சிறுகதைகள்
-
Jan- 2025 -3 January
ஒரு கபூரின் பெருநாள் தொழுகை – க. மூர்த்தி
பாத்திமா வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் புளியமரத்தில் காக்கைகள் எப்பொழுதும் கரைந்துகொண்டே இருக்கும். காக்கைகளின் சத்தம் அவளுக்கு பெருநாள் தொழுகையின் போது தர்காவில் இருந்து தொழுகைக்காக பாங்கிற்கு அழைப்பதைப்போலத்தான். அவற்றின் சத்தம் அதிகாலையில் தூக்கத்தினை கலைப்பதைப் போல அவளுக்கு ஒரு நாளும் இருந்ததில்லை.…
மேலும் வாசிக்க -
3 January
காலங்களில் ஒரு வகை – லட்சுமிஹர்
தன் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டு என்னை அழைக்கும் அந்த ஆமைக்கு ‘வீட்டைப் பூட்டி விட்டு வருகிறேன்’ என்று சொல்வது எவ்வளவு பெரிய கேளிக்கையாக இருக்கும்? அதன் அழைப்பு இதுவரை வாடிக்கையாகவே இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் அதன் நடைக்குப் பழக்கப்பட்டு விட்டேன். அது…
மேலும் வாசிக்க -
3 January
ஆசையே அலை போலே – சின்னுசாமி சந்திரசேகரன்
பூனை போல் அறைக்குள் நுழைந்த தன் இளைய மகன் கருணாகரனைப் பார்த்துக் கேட்டார் சிதம்பரம், ‘என்னப்பா… ஒரு வாரமா நீ இருக்கற இடமே தெரியல… நேரமே ஆபீசுக்குப் போயிடறே, வீட்டுக்கு லேட்டா வர்றே.. ஏதாவது உன் தாத்தா மாதிரி இரண்டாவது வீடு…
மேலும் வாசிக்க -
3 January
அகம் – அகரன்
கூடாரத்திற்குள் நுழைந்த ஓர் ஒட்டகமென இருளை கொஞ்சம் கொஞ்சமாய் விரட்டி தன் ஆதிக்கத்தை நீட்டித்தது காலைக் கதிரவனின் வெளிச்சக் கரங்கள். வழமையான சலசலப்புச் சத்தங்களுடன் விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை. ஐந்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட் என்பதால் ஒரு பக்கம்…
மேலும் வாசிக்க -
3 January
பொம்மலாட்ட மனிதர்கள் – நிலா பிரகாஷ்
பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு கடந்து போகும் மனிதர்களை வாசித்துக் கொண்டு இருந்தேன். இன்று கதையை எழுதி முடித்தே ஆக வேண்டும்..!! கதையின் தலைப்பை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு இன்று ஒரு நாளில் எழுதி முடித்து விட வேண்டும் என்ற…
மேலும் வாசிக்க -
3 January
பெருங்காற்றின் தவம் – காந்தி முருகன்
அவளுக்கான அறை உருவாக்கப்பட்டுப் பெயர் அட்டைத் தயாராகி விட்டது. இனி அவள் தனது பயணத்தை அங்குத்தான் தொடர வேண்டும். புதிய தோற்றம்; புதிய சூழல்; புதிய மனிதர்கள். இந்தப் பயணமானது எத்தனை மணி நேரத்திற்கென்று என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. மணிகள்…
மேலும் வாசிக்க -
3 January
பயணிகள் கவனிக்கவும் – ஜெயகுமார்
ஆஸ்திரேலியா பயணத்திற்காக பரபரப்புடன் அனைத்து பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் பாக்கிங் செய்து கொண்டிருந்தாள் கீதா. அதனால் அவள் மிகப்பெரிய மன உளைச்சல் அடையப்போகிறாள் என்பதை அறியாமல். ஆஸ்திரேலியாவிற்கு இது அவளது மூன்றாவது பயணம் என்றாலும் ஆசைமகனுக்கும் மருமகளுக்கும் பேரனுக்கும் அவள் அன்போடு…
மேலும் வாசிக்க -
3 January
மாத்தி யோசி – கமலா முரளி
நித்யா ஸ்கூட்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு தன் அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியில் வந்தாள். சானடோரியம் ஸ்டெஷனில் 7.30 ட்ரெயினைப் பிடிக்க வேண்டும். கடிகாரம் ஏழு ஒன்பது என்றது. அவள் இருக்கும் சிட்லபாக்கத்தில் இருந்து ஐந்து நிமிடத்தில் போய்விடுவாள். பெட்ரொல் அளவு குறைவாக…
மேலும் வாசிக்க -
Dec- 2024 -19 December
வெள்ளம் வந்தது! – ஷைலஜா
”விழுப்புரம் போய்விட்டு மதியமே திரும்பி வருவதாகச் சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும் காணோம். மணி மூணாகப் போகிறதே” – சுவர் கடிகாரத்தைப்பார்த்தபடி மாலினி பயத்துடன் முணுமுணுத்தாள்.. வெளியே ‘ஹோ’ என்று மழை! அதன் ஆரம்ப கட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவு …
மேலும் வாசிக்க -
19 December
முப்பரிமாணம் – அன்பாதவன்
பரிமாணம் ஒண்னு பெருங்கனவுகள் நிறைந்த தந்தை அவர்! தன் மகனைப் பற்றியும், மகளைக் குறித்தும் உலகை விடப் பெரிய கனவுகள் அவருக்கிருந்தன. அதில் ஒன்றுதான் சீமந்த புத்திரன், சின்ன வயதிலேயே இரு சக்கர வாகனம் கற்றுக்கொள்வது இத்தனைக்கும் மகளுக்கு வயது…
மேலும் வாசிக்க