சிறுகதைகள்
-
Sep- 2023 -17 September
பழைய கணக்கு – சரத்
சுனிலுக்குக் கண்கள் இருண்டன. கைகள் நடுங்கியது. கால்கள் தளர்ந்து போய் இருந்தன. வியர்வையால் உடலெல்லாம் ஈரம். ஆஹா! அந்த இலை… இப்பவே வேண்டும்! இங்கேயே! உடனுக்குடன்! அதைக் காய வைத்து, பொடியாக்கி, பீடியோடு சேர்த்துப் புகைத்து…! வேண்டும். உடனே! இல்லையெனில்? செத்து…
மேலும் வாசிக்க -
2 September
திட்டம் எண் 2.0 – தயாஜி
இப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்ச இரப்பர்…
மேலும் வாசிக்க -
2 September
பெருநகர் கனவு – காந்தி முருகன்
தன்னந்தனியாக இந்த இடத்தில் என்னை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன்? பிரமாண்டமான மாளிகை போல இருக்கிறது அவ்விடம். கண்ணைக் கவரும் விளக்குகள். இருவர் படுக்கும் மெத்தை. வெள்ளை நிறத்திலான விரிப்பு. சுவரெங்கும் ஓவியங்கள்.…
மேலும் வாசிக்க -
2 September
ஆனந்தியின் இரண்டு கோடுகள் – கார்த்திக் பிரகாசம்
ஆரண்டு நாட்களாகவே ஆனந்திக்கு மனம் கெடையாய் கிடந்து துடித்தது. ஒவ்வொரு நொடியும் தோளில் பாறாங்கல்லை சுமப்பது போல் கனமாய் நகர்ந்தன. வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் முழுவதும் படபடப்பு. மூன்றாம் நாள் தள்ளிப் போகும் போதே கிலி பிடித்திருந்தது.…
மேலும் வாசிக்க -
Aug- 2023 -16 August
ஒரு புளிய மரமும் ஒரு பிள்ளையாரும் – முத்து ஜெயா
எனக்கு ஒரு பிள்ளையாரைத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் பிள்ளையாரில் தும்பிக்கை இருக்கும். சிறுசு, பெரிசாக தொப்பை கூட இருக்கும். ஆனால், என் பிள்ளையாரில் அது பிள்ளையார் என்று நம்பும்படியாக எதுவும் இல்லை. கல் தூணில் குழி வெட்டி எண்ணெய்…
மேலும் வாசிக்க -
16 August
அவன் பெயர் என்ன? – வசந்தி முனீஸ்
“அத்த ரேணுவ எங்க? ஏதோ பிரச்சினைன்னு எங்க அம்மா சொன்னா! “ என்று ரேணுகா தேவியின் அம்மாவிடம் கேட்டாள் ரேணுவின் தோழியான எதிர்வீட்டு கோகிலா. “ஆமாட்டீ…மாப்புள வூட்டுலருந்து இன்னைக்கு அதப்பத்தி பஞ்சாயத்துப் பேசத்தான் அவுங்க அம்மையும் அப்பனும் ஊர் பெரியவங்கள கூட்டிட்டு…
மேலும் வாசிக்க -
16 August
Chat.. Boot…3 – தேஜூ சிவன்
டிங். நோடிபிகேஷனின் மணிச் சத்தம். ப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட். த்ரிஷா அவசரமாக அவள் புரொஃபைல் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே ராபர்ட் ஃபிராஸ்ட். The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -31 July
ஓரவஞ்சனை – ஆர்னிகா நாசர்
அப்துல் சுக்கூர் வீட்டிலுள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். வயது 40. சம்மர்கிராப்பிய தலை. மீசை இல்லாத மேலுதடு. ட்ரிம் செய்யப்பட்ட தாடி. சுருமா ஈஷிய கண்கள். கைகால் நகங்களை கத்தரித்து நகாசு பண்ணியிருந்தார். இரு காதோரம் நரை பூத்திருந்தது. சுக்கூர்…
மேலும் வாசிக்க -
31 July
வந்தட்டி – ரக்ஷன் கிருத்திக்
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஓரிரு பரிட்சைகள் மட்டுமே மீதமிருந்தது. அணைக்கட்டுகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் குளம் இன்னுமே நிரம்பிய நிலையிலதான் இருந்தது. இந்த கோடை விடுமுறை முழுவதையும் குளியல் போட்டே கழித்துவிட வேண்டியதுதான்…
மேலும் வாசிக்க -
31 July
ரிமோட் – இமாம் அத்னான்
மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். – எபேசியர் (5:22) ‘ஹேய் டார்லிங்க், எனக்கொரு டீ’ எனப் படுக்கை அறைக்குள் இருந்து அவனின் குரல் பாய்ந்து வந்தது. இது இரண்டாவது முறை. முன்னறையில் டீவி ரிமோட்டைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு அவன்…
மேலும் வாசிக்க