கவிதைகள்

  • Jul- 2020 -
    3 July
    S .Vijayakumar

    கவிதைகள் – சோ.விஜயக்குமார்

    கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மாடோ, ஆடோ, யாதாயினும் வெட்டும்போது அதன் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மதம் கொண்ட யானையோ, மதில் அமரும் பூனையோ எதுவாயினும் மின்னும் அவற்றின் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! நிலவோ,விளக்கோ ஒளிர்வதை அடர்ந்த இருளின்…

    மேலும் வாசிக்க
  • 3 July
    Souvi

    கவிதைகள் – சௌவி

    அடையாளமற்ற நிழல் இன்று என் நிழலை நான் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன் நிழல் தலை வலிக்கிறதென்று சொன்னதால் இரண்டு பேருந்து நிலையங்களில் காத்திருந்து மூன்று பேருந்துகள் மாறிப் பயணித்து அலுவலகம் வந்தாயிற்று பயணிக்கையிலோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கையிலோ யாரும் என்னிடம்…

    மேலும் வாசிக்க
  • 3 July
    Primya

    கவிதைகள் – ப்ரிம்யா

    அவளும் அருவியும்! அவனுக்கு அந்த அருவியின் படம் மிகவும் பிடித்திருந்தது…. அவனுக்குப் பிடித்ததால் அவளுக்கும் பிடித்தது… அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் வாகான சுவற்றில் அருவியை வழிய விட்டார்கள்… இரண்டொரு நாளில் படுக்கையறைக்கு இடம் பெயர்ந்தது அருவி.. பின்னர் ஓர் நாள் பார்த்து…

    மேலும் வாசிக்க
  • 3 July
    Ra.Kaviyarasu

    கவிதைகள் – இரா.கவியரசு

    யாரும் பார்க்காத சொல் அவிழ்த்தெறிய முடியாமல் சுற்றிச் சுழல்கிறது இரவாடை நீண்ட கொடியென பறக்கும் நெடுஞ்சாலைகள் தோள்களைப் புதைக்கின்றன உதறிவிட்டுப் பறக்க நினைக்கிறேன் முடிவற்ற பழைய ஒளியில் எனக்கானதை மிகப்புதிதாக வாங்க வேண்டும் எலும்புகளில் கனக்கும் மைல் கற்கள் புடைத்து உடையும்…

    மேலும் வாசிக்க
  • 3 July
    A.Nasbulla

    கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்

    எனது கனவுகளுக்குள் வருவதற்கும் போவதற்குமாய் பாதைகள் இருக்கின்றன பேசிப்பழக விருப்பமானவர்கள் தங்கள் கவிதைகளின் சிறகுகளில் ஏறியமர்ந்து வாருங்கள் பேசலாம் பழகலாம் மிடறு மிடறாய் கவிதை அருந்தலாம் வாருங்கள் காற்றின் அசைவில் கனவின் கதவு திறந்து கிடக்கிறது காற்றின் கைகள் தாழ்ப்பாள் இடுவதற்கு…

    மேலும் வாசிக்க
  • 3 July
    Pa.Madhiyazhagan

    கவிதைகள் – ப.மதியழகன்

    காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…

    மேலும் வாசிக்க
  • 3 July
    Ambikavarshini

    கவிதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி

    நங்கென்று விழுவது…! ஒரு துள்ளு துள்ளி உடல் மொத்தமும் ஆடியமர்கிறான் நங்கென்று விழுவது கல்லோ கடப்பாரையோ மாடியில் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் பில்லர்களை… •••• கதவு திறக்கிற போதெல்லாம் ஓடிவிடுகிறது கட்டுக்குள் நிற்பதில்லையென ஊர் வாய் விழுகிறது உடல் முழுக்க சொறிந்தும் உதிரவில்லை…

    மேலும் வாசிக்க
  • Jun- 2020 -
    22 June

    கவிதைகள்- முத்துராசா குமார்

    சிகிச்சைகள்  குழந்தைகளின் உடைந்த கண்ணாடி வளையல்களை வண்ண மீன் குஞ்சுகளென பாலீத்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் எனது மண்டையோடு பனையோலையால் முடையப்பட்ட பொட்டியாக இருந்தது. மண்டையைத் திறந்த கையுறை மருத்துவர் மரத்தாலான விளையாட்டுச் சாமான்களை பொட்டிக்குள்ளிருந்து…

    மேலும் வாசிக்க
  • 21 June

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    என் கவிதை எனது கவிதையின் கரு அவளிடமே உள்ளது. அவளை உற்று கவனிப்பதே எனது கவிதைக்கான அனுபவம். அவளிடம் நான் கேட்டும் கிடைக்காத பதில்கள், தருணங்களே எனது கவிதைக்கான கற்பனை. எனது கவிதைக்கான களம் வேறு யாரிடமும் இல்லை; அது அவளிடம்…

    மேலும் வாசிக்க
  • 21 June

    கவிதைகள்- கொற்கை அ.ஜூடின்

    i) கை உடைந்த தலை கிழிந்த பொம்மையை பத்திரமாய் வைத்திருக்கிறான் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட மனநோயாளி ********** ii) காலப்பனையில் காவோலையாய் சரசரத்து புலம்புகிறது என் கடந்தகாலம். பச்சை வெளிறி காற்று கிழித்து நைந்து போயிருக்கிறது நிகழ்காலம். சுற்றிலும் இருட்டில் நீர் தேடி…

    மேலும் வாசிக்க
Back to top button