சிறுகதைகள்
-
Jan- 2023 -16 January
பெரிய நாத்தி – பாஸ்கர் ஆறுமுகம்
சக்கராப்பம் தின்னும் போதெல்லாம், “பப்அ… ப்பா.. ப்பா…. ப்பா. பாப்டு….” என்று வாய் கொள்ளா வாஞ்சையுடன் அழைக்கும் ஊமை அத்தை ஏனோ நினைவில் வந்துவிடுகிறாள் அல்லது ஊமை அத்தையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் சுட்டுப் போடுற சக்கராப்பத்தின் தித்திப்பு அடித்தொண்டையில்…
மேலும் வாசிக்க -
16 January
மகா நடிகன் – உஷாதீபன்
ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர்…
மேலும் வாசிக்க -
1 January
ஜி.பி திரையரங்கம் – மிதுன் கௌசிக்
-நன்றி – ‘ஆருயிர் அண்ணன், ஆசான்’ சக்திவேல் .வி, ‘சினிமா மேஜிக்’ சிடி / டிவிடி கடை, வாழப்பாடி, சேலம். திரைப்படத்தின் துவக்கத்தில் முதல் ‘டைட்டில் கார்டில்’ இதைப் பார்த்தவுடனே அவனாகத்தான் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது. நான் திரையரங்கிற்குச் சென்று…
மேலும் வாசிக்க -
1 January
நர்மதா லாட்ஜ் – கா.ரபீக் ராஜா
அப்போதுதான் அந்தப் பெண் வந்தாள். வயது முப்பதுக்குள் இருக்கவே சாத்தியம். திருமணமாகியிருக்கிறதா என்று கால் விரல்களைப் பார்த்தேன். திருமணத்திற்கான அடையாளம் இருந்தது. காலின் நகங்கள் சீராக வெட்டப்பட்டு சேலை நிறத்திற்கு ஏற்ற சிகப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பின் கிடைக்கும் எல்லா…
மேலும் வாசிக்க -
1 January
ப்ளைண்ட் ஸ்பாட் – இந்திரா ராஜமாணிக்கம்
சாக்லேட்டை நீட்டியபடி இருக்கையை விட்டு எழுந்திரித்த கணேசமூர்த்திக்கு மிகச்சரியாக ஐம்பத்தி ஏழு வயது. நல்ல உயரம், தட்டினால் டிஜிட்டல் எண்களைக் காட்டும் கடிகாரத்தை மறைத்தவாறிருந்த முழுக்கை சட்டையும், டக் இன் செய்யப்பட்டதை மீறி கீழே விழுந்துவிடக்கூடிய தொப்பையையும் அணிந்திருந்தவன், மேலதிகாரிக்கான அத்தனை…
மேலும் வாசிக்க -
1 January
காந்தல் – அசோக்ராஜ்
செல்வா மச்சான் வந்திருக்கிறார் என்று உமா ஃபோனில் சொன்னதிலிருந்து எனக்கு வேலை ஓடவில்லை. அவர் இப்படி முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறார் என்றாலே ஏதாவது பண விவகாரமாகத்தான் இருக்கும். அடுத்தவர் சங்கடம் உணராத மனுஷன். இந்த மதிய நேரத்திற்கு வந்திருக்கிறார் எனில், சென்னையில் அதிகாலையிலேயே…
மேலும் வாசிக்க -
Dec- 2022 -16 December
வாள் – ஜார்ஜ் ஜோசப்
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும். ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். (நீதிமொழிகள் 18:8) கூகுள் மேப்பைப் பார்த்தபடி சென்றடைந்தோம். அதுபோலொரு கிராமத்தைக் கண்டு ரொம்ப காலம் ஆகியிருந்தது. வண்டியை விட்டிறங்கி கோயிலுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் போய் நின்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில்…
மேலும் வாசிக்க -
16 December
உடைப்பு – ந. சிவநேசன்
தொலைவிலிருக்கும் போதே ஓரளவு தெரிந்து விட்டிருந்தது அருகில் நெருங்க நெருங்க ஊர்ஜிதமானதில் மெலிதான அதிர்ச்சி பரவி, அவளது முந்தைய வாழ்வின் மீதான சலிப்புகளையும் மனக் குழப்பங்களையும் சற்று நேரம் ஒத்தி வைத்து, நிகழ் கணத்துக்குள் அவளை தாவச் சொல்லியது. பொட்டல் காட்டின்…
மேலும் வாசிக்க -
16 December
விக்டோரியா – வசந்தி முனீஸ்
ஊருக்கு வடக்கே கரை நிரம்ப கற்கண்டாய் இனிக்கும் மணிமுத்தாறு ஆற்றுத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயின் தென்புறம், பனை ஓலையால் கூரை வேய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில். வடபுறம் பனைமூட்டின் கீழ் வாழும் கோட்டிக்காரியே விக்டோரியா . இசக்கியம்மனின் செம்மண் பூடத்தைப்போல விக்டோரியாவும் நல்ல…
மேலும் வாசிக்க -
16 December
அவமானம் – பாஸ்கர் ஆறுமுகம்
“அப்போவ், அல்லோருக்கும் பரோட்டா வாங்கியாப்பா, திங்கணும் போல இருக்கு. ஆச ஆசயா வருதுப்பா, எத்தன நாளா கேக்குறேன், தாத்தா வேற ஊர்லேர்ந்து வந்துருக்காங்க, இப்பவாச்சும் வாங்கிக் கொடேன்”, சொல்லும் போதே உடைந்து அழுது விடுவது போல இருந்தது ஆறுமுகத்தின் முகம். “ஆமாப்பா,…
மேலும் வாசிக்க