்லை எனக்குஉங்கள் கருணையைகண்ணீரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்மறக்க வேண்டிய கடந்தகாலத்தைஒருநாளும் நினைவுபடுத்தாதீர்கள்விடியும் வரைஇதமாகத்தான் இருந்ததுஉனது மடியில்தலை சாய்த்திருந்ததுஒவ்வொரு இழப்பும்நிரந்தரமின்மையின் அடையாளத்தைஎனக்கு உணர்த்திக்கொண்டேயுள்ளதுஇருண்ட வீட்டில்மின்மினியின் வெளிச்சத்தைக்கூட என்னால் காண முடியவில்லைதோல்விகளுக்கும்,…
மேலும் வாசிக்க